5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Today’s Cinema News: கங்குவா செய்த சாதனை.. கோட் படத்தை முந்திய அமரன்.. டாப் சினிமா செய்திகள்!

இன்றைய சினிமா செய்திகள்: நடிகர் சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் முதல் தெலுங்கில் சினிமாவில் விஜய்யின் "கோட்" திரைப்படத்தை வசூலில் பீட் செய்த அமரன் திரைப்படம் வரை இன்று நவம்பர் மாதம் 4-ம் தேதி சினிமாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்த செய்திகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Today’s Cinema News: கங்குவா செய்த சாதனை.. கோட் படத்தை முந்திய அமரன்.. டாப் சினிமா செய்திகள்!
இன்றைய சினிமா செய்திகள்
barath-murugan
Barath Murugan | Updated On: 04 Nov 2024 18:59 PM

இன்றைய சினிமா செய்திகள்: கங்குவா திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் முதல் தெலுங்கில் “கோட்” திரைப்படத்தை பின்னுக்கு தள்ளி அமரன் திரைப்படம் செய்த சாதனை வரை நவம்பர் மாதம் 4-ம் தேதி சினிமாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

  • வெளியாக்குவதற்கு முன்பே ப்ரீ புக்கிங்கில் வசூலை அள்ளும் சூர்யாவின் கங்குவா ..!

தமிழ் பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திஷா பதானி, பாபி தியோல் மற்றும் நட்டி நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். பல கோடி பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகிவரும் இந்த திரைப்படம் சுமார் 10க்கும் மேற்பட்ட மொழிகளை வெளியாகத் தயாராகி வருகிறது. பிரபல தயாரிப்பு நிறுவனம் ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி க்ரியேஷன் தயாரிக்கும் இந்த திரைப்படம் வட இந்தியாவில் மட்டுமே சுமார் 3500 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாம். ஒட்டுமொத்தமாக சுமார் 9000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி பெரிய சாதனை படைக்கவுள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் நவம்பர் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகத் தயாராகிவரும் இந்த திரைப்படம் வெளியாக்குவதற்கு முன்பே ப்ரீ புக்கிங்கில் அமெரிக்காவில் ரூ.47 லட்சங்களுக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

  • தெலுங்கில் விஜய்யின் கோட் திரைப்படத்தின் வசூலை மிஞ்சிய அமரன்..!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய் பல்லவியின் நடிப்பில் வெளியான திரைப்படம் அமரன். ரங்கூன் திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிய இப்படம் கடந்த அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகியது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகியது . இந்நிலையில் தெலுங்கு மொழியில் வெளியான அமரன் விஜய் நடிப்பில் வெளியான “கோட்” திரைப்படத்தின் வசூலை முறியடித்ததாகவும் 4 நாட்களில் சுமார் 16 கோடிகளை வசூல் செய்து விஜய்யின் கோட் திரைப்படத்தை பீ ட் செய்ததாகவும் கூறப்படுகிறது.

  • மர்மமான முறையில் இறந்த பிரபல கன்னட இயக்குநர் குருபிரசாத்..!

கன்னட மொழி பிரபல திரைப்பட இயக்குநரான குரு பிரசாத் நேற்று பெங்களூரில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கன்னடத்தில் மட்டா, எட்டேலு மஞ்சுநாதா, டைரக்டர்ஸ் ஸ்பெஷல் போன்ற பல வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்குநராக மட்டுமில்லாமல் பல திரைப்படங்களில் முன்னணி நடிகராகவும் நடித்துள்ளார். தற்போது இவர் பெங்களூர் அடுக்குமாடியில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட இவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசாரால் சந்தேகிக்கப்படுகிறது. இயக்குநர் குருபிரசாத் சிலகாலங்களாக அதிக கடன்சுமையில் இருந்ததாகவும், இவர் இயக்கிய எட்டேலு மஞ்சுநாதா 2 தயாராகி 2 வருடங்களான நிலையிலும் இன்னும் வெளிவராத காரணத்தால் இவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்திருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துவருகிறது.

  • நடிகை அஜித் பற்றிப் பேசிய நடிகை ரெஜினா கசாண்ட் ரா..! என்ன கூறினார் தெரியுமா?

