Today’s Cinema News: சர்தார் 2 டீசர்.. மீண்டும் இணையும் சுந்தர் சி-வடிவேலு.. இன்றைய டாப் சினிமா செய்திகள்!
ஒரு பக்கம் சின்னத்திரை, மறுபக்கம் பெரிய திரை என இரண்டு தளங்களிலும் நாள்தோறும் ஏராளமான நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்றைய நாளில் (செப்டம்பர் 12) இந்திய சினிமா, தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில் நடைபெற்ற சில முக்கியச் செய்திகளை தொகுப்பாக நாம் காணலாம். நடிகர் தனுஷ் இயக்கவுள்ள 4வது படத்தின் அப்டேட், கௌதம் கார்த்திக்கின் அடுத்தப்படம் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளது.
இன்றைய சினிமா செய்திகள்: தமிழக மக்களின் மிகப்பெரிய பொழுதுப்போக்கு தளமாக சினிமா திகழ்ந்து வருகிறது. ஒரு பக்கம் சின்னத்திரை, மறுபக்கம் பெரிய திரை என இரண்டு தளங்களிலும் நாள்தோறும் ஏராளமான நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்றைய நாளில் (செப்டம்பர் 12) இந்திய சினிமா, தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில் நடைபெற்ற சில முக்கியச் செய்திகளை தொகுப்பாக நாம் காணலாம். நடிகர் தனுஷ் இயக்கவுள்ள 4வது படத்தின் அப்டேட், கௌதம் கார்த்திக்கின் அடுத்தப்படம், மீண்டும் இணையும் சுந்தர் சி- வடிவேலு கூட்டணி என பல தகவல்களை காணலாம்.
-
சர்தார் 2 படத்தின் டீசர் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு – குஷியில் ரசிகர்கள்!
மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா உட்பட பலரின் நடிப்பில் உருவாகி வரும் சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் அப்டேட் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான சர்தார் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்த நிலையில் சர்தார் இரண்டாம் பாகத்தின் டீசர் தயாராகி உள்ளதாக சொல்லப்படுகிறது. கார்த்தி நடிக்கும் மெய்யழகன் படம் செப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படத்தின் இடைவேளையில் டீசர் ஒளிபரப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரஜினியின் தீவிர ரசிகன் நான் – கூலி படத்தில் நடிக்க வந்த கதையைச் சொன்ன உபேந்திரா
கூலி படத்தில் தான் நடிக்க வந்த கதையை கன்னட நடிகர் உபேந்திரா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். கூலி படத்தில் நடிப்பதற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்னை தொடர்பு செய்து கொண்டு கதையின் ஒன்லைனர் பற்றி சொன்னார். நான் என்னிடம் எதுவும் சொல்ல வேண்டாம். நான் இந்த படத்தில் இருக்க விரும்புகிறேன். நான் நடிகர் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகன். யார் தான் இப்படியான ஒரு வாய்ப்பை வேண்டாம் என சொல்வார்கள் என கூறியதாக உபேந்திரா தெரிவித்துள்ளார்.
-
கௌதம் கார்த்திக் படத்துக்கு வசனம் எழுதும் ராஜூ முருகன்
நடிகர் கௌதம் கார்த்திக்கின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அவர் இன்று தனது 34 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கௌதம் கார்த்திக்கின் அடுத்த படத்தை தினா ராகவன் என்பவர் இயக்க உள்ளார். அரசியல் சார்ந்த கதைகளத்தை மையமாகக் கொண்ட இப்படத்திற்கு இயக்குனர் ராஜூ முருகன் வசனம் எழுதுகிறார். இப்படத்தை டாடா படத்தின் இயக்குனர் கணேஷ்.கே.பாபு தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இயக்குநர் தனுஷ் படத்தில் வில்லனாகும் அருண் விஜய்- விரைவில் வெளியாகும் தகவல்
பவர் பாண்டி, ராயன் ஆகிய இரு படங்களை இயக்க நடிகர் தனுஷ் அடுத்ததாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி வருகிறார் இதனிடையே தனுஷ் இயக்கும் நான்காவது படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. புதுமுக தயாரிப்பாளர் ஆகாஷ் என்பவர் ரூபாய் 120 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கும் இந்தப் படத்தில் தனுஷ் ஹீரோவாகவும், அருண் விஜய் வில்லன் ஆகவும், அசோக் செல்வன் முக்கியமான ரோலிலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
-
ரஜினிகாந்தையும், கமல்ஹாசனையும் மனதில் வைத்து கதை எழுதினேன் – இயக்குநர் பிரேம்குமார்
96 படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரேம்குமார் அடுத்ததாக நடிகர் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமியை வைத்து மெய்யழகன் என்ற படத்தில் இயக்கியுள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் கதையும் 96 படத்தைப் போல ஒரே இரவில் நடப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதையை எழுதும்போது கார்த்தி கேரக்டரில் ரஜினிகாந்தையும், அரவிந்த்சாமி கேரக்டரில் கமல்ஹாசனையும் நினைவில் வைத்து எழுதியதாக பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.
-
14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் சுந்தர் சி -வடிவேலு கூட்டணி
நடிகர் வடிவேலு இன்று தனது 63வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவர் நடித்து வரும் கேங்கர்ஸ் என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. சுந்தர் சி இயக்கும் இப்படத்தில் வடிவேலு காமெடி கேரக்டரில் நடிக்கிறார். நகரம் மறுபக்கம் படத்துக்கு பிறகு 14 வருடங்கள் கழித்து சுந்தர் சியும், வடிவேலுவும் இணைந்து நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.