Today’s Cinema News: 200 கோடி வசூலை நெருங்கும் அமரன் முதல் தளபதி 69 அப்டேட் வரை… டாப் சினிமா செய்திகள்!
இன்றைய சினிமா செய்திகள்: நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான ‘அமரன்’ படம் வசூலில் 200 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் முதல் விஜயின் தளபதி 69 படத்தின் தற்போதைய அப்டேட் வரை நவம்பர் மாதம் 9-ம் தேதி சினிமாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து சில.
இன்றைய சினிமா செய்திகள்: நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான ‘அமரன்’ படம் வசூலில் 200 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் முதல் விஜயின் தளபதி 69 படத்தின் தற்போதைய அப்டேட் வரை நவம்பர் மாதம் 9-ம் தேதி சினிமாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து சில.
வசூலில் 200 கோடியை நெருங்கும் ‘அமரன்’ படம்!
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது 21-வது படத்திற்காக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் கூட்டணி வைத்தார். இந்தப் படத்திற்கு ‘அமரன்’ என்று பெயர் வைத்தனர். சோனி பிக்சர்ஸுடன் இணைந்து இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. தமிழில் மீண்டும் ஒரு தேசபக்தி படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்த நிலையில் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து படம் வெளியாகி 9 நாட்களை கடந்துள்ள நிலையில் படத்தின் வசூல் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி படம் உலகம் முழுவதும் ரூ. 195 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிக்பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்ஷனா?
பிக்பாஸ் தமிழ் சீசன் 8-ல் கடந்த 4-வது வாரத்தில் எவிக்ஷன் எதுவும் இல்லாததால், 5-வது வாரமான இந்த வாரத்தில் டபுள் எவிக்ஷன் இருக்கலாம் என்று இணையத்தில் தகவல்கள் வைரலாகி வருகின்றது. கடந்த மாதம் 6-ம் தேதி பிக்பாஸ் தமிழ் 8-வது சீசன் தொடங்கியது.இதில், ரவீந்தர் சந்திரசேகர், அருண் பிரசாத், அன்ஷிதா, தீபக், தர்ஷிகா, தர்ஷா குப்தா, ஜாக்குலின், முத்துக்குமார், ஜெப்ரி, அர்னவ், ரஞ்சித், பவித்ரா ஜனனி, ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா,சுனிதா, செளந்தர்யா, வி.ஜே. விஷால் என 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். முதல் வார நாமினேஷனில் இடம் பிடித்த ரவீந்தர் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது வாரம் அர்னவ் மூன்றாவது வாரம் தர்ஷா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று தகவல்கள் வைரலாகி வருகின்றது. அந்த வகையில் இந்த வாரம் நாமினேஷனில் இடம் பிடித்த நபர்களில் சாச்சனா, சுனிதா, ஆனந்தி ஆகியோர் குறைவான வாக்குகளை பெற்றுள்ளனர். இதில் டவுள் எவிக்ஷன் என்றால் சுனிதா மற்றும் ஆனந்தி வெளியேற வாய்ப்பு உள்ளது. இல்லை ஒருவர் மட்டும் என்றால் ஆனந்தி வெளியேற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கங்குவா படத்திற்கு சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட்
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா படத்தின் தணிக்கை சான்றிதழ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா கங்குவா மற்றும் சூர்யா 44 என இரண்டு படங்களிலும் பிசியாக வேலை செய்து வருகிறார். கிட்டதட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. யுவி கிரியேஷன்ஸ் நிறுவனமும், ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து பெரும் பொருட்செலவில் சூர்யாவின் கங்குவா படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படம் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் படம் எடுக்கப்பட்டு வருகிறது. நடிகர் சூர்யா இந்தப் படத்தில் 13 விதமான தோற்றங்களில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பதால் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் படம் வருகின்ற நவம்பர் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது. படத்தின் தணிக்கை சான்றிதழ் வெளியாகியுள்ளது. அதன்படி படத்திற்கு யு/எ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
‘ப்ரதர்’ படத்திலிருந்து வெளியானது ஸ்னீக் பீக்!
