5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Today’s Cinema News: அஜித் மற்றும் விஜய் பட அப்டேட்கள்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள் – டாப் சினிமா செய்திகள்!

இன்றைய சினிமா செய்திகள்: நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் வெளியீட்டு தேதி முதல் விஜயின் தளபதி 69 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வரை இன்று செப்டம்பர் மாதம் 18-ம் தேதி சினிமாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து சில.

Today’s Cinema News: அஜித் மற்றும் விஜய் பட அப்டேட்கள்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள் – டாப் சினிமா செய்திகள்!
சினிமா செய்திகள்!
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 25 Sep 2024 09:14 AM

இன்றைய சினிமா செய்திகள்: நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் வெளியீட்டு தேதி முதல் விஜயின் தளபதி 69 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வரை இன்று செப்டம்பர் மாதம் 18-ம் தேதி சினிமாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து சில.

பழம்பெரும் நடிகை சி.ஐ.டி சகுந்தலா காலமானார்…

வயது மூப்பு காரணமாக பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவரது மறைவுக்கு நடிகர், நடிகைகள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தின் அரிசிபாளையத்தைச் சேர்ந்த சகுந்தலா சென்னையில் லலிதா, பத்மினி, ராகினி நடத்தி வந்த நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனமாடி வந்தார். அப்போது கிடைத்த அறிமுகங்களின் மூலம் திரையுலகில் நுழைந்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார். 1970ஆம் ஆண்டு ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான ’சிஐடி சங்கர்’ படத்தில் அறிமுகமானதால், அதன் பிறகு ‘சிஐடி’ சகுந்தலா என்று அழைக்கப்பட்டார். தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. இவருக்கு தற்போது 84 வயது. வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

டான்ஸ் மாஸ்டர் ஜானி படங்களில் பணியாற்ற தடை

பாலியல் புகாருக்கு உள்ளான திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டர், தெலுங்கு படங்களில் பணியாற்ற தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. 2009-ஆம் ஆண்டு முதல் தெலுங்கு படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி வருகிறார் ஜானி. இவர் நடிகர் தனுஷ் நடித்த மாரி – 2 படத்தில் வெளியான ரவுடி பேபி பாடல் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதேபோல் விஜயின் ரஞ்சிதமே, தீ தளபதி, ஜாலியோ ஜிம்கானா, ஹல மித்தி ஹபி, தமன்னாவின் காவாலா பாடல்களுக்கும் நடன இயக்குநராக இருந்தவர் ஜானி. திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற ‘மேகம் கருக்காதோ’ பாடலுக்காக தேசிய விருது பெற்றவர் நடன இயக்குநரான ஜானி மாஸ்டர். இவருடன் பணிப்புரிந்தபோது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 21 வயது இளம்பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளதன் காரணமாக தெலுங்கு படங்களில் ஜானி மாஸ்டர் பணியாற்ற தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

விமலின் ‘சார்’ பட ட்ரெய்லர் வெளியானது!

நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘சார்’ படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சார்’. இப்படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் முன்னதாக வெளியாகி கவனத்தைப் பெற்றது. கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் உருவாகி உள்ள ‘சார்’ படத்தின் டீசர் கடந்த ஜூன் மாதம் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றது. இந்தநிலையில் தற்போது இப்படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த ட்ரெய்லரைப் பார்க்கும் போது கல்வி மறுக்கப்படும் மக்களின் கல்விக்காக போராடும் நபராக சரவணனும் விமலும் நடித்துள்ளது தெரிகிறது. தற்போது இந்த ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகின்றது.

தளபதி 69 படத்தில் இணையும் பிரபல வில்லன்?

நடிகர் விஜய் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்த நிலையில் அவரது கடைசி படமான தளபதி 69 படத்துடன் அவர் நடிப்பதில் இருந்து விலக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் இந்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. நடிகர் விஜயின் இந்தப் படத்தை பிரபல இயக்குநர் எச். வினோத் இயக்க உள்ளார். இதனை உறுதி செய்யும் விதமாக கடந்த 14-ம் தேதி தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டது. அதில் படம் அடுத்த ஆண்டு அக்டோபரில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தளபதி – 69 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ பொங்கல் ரிலீஸ் உறுதி

லைகா நிறுவனம் தயாரிப்பில் ’விடாமுயற்சி’ மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித். இதில் ’விடாமுயற்சி’ படத்தில் ஒரே ஒரு பாடல் படப்பிடிப்பு மட்டுமே பாக்கியிருக்கிறது. ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் இருக்கிறது. இந்த நிலையில் ‘விடாமுயற்சி’ டிசம்பர் வெளியீடு என்றால் பொங்கலுக்கு ‘குட் பேட் அக்லி’ வெளியாக வாய்ப்பில்லை. மே 1-ம் தேதி அஜித்தின் பிறந்த நாளன்று வெளியிடுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், நேற்று (செப் 17) ‘குட் பேட் அக்லி’ இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பிறந்த நாள். அதற்காக படக்குழு வெளியிட்ட போஸ்டரில் பொங்கல் வெளியீட்டை உறுதி செய்திருக்கிறது. இது விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்யராஜ், பிரியா பவானி சங்கர் இணையும் திரில்லர் படம்!

ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் மற்றும் பத்மஜா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்  தயாரிப்பில், ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஃபைனான்ஸியல் திரில்லராக, பிரம்மாண்டமான பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “ஜீப்ரா”. இப்படம், வரும் 2024 அக்டோபர்  31 ஆம் தேதி பான் இந்திய வெளியீடாக,  தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம்மொழிகளில் வெளியாகிறது. தமிழில் முதல் ஓடிடி திரைப்படமான பெண்குயின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் மாறுபட்ட திரைக்கதையில் பரபரப்பான திரில்லர் திரைப்படமாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். தமிழிலிருந்து சத்யராஜ், தெலுங்கு சினிமாவில் இருந்து சத்யதேவ், கன்னடத்தைச் சேர்ந்த தனஞ்சயா என நட்சத்திர நடிகர்கள் இப்படத்திற்காகக் கைகோர்த்திருக்கின்றனர். இவர்களுடன், பிரபல நடிகர்களான பிரியா பவானி சங்கர், ஜெனிஃபர் பிசினாடோ, சுனில் வர்மா, சுரேஷ் மேனன் மற்றும் சத்யா அக்கலா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர்.

திரைத்துறையும் என்னை கைவிட்டு விட்டது – கங்கனா ரணாவத்

நடிகை கங்கனா ரணாவத் நடித்து தயாரித்துள்ள அரசியல் நாடகமான “எமர்ஜென்சி” திரைப்படம் செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியிடப்பட இருந்தது. ஆனால் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (சிபிஎஃப்சி) அதற்கு அனுமதி அளிக்கவில்லை. அந்தப் படத்தில் சீக்கியர்களை தவறாக சித்தரித்ததாக கூறி, படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை. “சினிமா தொழில்துறையைச் சேர்ந்த யாரும் எனக்கு ஆதரவாக முன்வரவில்லை. காங்கிரஸ் கட்சியில் இருந்து கூட யாருமே ஆதரவு தெரிவிக்கவில்லை. நான் முற்றிலும் தனிமையாக இருப்பதாக உணர்கிறேன்” என்று கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அப்டேட்

தனுஷ் இயக்கவிருக்கும் 4-வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் தனுஷ், அருண் விஜய் மற்றும் அசோக் செல்வன் முன்னணி கதாப்பாத்திரத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்தை Dawn Pictures என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் தனுஷ் நடிக்கும் 52வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News