5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

GOAT Movie Review: டைட்டில் முதல் கிளைமேக்ஸ் வரை ட்விஸ்ட்.. கோட் பட விமர்சனம் இதோ!

Greatest of All Time Movie Review: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் “தி கோட்”. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் மீனாட்சி சௌத்ரி ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் சினேகா, லைலா, பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், யோகிபாபு, விடிவி கணேஷ், வைபவ், ஜெயராம், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் விஜய் நடித்துள்ளார்.

GOAT Movie Review: டைட்டில் முதல் கிளைமேக்ஸ் வரை ட்விஸ்ட்.. கோட் பட விமர்சனம் இதோ!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 05 Sep 2024 09:51 AM

கோட் பட விமர்சனம்: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் “தி கோட்”. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் மீனாட்சி சௌத்ரி ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் சினேகா, லைலா, பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், யோகிபாபு, விடிவி கணேஷ், வைபவ், ஜெயராம், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் விஜய் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் AI  தொழில்நுட்பம் மூலம் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தையும் காட்சிப்படுத்தியுள்ளார்கள். டிக்கெட்டில் சாதனை, படம் பற்றி வெளியான தகவல்கள் ஒருபுறம் என கோட் படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறிய நிலையில் அதன் விமர்சனத்தை நாம் இங்கு காணலாம்.

படத்தின் கதை

தன் மனைவி சினேகாவுக்கு தெரியாமல் விஜய் பயங்கரவாத எதிர்ப்புப் படையின் சிறப்புக் குழுவில் பணியாற்றி வருகிறார். இதே குழுவில் பிரசாந்த், கல்யாண் பிரபு தேவா ஆகியோரும் உள்ளனர்.இதனிடையே சினேகா இரண்டாவதாக கர்ப்பமாக இருக்கும் நிலையில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தாய்லாந்துக்கு செல்கிறார். அங்கு தனது மகன் ஜீவனை ( இன்னொரு விஜய்) இழக்கும் சூழல் உண்டாகிறது. காந்தி தன் மகனின் மரணத்திற்கு தானே காரணம் என நினைத்து யங்கரவாத எதிர்ப்புப் படை பணியை விட்டு விலகுகிறார்.

இதற்கிடையில் 15 வருடங்கள் கழித்து விஜய் ஜீவனை மாஸ்கோவில் சந்திக்கிறார். அவனை இந்தியாவுக்குக் கொண்டு வருகிறார். எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ​​விஜய் கண் முன்னே ஜெயராம் மர்ம நபர்களால் கொல்லப்படுகிறது. தொடர்ந்து விஜய்யின் நெருங்கிய நண்பர்கள் ஒவ்வொருவராக இறந்து போகின்றனர். இந்த கொலைகளுக்கு பின்னணியில் இருப்பது யார் என கண்டுபிடிக்க முயற்சிக்கையில் ட்விஸ்ட் காத்திருக்கிறது. அது என்ன? தனக்கும், தன்னை சுற்றியிருப்பவர்களுக்கும் நேர்ந்த சிக்கலை விஜய் எப்படி கையாண்டார் என்பதே இப்படத்தின் கதையாகும்.

தியேட்டருக்கு செல்லலாமா?

விஜய்யின் அரசியல் பிரவேசம் காரணமாக இப்படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதனை 100% தனது திரைப்பிரவேசத்தால் பூர்த்தி செய்திருக்கிறார் விஜய். காமெடி, சென்டிமெண்ட், டயலாக் டெலிவரி, ஆக்ஷன் என அனைத்து ஏரியாவிலும் புகுந்து விளையாடி இருக்கிறார்.ஆனால் முதல் பாதியை ஒப்பிடுகையில் இரண்டாம் பாதி நன்றாகவே இருக்கிறது. இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் விஜய் இரண்டுக்கும் மாறுபட்ட நடிப்பை வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார். குறிப்பாக மகன் விஜய் கேரக்டர் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது. பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், சினேகா,லைலா, மீனாட்சி சௌத்ரி, யோகிபாபு, அஜ்மல் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்து அவர்கள் திரைக்கதையில் கொஞ்சம் குறைவான இடமே ஒதுக்கப்பட்டுள்ளதால் பெரிய அளவில் மனதில் ஒட்டவில்லை.

ஒரு காலத்தில் பாடல்களிலும் பின்னணி இசையிலும் கொண்டாடப்பட்ட யுவன் ஷங்கர் ராஜா கோட் படத்தில் ஏமாற்றம் அளித்துள்ளார். மேலும் பல இடங்களில் தனது சர்ப்ரைஸ் பேக்கேஜை வெங்கட் பிரபு இறக்கி விட்டுள்ளார். மொத்தத்தில் கோட் படம் தளபதி விஜய் ரசிகர்களுக்கும் மட்டுமல்லாமல் பார்வையாளர்களுக்கும் நல்ல பொழுதுப்போக்கு அம்சம் நிறைந்த ஒன்றாகும். கண்டிப்பாக குடும்பத்துடன் தியேட்டரில் படம் பார்க்கலாம்!

Latest News