மலையாளத்தில் யோகிபாபு.. கலக்கலான ‘குருவாயூர் அம்பலநடையில்’ டீசர்
Guruvayoorambala Nadayil Teaser : குருவாயூர் அம்பலநடையில் பட டீசர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் நடிகர் யோகிபாபு நடித்துள்ளார்.
மலையாளத்தில் காமெடி ட்ராமா படமாக உருவாகியுள்ளது குருவாயூர் அம்பலநடையில். இப்படத்தில் நடிகர் யோகிபாபு, பிரித்திவிராஜ், நிகிலா விமல் , அனஸ்வர ராஜன் , பாசில் ஜோசப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டீசரே காமெடியாக இருப்பதாகவும், நல்ல பொழுதுபோக்கு படமாக இது இருக்குமென்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்