தமிழ்த் திரைப்படங்களில் பிரபல நடிகையாக வளம் வந்தவர் நடிகை ரெஜினா கசாண்ட் ரா. இவர் 2005ல் வெளியான “கண்ட நாள் காதல்” என்ற திரைப்பிடத்தில் துணைக் கதாபாத்திரமாக அறிமுகமாகிய இவர் பின் நிர்ணயம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன் போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபல மான நடிகையாக வலம் வந்தார். இவர் தற்போது இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்தின் நடிப்பில் உருவாக்கி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். நடிகை ரெஜினா கசாண்ட் ரா சமீபத்தில் ஒருநேர்காணலில் நடிகர் அஜித்தை பற்றி தொகுப்பாளர் கேட்டபோது நான் அஜித் சாரை இதுவரை நேரில் பார்த்ததில்லை எனவும் என்னைச் சுற்றியுள்ள நண்பர்கள் அவரை பார்க்கவேண்டும் என ஆர்வத்துடன் இருப்பார்கள் எனக்கு அப்போது புரியவில்லை ஏன் என்று நடிகர் அஜித் அவர்களை ஷீட்டிங் போதுதான் புரிந்துகொண்டேன் அவர் எவ்வளவு வசீகரமான நடிகர் என்று” என அந்த நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

  • அமரன் திரைப்படத்திற்கு வாழ்த்துக்கள் கூறிய நடிகர் எஸ்.ஜே. சூர்யா..!

தற்போது அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் அமரன். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் நடிகர் கமலின் தயாரிப்பில் உருவான இப்படம் மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படமாகும். இந்த திரைப்படம் வெளியாகிய மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துவரும் நிலையில் பல பிரபலங்களும் இப்படத்தை வாழ்த்தி வருகின்றன. இந்நிலையில் இன்று பிரபல நடிகர் எஸ்.ஜே. சூர்யா இந்த திரைப்படத்தை வாழ்த்தி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் இவர் அமரன் திரைப்படம் மிக அருமையாக இருந்ததாகவும், மதுரையில் உள்ள திரையரங்கில் பார்த்ததாகவும் அனைவரும் இந்த திரைப்படத்தைக் கண்டிப்பாகப் பார்க்கவேண்டும் என்றும் அமரன் மிகவும் பிரமாதமாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.

  • நடிகர் துல்கர் சல்மானின் “லக்கி பாஸ்கர்” திரைப்படத்தின் 4 நாட்கள் வசூல் எவ்வளவு தெரியுமா ?

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் பிரபல மழையால் நடிகர் மம்மூட்டியின் மகன் ஆவார். நடிகர் துல்கர் சல்மான் தமிழ் சினிமாவில் ஓகே கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மற்றும் ஹே சினாமிகா போன்ற திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். தற்போது கடந்த அக்டோபர் 31ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் “லக்கி பாஸ்கர்”. நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படத்தின் ரிலீஸ் உடன் வெளியான இப்படம் தமிழ், மலையாள, தெலுங்கு மற்றும் கன்னடம் எனப் பல மொழிகளில் வெளியாகியது. அமரன் திரைப்படத்திற்கு அனைவராலும் ரசிக்கப்பட்டு வரும் இந்த இத்திரைப்படம் கவினின் ப்ளடி பெக்கர் மற்றும் பிரதர் திரைப்படத்திற்கு டப் கொடுக்கும் விதத்தில் 4 நாட்களில் இந்தியாவில் சுமார் ரூ.29.4 கோடிகளையும் உலகளாவிய வசூலில் சுமார் ரூ.46.5 கோடிகளையும் வசூல் செய்துள்ளது.

  • அமரன் திரைப்படத்திலிருந்து வெளியான “போர் வீரன்” லிரிக்கல் பாடல் இதோ.

நடிகர் சிவகார்த்திகேயனின் அசாதாரணமான நடிப்பில் பயோ கிராபிக் மற்றும் ஆக்ஷ்ன் நிறைந்து வெளியான திரைப்படம் அமரன். மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு வெளியாகிய இந்த திரைப்படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கே டப் கொடுக்கும் விதத்தில் நடிகை சாய் பல்லவி நடிப்பில் மக்களை ஈர்த்து வருகிறார். அமரன் திரைப்படம் வெளியான 3 நாட்களில் சுமார் ரூ.150 கோடிக்கும் மேல் வசூல் செய்து நடிகர் சிவகார்த்திகேயனுக்கு “பிளாக் பஸ்டர் ஹிட்” திரைப்படமாக அமைத்துள்ளது. இப்படத்திற்காகப் பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.   தற்போது படத்தில் இடம்பெற்ற “போர் வீரன்” என்ற லிரிக்கல் பால்லை வெளியிடப்பட்டுள்ளது.

 

Latest News