5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Today’s Cinema News: அஜித்துடன் மீண்டும் இணையும் த்ரிஷா.. கவின் பட அப்டேட்.. இன்றைய முக்கிய சினிமா செய்திகள்

இன்றைய சினிமா செய்திகள்:  பொழுதுபோக்கு விஷயத்தில் முதல் இடத்தில் இருக்கும் சின்னத்திரை, பெரிய திரை ஆகிய இரண்டிலும் தினம்தோறும் ஏகப்பட்ட விஷயங்கள் நடைபெற்று வருகிறது.  இன்றைய நாளில் (செப்டம்பர் 2) இந்திய சினிமா, தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில் நடைபெற்ற சில முக்கியச் செய்திகளை தொகுப்பாக நாம் காணலாம். இதில் கூலி படத்தின் அப்டேட், லப்பர் பந்து பட சேட்டிலைட் உரிமை விற்பனை போன்றவை நடைபெற்றுள்ளது.

Today’s Cinema News: அஜித்துடன் மீண்டும் இணையும் த்ரிஷா.. கவின் பட அப்டேட்.. இன்றைய முக்கிய சினிமா செய்திகள்
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 02 Sep 2024 22:47 PM

இன்றைய சினிமா செய்திகள்:  பொழுதுபோக்கு விஷயத்தில் முதல் இடத்தில் இருக்கும் சின்னத்திரை, பெரிய திரை ஆகிய இரண்டிலும் தினம்தோறும் ஏகப்பட்ட விஷயங்கள் நடைபெற்று வருகிறது.  இன்றைய நாளில் (செப்டம்பர் 2) இந்திய சினிமா, தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில் நடைபெற்ற சில முக்கியச் செய்திகளை தொகுப்பாக நாம் காணலாம். இதில் கூலி படத்தின் அப்டேட், லப்பர் பந்து பட சேட்டிலைட் உரிமை விற்பனை, சசிகுமாரின் நந்தன் படம் அப்டேட் , அஜித்துடன் மீண்டும் இணையும் த்ரிஷா என இன்றைய நாளின் முக்கியமான சினிமா செய்திகளை காணலாம்.

  • கடைசி உலகப்போர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மீசையை முறுக்கு படத்திற்குப் பிறகு நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் தமிழா இயக்கி நடித்துள்ள கடைசி உலக போர் படம் செப்டம்பர் 20ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் ஹிப் ஹாப் தமிழா சினிமா கேரியரில் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாகும்.

  • வாழைப் படத்தை பாராட்டிய முதலமைச்சர் மு க ஸ்டாலின், ரஜினிகாந்த்

இயக்குனர் மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கியுள்ள வாழை படம் திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே வாழை படத்தை இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டிய நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வாழை படம் நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் வந்திருக்கும் அற்புதமான தரமான படம் என புகழ்ந்துள்ளார்.

  • தீபாவளி ரிலீஸ் இணைந்த நடிகர் கவின் படம்

இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கிவிட்ட நிலையில் ஒவ்வொரு படமும் ரிலீஸ் செய்தியை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் நடப்பாண்டு தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் அமரன் படம், ஜெயம் ரவியின் பிரதர் படம் ஆகியவை ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் கவின் நடித்து வரும் ப்ளடி பெக்கர் படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • மீண்டும் இணையும் அயோத்தி கூட்டணி – எகிறும் எதிர்பார்ப்பு

இயக்குனர் இரா சரவணன் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடித்துள்ள நந்தன் படம் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் திரையரங்க வெளியிட்டு உரிமையை ட்ரீட்டேன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த நிறுவனம் சசிகுமார் இயக்கி மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற அயோத்தி படத்தை தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  • கூலி படத்தில் இருந்து வெளியான ரஜினிகாந்தின் கேரக்டர் பெயர்- கொண்டாடும் ரசிகர்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் கூலி. இந்த படத்தில் இணைந்துள்ள பிரபலங்களும் அவர்களின் கேரக்டர் பெயர்களும் கடந்த சில நாட்களாக வெளியிடப்பட்டு வந்தன. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் இந்த படத்தில் தேவா என்ற கேரக்டரில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • லப்பர் பந்து படத்தின் சேட்டிலைட் உரிமையைக் கைப்பற்றிய டிஸ்னி ஹாட்ஸ்டார்

இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் ஆகிய இருவரும் நடித்துள்ள படம் லப்பர் பந்து. இந்தப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்த நிலையில் இந்தப் படத்தின் சேட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது

  • விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித்துடன் மீண்டும் இணையும் த்ரிஷா

கிரீடம், ஜி, மங்காத்தா ஆகிய படங்களை தொடர்ந்து நடிகர் அஜித்குமாருடன் நடிகை த்ரிஷா விடாமுயற்சி படத்தில் இணைந்து நடித்து வருகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தில் திரிஷா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Latest News