5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Today’s Cinema News: நெகிழ்ந்த சூரி.. சிக்கலில் நிவின் பாலி.. இன்றைய டாப் 10 நியூஸ்!

சினிமா செய்திகள்:  பொழுதுபோக்கு விஷயத்தில் முதல் இடத்தில் இருக்கும் சின்னத்திரை, பெரிய திரை ஆகிய இரண்டிலும் தினம்தோறும் ஏகப்பட்ட விஷயங்கள் நடைபெற்று வருகிறது.  இன்றைய நாளில் (செப்டம்பர் 2) இந்திய சினிமா, தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில் நடைபெற்ற சில முக்கியச் செய்திகளை தொகுப்பாக நாம் காணலாம். இதில் வெள்ள நிவாரணத்துக்கு உதவும் பிரபலங்கள், நேசிப்பாயா பட டீசர், நிவின் பாலி மீது வழக்குப்பதிவு உள்ளிட்ட நிகழ்வுகளை காணலாம்.

Today’s Cinema News: நெகிழ்ந்த சூரி.. சிக்கலில் நிவின் பாலி.. இன்றைய டாப் 10 நியூஸ்!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 03 Sep 2024 20:37 PM

இன்றைய சினிமா செய்திகள்:  பொழுதுபோக்கு விஷயத்தில் முதல் இடத்தில் இருக்கும் சின்னத்திரை, பெரிய திரை ஆகிய இரண்டிலும் தினம்தோறும் ஏகப்பட்ட விஷயங்கள் நடைபெற்று வருகிறது.  இன்றைய நாளில் (செப்டம்பர் 2) இந்திய சினிமா, தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில் நடைபெற்ற சில முக்கியச் செய்திகளை தொகுப்பாக நாம் காணலாம். இதில் வெள்ள நிவாரணத்துக்கு உதவும் பிரபலங்கள், நேசிப்பாயா பட டீசர், நிவின் பாலி மீது வழக்குப்பதிவு,  ஹேமாஸ் கமிட்டி அறிக்கை குறித்து நடிகை நிவேதா தாமஸ் கருத்து உள்ளிட்ட பல நிகழ்வுகளை வரலாம்.

  • வெள்ளத்தால் தத்தளிக்கும் ஆந்திரா, தெலங்கானா – உதவும் திரைப்பிரபலங்கள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திரா தெலுங்கானா மக்களுக்கு உதவும் வகையில் நடிகர் பாலையா இரு மாநில முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்கு தலா ரூபாய் 50 லட்சம் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அதேபோல் நடிகர் ஜூனியர் என்டிஆர் ஒரு கோடி நிதி உதவி அளித்துள்ளார்.

  • சசிகுமார் நடித்த நந்தன் படத்தைப் பார்த்து நெகிழ்ந்த நடிகர் சூரி

இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள நந்தன் படத்தை பார்த்த நடிகர் சூரி அது குறித்து தனது கருத்தை சமூக வலைத்தளங்களை பதிவிட்டுள்ளார். அதில் படம் பார்த்து பல மணி நேரங்கள் ஆகிறது ஆனால் நந்தன் தந்த பிரமிப்பு இன்னும் அகலவில்லை. அன்பு இரா சரவணன் அண்ணனுக்கும் சசிகுமார் அண்ணனுக்கும் பிரான் சகோதரர்களுக்கும் நந்தன் குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

  • தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்துக்கு டப்பிங் கொடுத்த பத்ரிநாத்

நடிகர் விஜய் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் டப்பிங் கொடுத்துள்ள புகைப்படம் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. முன்னதாக இந்த படத்தில் கிரிக்கெட் சம்மந்தப்பட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • நேசிப்பாயா படத்தின் டீசர் – வெளியான முக்கிய அப்டேட்

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி, அதிதி சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள நேசிப்பாயா படத்தின் டீசர் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் தியேட்டரில் ஒளிபரப்பாகும் எனப்பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

  • நடிகர் சிங்கமுத்து மீது வடிவேலு புகார் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு 

Youtube சேனல்களில் தன்னை பற்றி அவதூறாக பேசியதாக நடிகர் சிங்கமுத்து மீது வடிவேலு ரூபாய் 5 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் இரண்டு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என சிங்கமுத்துவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • ஹேமா கமிட்டி அறிக்கை – நிவேதா தாமஸ் பரபரப்பு கருத்து

ஹேமா கமிட்டி அறிக்கையில் வெளியான தகவல்கள் வருத்தம் அளிப்பதாகவும், மலையாள சினிமாவின் பெண்கள் அமைப்பால்தான் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் நடிகை நிவேதா தாமஸ் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பணியிடத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தி தர வேண்டியது அவசியம் எனவும், வீட்டில் இருப்பதை விட பணியிடத்தில் தான் பெண்கள் அதிக நேரம் இருக்கிறார்கள். ஹேமா கமிட்டியை போல மற்ற திரைத்துறைகளிலும் கமிட்டிகள் வந்தால் நல்லதாக இருக்கும் எனவும் அவர் கருத்தை தெரிவித்துள்ளார்.

  • வெளிநாட்டில் பாலியல் தொல்லை – நடிகர் நிவின் பாலி மீது வழக்குப்பதிவு

பட வாய்ப்பு தருவதாக கூறி கேரள நடிகைக்கு வெளிநாட்டில் பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகர் நிவின் பாலி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Latest News