OTT Movie Update: வாழை முதல் தங்கலான் வரை.. செப்டம்பரில் வெளியாகும் ஓடிடி ரிலீஸ் படங்கள்!
OTT Update: செப்டம்பர் மாதத்தில் எந்தெந்த புதுப்படங்கள்,எந்தெந்த ”ஒடிடி”யில் தளங்களில் வெளியாகும், எப்போது வெளியாகும் என்பதைப் பற்றி முழு விவரங்களைப் பற்றிப் பார்க்கலாம். இந்த லிஸ்டில் சமீபத்தில் வெளியான வாழை முதல் தங்கலான் வரை படங்கள் இடம்பெற்றுள்ளன.
ஓடிடி ரிலீஸ் படங்கள் : தமிழ் சினிமாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியான திரைப்படங்கள் தற்போது ஓடிடி இணையதளங்களில் வெளியாக உள்ளன. இதில் தமிழ் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளின் படங்களும் இடம் பெறுகிறது. மற்றும் ஆக்ஷன் கதைக்களம் மற்றும் திரில்லர் படங்களும் இடம் பெறுகிறது. எந்தெந்த படங்கள் வெளியாகிறது என்பதை பார்க்கலாம்.
ரகு தாத்தா :
நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்பில் வெளியான ரகு தாத்தா திரைப்படம் கடந்த மாதம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான நிலையில் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இயக்குநர் சுமன் குமார் இயக்கத்தில் எம்எஸ் பாஸ்கர், ரவீந்திர விஜய்,தேவதர்ஷினி, ஆனந்த சாமி மற்றும் பலர் நடிகர்கள் நடித்த இத்திரைப்படம் “ஹோம்பலே ஃப்லிம்ஸ்” திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் வெளியான திரைப்படமாகும். அரசியல் மற்றும் நகைச்சுவைக் கலந்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான ”ரகு தாத்தா” என்ற தலைப்பு கடந்த ஆண்டு டிசம்பர் 2022ல் அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் படப்பிடிப்பும் அதே மாதத்தில் தொடங்கப்பட்டது. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னையில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2023ஆம் ஆண்டு மே மாதத்தில் படத்தின் பாதி படப்பிடிப்பு நிறைவடைந்தது. இத்திரைப்படம் 15 ஆகஸ்ட் 2024 அன்று இந்தியச் சுதந்திர தினத்தன்று திரையரங்குகளில் வெளியான நிலையில். பல விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது பெற்றுவந்தது. தற்போது இத்திரைப்படம் செப்டம்பர் 13ஆம் தேதி “Zee5 Tamil”ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
வாழை:
இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து மற்றும் அவரே இயக்கிய திரைப்படம்தான் ‘வாழை’. இத்திரைப்படத்தை “டிஸ்னி + ஹாஸ்டார், நவ்வி ஸ்டுடியோ, பாஃர்மர்சு மாசுடர் பிளான் புரொடக்சன் போன்ற பல தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்தில் நடிகர் கலையரசன், நிகிலா விமல், ஜே.சதீஷ் குமார், திவ்யா துரைசாமி, ஜானகி, நிவேதிதா இராஜப்பன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இயக்குநர் மாரி செல்வராஜ் தனது சொந்த வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுத்த இப்படம் மாபெரும் வெற்றியைக் கொடுத்தது. இப்படம் திரையரங்குகளில் மக்களின் பேராதரவைப் பெற்று அதிக வசூலை வாரிக்குவித்தது. ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியான இந்தத் திரைப்படம், வரும் செப்டம்பர் 27ஆம் தேதி “டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்” ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
Also Read: குளோனிங் கதாபாத்திரங்கள்.. தமிழில் வெளியான முதல் திரைப்படம் என்ன தெரியுமா?
தங்கலான்:
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில், “ஸ்டுடியோ கிரீன்” மற்றும் ”நீலம் புரொடக்சன்” ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவான திரைப்படம் தங்கலான். சியான் விக்ரமின் 61வது திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் பார்வதி திருவோத்து, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் இசையமைத்தார். இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது, தங்கச் சுரங்கத்திற்காக ஆங்கிலேயர்கள் நிலத்தைக் கைப்பற்றத் செய்த திட்டமும், அவர்களை எதிர்த்து பழங்குடியினர் எடுத்த துணிச்சலான போராட்டமுமே இப்படத்தின் கதைக்களம். இத்திரைப்படமானது இந்திய விடுதலை நாளான 2024 ஆகஸ்ட் 15 அன்று வெளியானது. இத்திரைப்படமானது செப்டம்பர் 20ஆம் தேதி “நெட்ஃபிளிக்ஸ்” ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
டிமாண்டி காலனி 2:
தமிழில் 2015 ஆம் ஆண்டு இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘டிமாண்டி காலனி”. அதன் தொடர்ச்சியாக 2022 இல், வெங்கி வேணுகோபால் டிமாண்டி காலனி 2 தொடர்ச்சியின் இயக்குநராக அறிவிக்கப்பட்டார். படத்தின் தொடர்ச்சியான இந்த ‘டிமாண்டி காலனி 2”சமீபத்தில் வெளியானது. திகிலூட்டும் இந்த ஹாரர் படத்தில் நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ளனர். திரையரங்குகளில் மக்களின் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் வசூலைக் குவித்தது. இந்தத் திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது .2024 ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது . தற்போது இப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி “Zee5 Tamil” ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
Also Read: சர்தார் 2 டீசர்.. மீண்டும் இணையும் சுந்தர் சி-வடிவேலு.. இன்றைய டாப் சினிமா செய்திகள்!
ஸ்ட்ரீ 2:
2024 ஆம் ஆண்டு வெளியான ஸ்ட்ரீ 2 இந்திமொழி மற்றும் பல மொழிகளில் வெளியான நகைச்சுவை மற்றும் திகில் கலந்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தை இந்தி இயக்குநர் ”அமர் கௌஷிக்” இயக்கியுள்ளார். 2018ல் வெளியான ஸ்ட்ரீயின் தொடர்ச்சியாகும்.இத்திரைப்படத்தில் ராஜ்குமார் ராவ், ஷரத்தா கபூர், பங்கஜ் திரிபாதி, அபிஷேக் பானர்ஜி மற்றும் அபர்சக்தி குரானா போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் திரையரங்குகளில் மாபெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்தது. இந்தப் படம் செப்டம்பர் 27ஆம் தேதி “அமேசான் பிரைம்” ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.