சின்னத்திரையில் TRPயில் இந்தவார Top 10 சீரியல் என்னென்ன – லிஸ்ட் இதோ!
Tamil Serial TRP: பிரபல சேனல்களில் மதிய நேரங்களில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் சீரியல்கள் இல்லத்தரசிகளையும், மாலை பிரைம் டைமிங்கில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் சீரியல்கள் இளைஞர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் கவர்ந்து TRP ரேட்டிங் லிஸிட்டில் இடம்பிடித்து வருகின்றன. சினிமா படங்களுக்கு ரசிகர்கள் லட்சக்கணக்கில் இருப்பதைப் போன்று டிவிகளில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
விஜய் டிவி சீரியல்கள் கடந்த சில வாரமாக டாப் 10ல் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் இந்த வாரம் சில சீரியல்களில் மாற்றம் பெற்று சன் டிவி சீரியல்கள் முன்னேறி இருக்கின்றன. தமிழகத்தின் முன்னணி சேனல்கள் அனைத்திலுமே தவறாமல் ஒளிபரப்பாகி வருகின்றன சீரியல்கள். சினிமா படங்களுக்கு ரசிகர்கள் லட்சக்கணக்கில் இருப்பதைப் போன்று டிவிகளில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதோடு சீரியல்களில் நடிக்கும் நடிகர்களை தங்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்கள் போல அன்பு செலுத்தி வருகிறார்கள் பார்வையாளர்கள். வெள்ளிதிரைக்கு மக்களிடையே எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறதோ அதே அளவிற்கு சின்னைத்திரைக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. சினிமா படங்களுக்கு ரசிகர்கள் லட்சக்கணக்கில் இருப்பதைப் போன்று டிவிகளில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதோடு சீரியல்களில் நடிக்கும் நடிகர்களை தங்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்கள் போல அன்பு செலுத்தி வருகிறார்கள் பார்வையாளர்கள்.
பல தொலைக்காட்சிகள் பல விதமான தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. ஆனால் எப்போதும் போட்டி என்னவோ சன் டிவிக்கும், விஜய் டிவிக்கும் தான், இந்த இரண்டு சேனல்களின் தொடர்களுக்கு மவுசு அதிகம் என்றே கூறலாம். பிரபல சேனல்களில் மதிய நேரங்களில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் சீரியல்கள் இல்லத்தரசிகளையும், மாலை பிரைம் டைமிங்கில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் சீரியல்கள் இளைஞர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் கவர்ந்து TRP ரேட்டிங் லிஸிட்டில் இடம்பிடித்து வருகின்றன. சினிமா படங்களுக்கு ரசிகர்கள் லட்சக்கணக்கில் இருப்பதைப் போன்று டிவிகளில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
சினிமாவுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு சின்னத்திரை சீரியல்கள் விறுவிறுப்பான திரைக்கதை உடன் ஒளிபரப்பாகி வருவதால் அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. டிஆர்பி ரேட்டிங்கை வைத்து தான் சீரியல்களின் முன்னணி நிலவரம் கணிக்கப்படுகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டின் 30-வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல் டிஆர்பி ரேட்டிங் விவரம் வெளியாகி இருக்கிறது.
டாப் 10 டிஆர்பி பட்டியலில் விஜய் டிவியில் கடந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்படும் ஆஹா கல்யாணம் சீரியலை மற்றொரு விஜய் டிவி சீரியலான சின்ன மருமகள் 5.73 புள்ளிகளைப் பெற்று பின்னுக்கு தள்ளியுள்ளது. இதனால் இந்த வாரம் 10-வது இடத்தில் சின்ன மருமகள் சீரியல் உள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் கடந்த வாரம் 8-வது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 6.62 புள்ளிகளுடன் 9-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
Also read… பிரபல நடிகை தான் இந்த சிறுமி… நீங்க கண்டுபிடிச்சீங்களா?
இந்த நிலையில் 8-வது இடத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 6.88 புள்ளிகளுடன் இடம் பிடித்துள்ளது. அதே போல கடந்த வாரம் 9-ம் இடத்தில் இருந்த சன் டிவியின் மல்லி சீரியல் இந்த வாரம் 7.03 புள்ளிகளுடன் 7-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. அதே போல் சன் டிவியின் வானத்தைப்போல சீரியல் 7.56 டிஆர்பி புள்ளிகள் உடன் கடந்த வாரத்தைபோல் இந்த வாரமும் அதே 6-வது இடத்தில் நீடிக்கிறது. இந்த நிலையில் கடந்த வாரம் 3-ம் இடத்தில் இருந்த விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம் 7.75 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் சீரியல்களுக்கு அடித்தளம் போட்ட சன் டிவிதான் டிஆர்பியில் முதல் மூன்று இடங்களைத் தன்வசம் வைத்துள்ளது. அதன்படி சன் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட மருமகள் சீரியல் 8.04 புள்ளிகளுடன் 4-ம் இடத்தில் உள்ளது. அடுத்ததாக 3-வது இடத்தில் 8.40 டிஆர்பி புள்ளிகள் உடன் கயல் சீரியல் உள்ளது. கடந்த வாரம் 4-ம் இடத்தில் இருந்த சிங்கப்பெண்ணே சீரியல் 8.74 புள்ளிகளுடன் இந்த வாரம் 2-ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. கடந்த சில வாரங்களாக நம்பர் 1 இடத்தில் நீடிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல், இந்த வாரமும் 9.18 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்க வைத்து உள்ளது.