’கார்த்திகை தீபம்’ சீரியலில் அதிர்ச்சி கொடுத்த அபிராமி!
Karthigai Deepam serial update: போக்கேவுடன் வந்து பில்டப் கொடுத்த ரம்யா, அதிர்ச்சி கொடுத்த அபிராமி, காலை வாரி விட்ட கார்த்திக் என தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான கார்த்திகை தீபம் சீரியலில் வீகென்ட் எபிசோட் அப்டேட்.
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் முதலில் ஸ்டேஷனுக்கு வரும் கார்த்திக் போலீசிடம் பேசி இளையராஜாவை வெளியே கொண்டு வர சேகர் என் மேடம் வருவாங்க என்று ஓவர் பில்டப்பாக கொடுக்க ரம்யா கார்த்தி இருப்பதை கவனிக்காமல் உள்ளே வந்து விடுகிறாள், கார்த்திக்கை பார்த்து அதிர்ச்சியாகும் அவள் சேகர் என்னுடைய பழைய தொழிலாளி என்று சொல்லி சமாளிக்கிறாள். சேகர் மற்றும் இளையராஜா என இருவரும் ஒரே மாதிரி கட்டைப்பையை கொண்டு வந்திருக்க இவருவம் பேக்கை மாற்றி எடுத்து செல்கின்றனர், சேகர் பையில் டோப்பா, ஒட்டு தாடி என சாமியார் வேடத்திற்கு பயன்படுத்திய பொருட்களாக இருக்கிறது. இளையராஜா கார்த்திக்குடன் காரில் வர பேக்கில் இருக்கும் பொருட்களை பார்த்து விடுவானோ என்ற பில்டப் எகிறுகிறது. மறுபக்கம் அபிராமியை பார்க்க வந்த பரமேஸ்வரி எதுக்கு எனக்கிட்ட சொல்லல என்று கேட்க கார்த்திக் தான் உங்களுக்கு தெரிய வேண்டாம், தெரிந்தால் வருத்தப்படுவீங்கன்னு சொன்னதாக சொல்கிறாள்.
அடுத்து டாக்டர் அபிராமியை டிஸ்ஜார்ஜ் செய்து கொள்ளலாம் என்று சொல்வதோடு அவங்களுக்கு அதிர்ச்சியான விஷயம் எதையும் சொல்ல கூடாது எனவும் வார்னிங் கொடுக்க கார்த்திக் என்கிட்ட சொன்ன இந்த விஷயத்தை வேற யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொல்கிறான். அபிராமிக்கு அதிர்ச்சியான விஷயங்கள் எதுவும் சொல்ல கூடாது என்று டாக்டர் சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, சேகர் ரம்யாவுக்கு போன் செய்து என்னுடைய பையை காணவில்லை அதுல தான் டோப்பா, தாடி என சாமியார் கெட்டப் பொருள் எல்லாத்தையும் வச்சு இருந்தேன் என்று சொல்கிறான், மேலும் அந்த பையை இளையராஜா மாற்றி எடுத்து போய் இருக்கலாம் என்று சொன்னதும் ரம்யா பேரதிர்ச்சி அடைகிறாள்.
உடனே அவள் இளையராஜா வீட்டிற்கு வந்து அவனுக்கே தெரியாமல் பேக்கை தேடி பார்க்க அது இல்லை என்று தெரிந்ததும் அவளது பயம் இன்னும் அதிகமாகிறது. அதனை தொடர்ந்து அபிராமியை டிஸ்ஜார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வர தயாராக ஆனந்த் அந்த விஷயத்தை ரம்யாவுக்கு சொல்ல போனை எடுக்க மீனாட்சி போனை வாங்கி விஷயத்தை சொல்கிறாள்.
இதனால் ரம்யா ஹாஸ்பிடலுக்கு ஓடி வர அங்கு அபிராமி இல்லை என்று தெரிந்ததும் கடுப்பாகி வீட்டிற்கு கிளம்பி வருகிறாள், இங்கே அபிராமிக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து செல்ல தயாராக இருக்க ரம்யா பொக்கேவை கொடுத்து நான் உங்களுக்காக பரிகாரம் செய்ததால் தான் நீங்க உயிர் பிழைத்தீங்க என்று சொல்கிறாள்.
Also read… மீண்டும் சொந்த வீட்டுக்கு வந்துருக்கேன்… ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகரின் வைரல் போஸ்ட்
ஆனால் அபிராமி அப்படியெல்லாம் இல்ல.. நான் கோமாவில் தீபா பாடிய பாட்டு என் காதில் கேட்டது என்று சொல்ல ரம்யா அது எப்படி உங்களுக்கு கேட்கும் என்று கேள்வி எழுப்ப அபிராமி அந்த பாட்டை பாடி காட்ட கார்த்திக் தீபா இதே பாட்டை தான் கோவிலில் பாடினா என்று சொல்கிறான். மேலும் இவங்க செய்தது பரிகாரமே இல்ல.. அந்த சாமியார் போலி சாமியார் என்ற உண்மையையும் உடைக்கிறான்.
அடுத்து தீபாவை அதே பாட்டை மீண்டும் பாட சொல்லி அதை கேட்டு ரசிக்கின்றனர், அபிராமி சொன்ன வார்த்தையால் எல்லாரும் தீபாவை நினைத்து சிலாகித்து பேச தொடங்குகின்றனர், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.