5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

GOAT Movie Review: ‘கோட்’ படம் எப்படி இருக்கு? முதல் விமர்சனம் இதோ!

The Greatest of All Time Twitter Review : வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருப்பது குறிப்பிடத்தக்கது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனத்தின் 25வது படமாக உருவாகியுள்ள தளபதி விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் அதிகாலை 4:00 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது.

GOAT Movie Review: ‘கோட்’ படம் எப்படி இருக்கு? முதல் விமர்சனம் இதோ!
கோட் பட விமர்சனம்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 05 Sep 2024 08:13 AM

‘கோட்’ படம்  விமர்சனம் : நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ இன்று உலகம் முழுவதும் திரையங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் படத்தை பார்த்தவர்கள் தங்களது கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் இந்தப் படத்தில் விஜயுடன் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாக்‌ஷி செளதரி, லைலா, வைபவ் , பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். எ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தைத் தயாரித்து வருகிறார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் தமிழகத்தை தவிற மற்ற மாநிலங்களில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிக்கப்பட்ட நிலையில் படத்தைப் பார்த்தவர்கள் சமூக வலைதளத்தில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருப்பது குறிப்பிடத்தக்கது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனத்தின் 25வது படமாக உருவாகியுள்ள தளபதி விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் அதிகாலை 4:00 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் காலை 9 மணிக்கும் “தி கோட்” படத்தின் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட உள்ளன. மேலும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு சிறப்புக்காட்சிக்கு அனுமதி அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் காலை 9 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் காலை 9 மணிக்கு காட்சி தொடங்கி நள்ளிரவு 2 மணிக்குள் காட்சிகள் அனைத்தையும் முடித்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்திற்கு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, தெலுங்கான மாநிலங்களில் அதிகாலை 4 மணி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கோட் படம் பூர்த்தி செய்ததா என்பதைப் பார்க்கலாம்…

Latest News