5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Today’s Cinema News: வசூலை அள்ளும் பிரதர்..LCU வில் இணைந்த ராகவா லாரன்ஸ்.. டாப் சினிமா செய்திகள்!

இன்றைய சினிமா செய்திகள்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் LCU யுனிவர்ஸில் இணைந்த புது நடிகர் முதல் தீபாவளிக்கு வெளியாக உள்ள பிரதர் திரைப்படம் ப்ரீ புக்கிங் கலெக்ஷன் வரை அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி சினிமாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து சிலவற்றை காணலாம். LCU வில் இணைந்த ராகவா லாரன்ஸ், கங்குவா மற்றும் அமரன் திரைப்படத்தில் இருந்து வெளியான பாடல்கள் உள்ளிட்ட பல தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளது.

Today’s Cinema News: வசூலை அள்ளும் பிரதர்..LCU வில் இணைந்த ராகவா லாரன்ஸ்.. டாப் சினிமா செய்திகள்!
டாப் சினிமா செய்திகள்
barath-murugantv9-com
Barath Murugan | Published: 30 Oct 2024 18:44 PM

இன்றைய சினிமா செய்திகள்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் LCU யுனிவர்ஸில் இணைந்த புது நடிகர் முதல் தீபாவளிக்கு வெளியாக உள்ள பிரதர் திரைப்படம் ப்ரீ புக்கிங் கலெக்ஷன் வரை அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி சினிமாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து சிலவற்றை காணலாம். LCU வில் இணைந்த ராகவா லாரன்ஸ், கங்குவா மற்றும் அமரன் திரைப்படத்தில் இருந்து வெளியான பாடல்கள் உள்ளிட்ட பல தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளது.

  • லோகேஷ் கனகராஜ் LCU யுனிவர்ஸில் இணையும் புது நடிகர் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் 2017ல் வெளியான மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த திரைப்படத்தின் பிறகு 2019ல் நடிகர் கார்த்திக் உடன் இணைந்து “கைதி” திரைப்படத்தை உருவாக்கினார். ஆக்ஷன் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்த திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைத் தந்தது.  கைதி திரைப்படத்திலிருந்தே LCU என்ற யுனிவர்ஸ் (லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்) அவர் இயக்கிய கதைகளை ஒன்றிணைத்தார். கைதி, விக்ரம் மற்றும் லியோ போன்ற திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் பென்ஸ் திரைப்படத்தை இணைக்க உள்ளதாக வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

  • ப்ரீ புக்கிங்கில் வசூலை வேட்டையாடும் நடிகர் ஜெயம் ரவியின் பிரதர் திரைப்படம்..!

தமிழ்த் திரைப்படம் பிரபல நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிரதர். இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் பிரியங்கா மோகன், பூமிகா, சரண்யா பொன்வண்ணனன், நட்டி நடராஜ் மற்றும் சீதா போன்ற பல  பிரபலங்கள் நடித்துள்ளனர்.  இந்த திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.   நடிகர் ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகனின் நடிப்பில் காதல் மற்றும் குடும்பம் போன்ற கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் நாளை  தீபாவளி பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பிரதர் திரைப்படம் இதுவரை ப்ரீ புக்கிங்கில்  சுமார் 80 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாம்.

  • கங்குவா திரைப்படத்தில் பணிபுரிந்த தொகுப்பாளர் காலமானார்

நடிகர் சூர்யாவின் 43வது திரைப்படமாக உருவாகியுள்ளது கங்குவா. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் மற்றும் யுவி கிரியேஷன் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் நடிகர்கள் திஷா பதானி, பாபி தியோல், கோவை சரளா, யோகிபாபு, ஜெகபதி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்படப் பல திரை பிரபலங்கள் நடித்துள்ளனர். பல கோடி பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் சுமார் 10 மொழிகளுக்கும் மேல் வெளியாக உள்ளது.  இந்நிலையில் கங்குவா படத்தில் தொகுப்பாளராக பணியாற்றிய நிஷாத யூசுப் காலமானார். இந்த தகவல் கங்குவா படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • அமரன் திரைப்படத்தில் இருந்து வெளியான அடுத்த பாடல்..!

தமிழில் 2017ல் வெளியான ரங்கூன் திரைப்படத்தின் மூலம் திரைப்பட இயக்குநராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. தற்போது இவர் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ள திரைப்படம் அமரன். இந்திய ராணுவத்தில் மிகவும் துணிச்சலான வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் ராணுவம் மற்றும் காதல் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் அமரன் . இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கப் பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானதை அடுத்து தற்போது மூன்றாவது பாடலான “உயிரே” என்ற லிரிக்கல் பாடலை வெளியிட்டுள்ளது.

