“ரஜினியுடன் நடித்தது எனக்கு கிடைத்த பாக்கியம்” வேட்டையன் திரைப்பட நடிகைகள் பேச்சு!
Vettaiyan Audio Release : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும், ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இத்திரைப்படத்தின் இசை வெளியீடு மற்றும் புரோமோஷன் பணிகள் களைக்கட்டத் துவங்கியுள்ளது. இந்நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும், ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இத்திரைப்படத்தின் இசை வெளியீடு மற்றும் புரோமோஷன் பணிகள் களைக்கட்டத் துவங்கியுள்ளது. இந்நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் நடிகர்கள் ரஜினிகாந்த், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா ரோகிணி மற்றும் அபிராமி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் மற்றும் இயக்குநர் ஞானவேல் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இத்திரைப்படத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்படப் பலர் நடித்துள்ளனர்.
வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா:
இப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்தில் கதைக்களமானது போலி என்கவுண்டருக்கு எதிரான கையாளப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் கல்விக் கொள்கைக்கு ஆதரவான பல கருத்துக்களும் இந்த படத்தில் முன் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படத்தில் ரஜினிகாந்த் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ள சூழலில் படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வேட்டையன் திரைப்படம், வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று 20 செப்டம்பர் அன்று சென்னையில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகைகள் மஞ்சு வாரியர் ,ரோகிணி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோர் கூறியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read: இந்த சிறுமி இப்போ மாஸ் நடிகை… யார் தெரியுமா?
மஞ்சு வாரியர் :
இந்த விழாவில் பேசிய நடிக மஞ்சு வாரியர், “என்னைப் பொறுத்த வரைக்கும் கனவிலும் நினைத்துக்கூடப் பார்க்காத ஒரு படம் அதுவும் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரிப்பில் அது மட்டுமில்லாமல் நடிகர் ரஜினியுடன் சேர்ந்து நடித்தது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பாக்கியம். அதுவும் மனசிலாயோ பாடலுக்கு எனக்கு இவ்வளவு வரவேற்பு இருக்கும் என நான் கனவிலும் கூட நினைக்கவில்லை. என்னுடைய ஆசை இந்த மாதிரி நல்ல திரைப்படங்களில் நடிப்பது தான். மக்களுக்க நல்ல கதைகளில் நடித்து என்னுடைய திறமையை வெளிக்காட்டவேண்டும்” என்று நடிகை மஞ்சு வாரியர் கூறியுள்ளார்.
நடிகை ரோகிணி :
விழாவில் பேசிய நடிகை ரோகிணி, ”இந்த திரைப்படம் நான் நடிகர் ரஜினியுடன் நடிக்கும் முதல் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் ரஜினியுடன் நடிப்பது எனக்குக் கிடைத்த ஒரு சந்தோஷமான தருணமாகும். அது மட்டுமில்லாமல் இந்தியாவே கர்வப்படக்கூடிய அளவிற்குத் திரைப்படத்தை உருவாக்கும் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் இப்படத்தில் ஒரு பகுதியாக நடிப்பது எனக்குக் கிடைத்த வரமாகும். நடிகர் ரஜினிகாந்த் மிகப் பெரிய ஸ்டார் . அவர் இந்த மாதிரி சமூகம் சார்ந்த திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து இந்தமாதிரி இயக்குநர்களுக்குக் கதைகளுக்கு முன்னுரிமை வழங்கி, கதைகளில் நடிப்பதால் மக்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கிறார் ரஜினி” என்று ரோகிணி கூறியுள்ளார்.
நடிகை அபிராமி:
“இந்த படத்தில் இரு மாபெரும் நடிகர்கள் உள்ளனர். இந்த படத்தில் நடிகர் ரஜினியோடு வழி தனி வழி தான். அது மட்டுமில்லாமல் இந்த படத்தின் இசைக்கு சூப்பர் ஸ்டார் அனிருத் தான். இந்த படத்தில் அவருடைய பாடல் எல்லாம் சூப்பர் ஹிட் தான். இந்த படத்தின் சூட்டிங் பிரேக்ல நான் நடிகர் ரஜினியைக் கேள்விகள் கேட்டு அவரை தொந்தரவு தான் செய்தேன். ஆனால் அதற்கு எதுவும் சொல்லாமல் எனக்கு பதிலை அளித்தார்” என்று கூறினார்.
Also Read: நிறைவடைந்தது ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு
நடிகை ரித்திகா :
”தமிழில் எனது முதல் திரைப்படமான இறுதிச் சுற்றுக்குப் பிறகு நான் ஏதாவது பெரிய திரைப்படத்தில் நடிக்க வேண்டும் நினைத்தேன். அதற்குப் பலனாக எனக்கு இந்த வேட்டையன் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. நான் படப்பிடிப்பபு பகுதியில் மிகவும் அமைதியாக இருப்பேன். என்ன நடக்கிறது என்று பார்ப்பேன். ஆனால் இப்போது உள்ள காலத்தில் அனைவரும் போன் மற்றும் இன்ஸ்டாகிராம் போலப் பல இணையதளங்களில் தனது நேரத்தைச் செலவிட்டு நேரத்தை வீண் செய்கின்றனர்” என இளைஞர்களுக்கு அட்வைஸ் கூறியுள்ளார் நடிகை ரித்திகா.