’கார்த்திகை தீபம்’ சீரியலில் தாலியை வைத்து ஷாக் கொடுத்த ரம்யா!
Karthigai Deepam serial: தாலியை வைத்து ஷாக் கொடுத்த ரம்யா, ஜோசியர் வாக்கு பளிச்சிடுச்சா என தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமியை டிஸ்ஜார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வர ரம்யா பல்பு வாங்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, ரம்யாவுக்கு வெங்கையா போன் செய்து என்னம்மா நீங்க கார்த்திக்கிட்ட மாத்தி பொய் சொல்ல சொல்லிடீங்க, இதனால் எந்த பிரச்னையும் வராதா என்று பேசி கொண்டிருக்க ரம்யா அவனிடம் பேசி விட்டு திரும்பும் போது அங்கே மைதிலி நிற்க அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். மேலும் மைதிலி யாரிடம் பேசிட்டு இருந்த என்று கேள்வி கேட்க ஆபிஸ் கால் என்று சொல்லி சமாளித்து அங்கிருந்து எஸ்கேப் ஆகிறாள், அடுத்து அபிராமி தீபாவுடன் கோவிலுக்கு வந்து தாலியை கொடுத்து தனக்காக தீபா தாலியை கழட்டிய விஷயத்தை சொல்லி மறு தாலி கட்ட பூஜை செய்ய வேண்டும் என்று பேசுகிறாள். அய்யரும் மாமியாருக்கு தாலியை கழட்டுறதை எல்லாம் நான் பார்த்ததே இல்ல என்று தீபாவை பாராட்டுகிறார்.
மறுபக்கம் தர்மலிங்கம் தீபா ஜாதகத்தை கொடுத்து ஜோசியர் ஒருவரிடம் நேரம் எப்படி இருக்கு என்று கேட்க அவர் இந்த பொண்ணு கழுத்தில் இருந்து தாலி இறங்கினா அது திரும்பவும் ஏறவே ஏறாது என்று அதிர்ச்சி கொடுக்கிறார், தர்மலிங்க என்ன சாமி சொல்றீங்க என்று அதிர்ச்சியாக ஆமாம், நீங்க என்ன தான் முயற்சி செய்தாலும் இந்த பொண்ணு கழுத்தில் இறங்கிய தாலி திரும்பவும் ஏறாது. அப்படியே ஏறினா இவளோட மாமியார் உயிருக்கு ஆபத்து வரும் என்று அதிர வைக்கிறார்.
தாலி இல்லனாலும் இந்த பொண்ணோட வாழ்க்கை நல்லா தான் இருக்கும், அதை அப்படியே விட்டுடுங்க என்று சொல்ல தர்மலிங்கம் திரும்பவும் தாலி ஏறுவதை பார்க்கணும் என்று ஆசையை சொல்ல ஜோசியர் ஒரு தேதியை குறித்து கொடுத்து முயற்சி பண்ணி பாருங்க, தாலி ஏறலனா திரும்பவும் என்னை வந்து பாருங்க என்று சொல்கிறார். அடுத்து கோவிலில் இருந்து ஜவுளி கடைக்கு வரும் அபிராமி தீபாவுக்கு பட்டு புடவை கார்த்திக்கு பட்டு வேட்டி சட்டையை எடுக்கிறாள்.
இந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது அபிராமியும் தீபாவும் கோவிலில் நேராக ஜவுளி கடைக்கு வருகின்றனர், மறு தாலி கட்டுவதற்காக தீபாவுக்கு ஒரு பட்டுபுடவையையும் கார்த்திக்கு வேட்டி சட்டையையும் எடுத்து கொண்டு கிளம்பி வருகின்றனர். அடுத்த நாள் காலையில் கார்த்திக் தீபா கழுத்தில் தாலி கட்டுவதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தடப்புடலாக நடக்க தொடங்க தர்மலிங்கம் பதற்றத்துடனே இருக்கிறார்.
அபிராமி எடுத்து கொடுத்து பட்டு புடவை மற்றும் பட்டு வேட்டி சட்டையை அணிந்து கொண்டு ஜோடியா கிளே வருகின்றனர் கார்த்திக், தீபா. இந்த நேரத்தில் ரம்யா என்ட்ரி கொடுக்க அபிராமி உன் ப்ரண்ட் தானே போய் தீபாவை கூட்டிட்டு வா என்று அனுப்பி வைக்கிறாள். அதன் பிறகு ரம்யா தீபாவை மணமேடைக்கு அழைத்து வர அய்யர் மாலையை கொடுத்து இருவரையும் மாற்றி கொள்ள சொல்ல அதே போல் கார்த்திக் தீபாவுக்கு மாலை போட தீபா கார்த்திக் கழுத்தில் மாலையை போடுகிறாள்.
Also read… ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ ரிலீஸ் எப்போது? இணையத்தை கலக்கும் தகவல்
அய்யர் நல்ல முகூர்த்த நேரம் தான் தாலியை கட்டிடலாம் என்று சொல்ல தாலி காணாமல் போய் இருப்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். வீடு முழுக்க தாலியை தேடுகின்றனர், முகூர்த்த நேரம் முடிய போகும் நேரம் வரை தேடியும் தாலி கடைக்காமல் இருக்க அய்யர் இனிமே தாலி கிடைச்சாலும் கட்ட முடியாது, நல்ல நேரம் முடிந்து விட்டதாக அதிர்ச்சி கொடுக்கிறார்.
இதை தொடர்ந்து மைதிலி தாலி எங்க போச்சுனு எனக்கு தெரியும், இந்த ரம்யா கையில் தான் இருக்கு என்று சொல்ல அவளும் ஆமாம் தாலி என்கிட்ட தான் இருக்கு என்று ஷாக் கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.