  • தீபாவளி ஸ்பெஷல் திரைப்படங்கள்.. டிவியில் ஒளிபரப்பாகவுள்ள டாப் ஹீரோஸ் படங்கள்!

தீபாவளி என்றாலே மக்களுக்குக் கொண்டாட்டம் தான் அதுவும் பட்டாசு மற்றும் இனிப்புகள் என தித்திக்கும் தீபாவளியாக இருக்கும். தீபாவளியில் தான் சொந்த பந்தங்கள் இணைந்து சுற்றுலா அல்ல திரைப்படங்களைப் பார்ப்பது உண்டு அந்த வகையில் தமிழ் தொலைக்காட்சியில் வெளியாகும் டாப் நடிகர்களின் படங்கள் என்னென்ன மற்றும் எந்த டி.வியில் வெளியாக உள்ளது தெரியுமா? நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் கலைஞர் டி.வியில் மதியம் 1:30 மணிக்கும், நடிகர் தனுஷ் நடித்த ராயன் திரைப்படம் சன் டிவியில் மாலை 6 மணிக்கும், நடிகர் விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் விஜய் டிவியில் மாலை 5:30 மணிக்கும் மற்றும் நடிகர் அருள் நிதி, பிரியா பவானி சங்கர் நடித்த டிமான்டே காலனி 2 திரைப்படம் ஜீ தமிழ் டிவியில் மாலை 6 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளது.

  • அமரன் திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகை சாய் பல்லவி வாங்கிய சம்பள விவரம்..!

இயக்குநர் ராஜ்குமார் பெரிய சாமியின் இயக்கத்தில் மறந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் அமரன். இந்த திரைப்படத்தில் முன்னணி நடிகராக சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய்பல்லவி ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ளனர். நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்களும் சூப்பர் ஹிட்டான நிலையில் இன்று இந்த திரைப்படத்திலிருந்து. மூன்றாவது பாடலும் வெளியாகி உள்ளது. அமரன் திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகை சாய் பல்லவி சுமார் 3 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.

  • கங்குவா திரைப்படத்திலிருந்து வெளியான “தலைவனே” என்ற பாடல்..!

தமிழ் பிரபல நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என சுமார் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தைப் பிரபல இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி க்ரியேஷன் என்ற பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. நடிகர் சூர்யாவின் 43வது திரைப்படமான இதில் இவருக்கு ஜோடியாக இந்தி பிரபல நடிகை திஷா பதானி நடித்துள்ளார். இப்படத்தில் முக்கிய நடிகர்களாக பாபி தியோல், யோகிபாபு, கோவை சரளா, நடராஜன், ரெட்டின் கிங்ஸ்லி, சுப்பிரமணியன், ஜெகபதி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் எனப் பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திலிருந்து மூன்றாவது பாடலான “தலைவனே” என்ற லிரிக்கல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

  • போட்டியாளர்களுக்கிடையே ஏற்படும் பிரிவினை.. பிக் பாஸ் வீட்டில் சூடுபிடிக்கும் ஆட்டம்..!

தமிழ் மக்கள் உற்சாகமாகப் பார்த்து வரும் நிகழ்ச்சிகளில் முக்கியமான ரியாலிட்டி ஷோவாக இருப்பது பிக் பாஸ் நிகழ்ச்சி. தற்போது 8வது சீசனாக ஒளிபரப்பாகி இந்த நிகழ்ச்சியானது நல்ல வரவேற்பைப் பெற்று டிஆர்பி ரேட்டிங்கை அள்ளிக்கொடுக்கும் நிகழ்ச்சிகளில் முதலிடத்தில் இருக்கிறது. நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வரும் இந்த நிகழ்ச்சியில் இன்றைக்கு வெளியாகி உள்ள எபிசோடில் ஒவ்வொரு போட்டியாளர்களும் மற்றொரு போட்டியாளர்களைப் போல நடிக்கவேண்டும் என்ற டாஸ்க் நேற்று ஆரம்பித்த நிலையில் இரண்டாவது நாளான இன்று மற்றொரு போட்டியாளர்களின் வேடத்தில் இருக்கும் நபர்கள் அந்த போட்டியாளர்கள் இந்த குணத்தை மாற்றிக்கொண்டால் நன்றாக இருக்கும் என்ற விதத்தில் நடித்துக்காட்ட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனால் போட்டியாளர்களிடையே இடையே பிரச்னை உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest News