5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

The Greatest Of All Time‌: “ஒரே ஒரு நாள் மட்டும்” – விஜய்யின் கோட் பட சிறப்பு காட்சிக்கு அனுமதி!

கோட் சிறப்பு காட்சி: நடிகர் விஜய் நடித்துள்ள  The Greatest Of All Time‌ படத்திற்கு நாளை ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த படம் நாளை வெளியாக உள்ள நிலையில் தமிழகம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட உள்ளது. அதனால் தமிழகத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர். இதனிடையே தமிழகத்திலும் அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்படுமா […]

The Greatest Of All Time‌: “ஒரே ஒரு நாள் மட்டும்” – விஜய்யின் கோட் பட சிறப்பு காட்சிக்கு அனுமதி!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 04 Sep 2024 16:40 PM

கோட் சிறப்பு காட்சி: நடிகர் விஜய் நடித்துள்ள  The Greatest Of All Time‌ படத்திற்கு நாளை ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த படம் நாளை வெளியாக உள்ள நிலையில் தமிழகம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட உள்ளது. அதனால் தமிழகத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர். இதனிடையே தமிழகத்திலும் அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்படுமா என கேள்வி எழுந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு பொங்கல் பட வெளியீடு வரை தமிழ்நாட்டில் அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது.  யாரும் எதிர்பாராதவிதமாக விஜய், அஜித் படங்கள் நேருக்கு நேர் மோதியதால் இரவு 1 மணி மற்றும் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது.

Also Read: Dharmapuri: சாப்பிட்டதற்கு பணம் கொடுக்கணுமா.. ஷூவை காட்டிய எஸ்.எஸ்.ஐ.. சஸ்பெண்ட் செய்த எஸ்.பி.,

அப்போது சென்னை ரோகிணி திரையரங்கில் நடைபெற்ற ரசிகர்கள் கொண்டாட்டத்தின் போது லாரி மீது ஏறி ஆடிய இளைஞர் ஒருவர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் அதிகாலை சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டு காலை சிறப்பு காட்சி 9 மணிக்கு தொடங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் கடந்த ஆண்டு வெளியான விஜய்யின் லியோ படத்திற்கு அதிகாலை 7 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு நீதிமன்றம் படியேறியும் அனுமதி கிடைக்காமல் போனது. இந்த நிலையில் தி கோட் படத்திற்கு நாளை மட்டும் காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இது விஜய் ரசிகர்களுடைய ஒரு பக்கம் ஆறுதலையும், மறுபக்கம் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

Also Read: Paralympic 2024: இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி.. பாராலிம்பிக்கில் அதிக பதக்கங்களை வென்று புதிய சாதனை!

காரணம் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு தான் கோட் படம் வெளியாகிறது. அப்படியிருக்கையில் நாளை ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கினால் எப்படி? என கேள்வி எழுப்பிருள்ளனர். மேலும் காலை 9 மணிக்கு காட்சி தொடங்கி நள்ளிரவு 2 மணிக்குள் காட்சிகள் அனைத்தையும் முடித்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Greatest Of All Time‌ படம்

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில்  நடிகர் விஜய் 2வது முறையாக நடித்துள்ள படம்The Greatest Of All Time‌. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல், லைலா, சினேகா, விடிவி கணேஷ், யோகி பாபு, வைபவ், பிரேம்ஜி அமரன், ஜெயராம் உள்ளிட்ட ஏகப்பட்ட பேர் இந்த படத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூலை அள்ளும் என விஜய் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Latest News