5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

The Greatest Of All Time: விஜய்யின் கோட் ரிலீஸ்.. விடிய விடிய ரசிகர்கள் கொண்டாட்டம்..

Thalapathy Vijay: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் அரசியல் கட்சி தொடங்கி விட்டதால் இன்னும் 2 படங்களில் மட்டுமே நடிப்பேன் என கடந்த பிப்ரவரி மாதம் தெரிவித்திருந்தார். அந்த இரண்டு படங்களில் ஒன்றாக செப்டம்பர் 5 ஆம் தேதியான இன்று The Greatest Of All Time படம் வெளியாகியுள்ளது. பிகில் படத்துக்குப் பின் ஏஜிஎஸ் நிறுவனம் விஜய்யை வைத்து 2வது முறையாக இந்த படத்தை தயாரித்துள்ளது.

The Greatest Of All Time: விஜய்யின் கோட் ரிலீஸ்.. விடிய விடிய ரசிகர்கள் கொண்டாட்டம்..
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 05 Sep 2024 05:35 AM

தி கோட்: நடிகர் விஜய் நடித்துள்ள The Greatest Of All Time படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் விடிய விடிய ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் அரசியல் கட்சி தொடங்கி விட்டதால் இன்னும் 2 படங்களில் மட்டுமே நடிப்பேன் என கடந்த பிப்ரவரி மாதம் தெரிவித்திருந்தார். அந்த இரண்டு படங்களில் ஒன்றாக செப்டம்பர் 5 ஆம் தேதியான இன்று The Greatest Of All Time படம் வெளியாகியுள்ளது. பிகில் படத்துக்குப் பின் ஏஜிஎஸ் நிறுவனம் விஜய்யை வைத்து 2வது முறையாக இந்த படத்தை தயாரித்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் ஹீரோயினாக மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மைக் மோகன்,  பிரஷாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, ஜெயராம், வைபவ், அஜ்மல் அமீர், யோகிபாபு, பிரேம்ஜி அமரன் என ஏகப்பட்ட நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். The Greatest Of All Time படத்தில் நடிகர் விஜய் 2 வேடங்களில் நடித்துள்ளார். அதில் இளம் வயது கேரக்டருக்காக டிஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் ஏஐ தொழில்நுட்பம் மூலம் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கேரக்டரையும் கொண்டு வந்து சாதித்துள்ளனர்.

இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்போடு கோட் படம் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. ட்ரெய்லர் மட்டுமே வெளியான நிலையில் வழக்கமாக பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கும் இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை. மேலும் தயாரிப்பாளர், இயக்குநர், சக நடிகர் நடிகைகள் அனைவரும் கோட் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் புகழ்ந்து தள்ளியிருந்தனர். இதனால் ஆரம்பத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட கோட் படம் கடைசியில் யாராவது டிக்கெட் இருந்தா கொடுங்க என கேட்கும் அளவுக்கு ரசிகர்களால் கொண்டாடும் படமாக மாறிவிட்டது.

கோட் படம் வெளியாவதை முன்னிட்டு தியேட்டரில் ரசிகர்கள் நேற்று முதலே குவியத் தொடங்கினர். பேனர், கட் அவுட். போஸ்டர் என தியேட்டர் திருவிழாக்கோலம் பூண்டது. டிக்கெட் கிடைக்காமல் பலரும் வெளிசந்தையில் பல ஆயிரங்களைக் கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளனர். மேலும் டிஜே, செண்டை மேளம், தாரை தப்பட்டை முழங்க விஜய் படம் வெளியானது. விடிய விடிய தூங்காமலும், வீட்டுக்கே செல்லாமலும் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடினர். தமிழ்நாட்டை தவிர்த்து பிற மாநிலங்களில் படம் 4 மணிக்கு வெளியான காரணத்தினால் பலரும் அங்கு சென்று படம் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

Latest News