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ’ப்ரதர்’ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இவருக்கு கடந்த சில காலங்களாக படங்கள் பெரிய அளவில் வெற்றியை தேடித் தரவில்லை. இவரது நடிப்பில் குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் வெளிவந்த இறைவன், சைரன் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் தற்போது இயக்குநர் ராஜேஷ் உடன் கூட்டணி சேர்ந்துள்ளார் ஜெயம் ரவி. இந்தப் படத்தில் நடிகை ப்ரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத், ‘கேஜிஎஃப்’, ‘புஷ்பா’ புகழ் பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் கடந்த 31-ம் தேதி தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவைல் படக்குழு வெளியிட்டுள்ளது.
படப்பிடிப்பின் இடையே ராணுவ வீரர்களை சந்தித்த விஜய்!
நடிகர் விஜய் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்த நிலையில் அவரது கடைசி படமான தளபதி 69 படத்துடன் அவர் நடிப்பதில் இருந்து விலக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் தளபதி 69 படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருவது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் விஜயின் இறுதிப் படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்கவுள்ளார். விஜயின் 69-வது படமாக உருவாகவுள்ள இந்தப் படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இது இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ் படமாகும். இந்தப் படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, கவுதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, பாபி தியோல், மமிதா பைஜு, நரேன் உள்ளிட்டோர் இணைந்துள்ளதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்போது தீபாவளி பண்டிகை விடுமுறையை முடித்துவிட்டு படக்குழு மீண்டும் படப்பிடிப்பை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தற்போது சென்னையில் உள்ள ராணுவ வீரர்களின் பயிற்சி அகடமியில் தற்போது படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது. அங்கு விஜய் ராணுவ அதிகாரிளை சந்தித்த புகைப்படம் மற்றும் வீடியோ வைரலாகி வருகின்றது.
Also read… Cinema Rewind: பிதாமகன் படத்தில் நடிக்க இதுதான் காரணம்.. மனம் திறந்த நடிகை சங்கீதா!
அமரன் ஹிட்… ஜி.வி-க்கு சிவகார்த்திகேயன் கொடுத்த கிஃப்ட்
மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து அமரன் படம் உருவாகியுள்ளது. தமிழில் மீண்டும் ஒரு தேசபக்தி படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்த நிலையில் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். படத்தின் பின்னணி இசை முதல் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்திற்கு ஜி.வி-யின் இசையும் முக்கிய காரணமாக அமைந்தது. இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷிற்கு சிவகார்த்திகேயன் ’வாட்ச்’ பரிசாக அளித்துள்ளார். இதனை ஜி.வி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
Also read… மெழுகு டோலு நீ… நடிகை மாளவிகா மோகனனின் நியூ போட்டோஸ்
ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணையும் சிவகார்த்திகேயன்?
நடிகர் ரஜினிகாந்த தனது 171-வது படத்திற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி வைத்துள்ளார். தளபதி விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ மற்றும் ‘லியோ’ என இரண்டு ஹிட் படங்களையும், உலகநாயகன் கமல்ஹாசனுக்கு ‘விக்ரம்’ என்கிற பிளாக்பஸ்டர் வெற்றி படத்தையும் இயக்கிய லோகேஷ் கனகராஜ், முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது. ஸ்டண்ட் இயக்குநர்களாக அன்பறிவு பணியாற்றுகின்றனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் முன்னதாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
வெளியானது நயன்தாராவின் ’பேயொண்ட் தி ஃபரி டைல்’ ட்ரைலர்
பிரபல நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனைப் பல ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். வாடகைத் தாய் மூலம் தற்போது இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் நடிகை நயன்தாராவின் சொந்த வாழ்க்கை குறித்தும், சினிமா வாழ்க்கை குறித்தும் மற்றும் இவர்களின் திருமணத்தைக் குறித்தும் ஆவணப்படம் வெளியாக உள்ளது. இந்த ஆவணப்படத்தைப் பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது. இந்நிலையில் இன்று “Nayanthara: Beyond the Fairy Tale” என்ற பெயரில் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த ஆவணப்படமானது வருகின்ற நவம்பர் 18-ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.