5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

GOAT Movie : விஜய் ’கோட்’ படம் கேரளாவில் செய்த சாதனை.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

ஏஜிஎஸ் நிறுவனத்தின் 25வது படமாக உருவாகியுள்ள தளபதி விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் நாளை செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் அதிகாலை 4:00 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்படுகின்றது. அது போலவே தெலுங்கானா மாநிலத்திலும் அதிகாலை காட்சிகள் திரையிடப்படுகின்றது. ஆந்திராவில் முதன் முதலாக அதிகாலை வெளியாகும் தமிழ் படம் என்ற பெருமையை விஜயின் கோட் படம் பெற்றுள்ளது.

GOAT Movie : விஜய் ’கோட்’ படம் கேரளாவில் செய்த சாதனை.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
‘கோட்’ படம்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Sep 2024 16:14 PM

கேரள மாநிலத்தில் அதிக ஸ்க்ரீன்களில் திரையிடப்படும் வேற்று மாநிலப்படம் எனும் சாதனையை படைத்தது விஜயின் ’கோட்’ படம். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான லியோ படம் சூப்பர் ஹிட் அடித்தது. அந்தப் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது வெங்கட் பிரபுவுடன் கூட்டணி வைத்துள்ளார். இந்தப் படத்தில் விஜயுடன் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாக்‌ஷி செளதரி, லைலா, வைபவ் , பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். எ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தைத் தயாரித்து வருகிறார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சென்னை, ரஷ்யா, திருவனந்தபுரம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் நாலை இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருப்பது குறிப்பிடத்தக்கது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. கடந்த சில நாட்களாக தி கோட் படத்துடைய புரமோஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தன. கோட் திரைப்படத்துக்காக சுமார் 400 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு இருப்பதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் 25வது படமாக உருவாகியுள்ள தளபதி விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் நாளை செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் அதிகாலை 4:00 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்படுகின்றது. அது போலவே தெலுங்கானா மாநிலத்திலும் அதிகாலை காட்சிகள் திரையிடப்படுகின்றது. ஆந்திராவில் முதன் முதலாக அதிகாலை வெளியாகும் தமிழ் படம் என்ற பெருமையை விஜயின் கோட் படம் பெற்றுள்ளது.

மற்ற மாநிலங்களில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடைத்த நிலையில் இன்னும் தமிழகத்தில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடைக்காமல் இருப்பது விஜய் ரசிகர்களிடையே அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோட் படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்படாததற்கு காரணமே விநியோகஸ்தர்கள் 700 ரூபாய் முதல 2000 ரூபாய் வரை டிக்கெட் விலை நிர்ணயிக்க வேண்டும் என்றும் அழுத்தம் கொடுத்ததுதான் தியேட்டர் ஓனர்கள் சிறப்புக் காட்சியை தவிர்க்க காரணம் என சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

Also read… 15 வயசு பையன் என்ன பாத்து அப்படி கேட்டான்… உர்ஃபி ஜாவித் போஸ்ட்

தமிழ்நாடு அரசு கோட் படத்துக்கு சிறப்பு காட்சிக்கான அனுமதியை வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் சில தகவல்கள் சினிமா வட்டாரங்களில் பரவி வருகின்றது.

நாளை படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் கேரளாவில் விஜயின் கோட் படம் புதிய சாதனையைப் படைத்துள்ளது. கேரளாவில் அந்த மாநில நடிகர்களுக்கு இருக்கும் அதே மாஸ் விஜய்க்கும் உண்டு. தமிழகத்தில் விஜய்க்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் உள்ளதோ அதே கூட்டம் கேரளாவிலும் உள்ளது. இந்த நிலையில் கேரளாவில் அதிக ஸ்க்ரீன்களில் திரையிடப்படும் வேற்று மாநிலப்படம் எனும் சாதனையை விஜயின் கோட் படம் பெற்றுள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Latest News