Bijili Ramesh Death: தமிழ் திரைப்பட நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் தற்போது யார் எப்போது பிரபலமாவார் என்று யாராலும் சொல்ல முடியாது. அதுவும் இன்றைய சமூக வலைத்தள உலகில் சினிமாவில் நடிப்பது என்பது அத்தனை கடினமல்ல. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமாகி எத்தனையோ பேர் சினிமாவில் நடித்துள்ளனர். அப்படி ஒரு சாதாரண யூடியூப் நிகழ்ச்சி ஒருவருக்கு ஒளிமயமான எதிர்காலத்தை கொடுத்தது அவர்தான் பிஜிலி ரமேஷ்.
பிஜிலி ரமேஷ் காலமானார்: தமிழ் திரைப்பட நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். பிஜிலி ரமேஷ் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டிக்கு பிறகு மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து பல யூடியூப் சேனல்கள் அவரை பேட்டி எடுத்து அதன் மூலம் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2019 ஆம் ஆண்டு ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வெளியான நட்பே துணை படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். தமிழ் சினிமாவில் தற்போது யார் எப்போது பிரபலமாவார் என்று யாராலும் சொல்ல முடியாது. அதுவும் இன்றைய சமூக வலைத்தள உலகில் சினிமாவில் நடிப்பது என்பது அத்தனை கடினமல்ல. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமாகி எத்தனையோ பேர் சினிமாவில் நடித்துள்ளனர். அப்படி ஒரு சாதாரண யூடியூப் நிகழ்ச்சி ஒருவருக்கு ஒளிமயமான எதிர்காலத்தை கொடுத்தது என்றால் அவர்தான் பிஜிலி ரமேஷ்.
மேலும் படிக்க: சென்னையில் அம்பத்தூர், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின் தடை.. வேறு எங்கே? லிஸ்ட் இதோ..
விஜே சித்து என்பவர் தனது யூடியூப் நிகழ்ச்சி ஒன்றிற்காக சாலையில் நடந்து சென்ற பிஜிலி ரமேஷ் என்பவரை நிறுத்தி பேட்டி எடுக்கின்றார். அப்போது பிஜிலி ரமேஷுக்கு தெரியாது அந்த பேட்டி தனது வாழ்க்கையை மாற்றப்போகிறது என்று. அந்த பேட்டி வைரலாகவே பிஜிலி ரமேஷுக்கு பட வாய்ப்புகள் தேடி வந்தது. அவர் ஒரு தீவிரமான ரஜினி ரசிகர். அதன்பிறகு விஜய் டிவி நிகழ்ச்சிகள், சினிமா என தனது வாழ்க்கை சினிமா உலகில் பிஸியானது.
அவரது குடிப்பழக்கம் அவருக்கு எமனாக வந்தது எனலாம். நன்றாக சென்றுகொண்டு இருந்த வாழ்க்கையில் குடிப்பழக்கம் இன்று அவரது உயிரையே எடுத்துள்ளது. கடந்த சில மாதங்களாக கல்லீரல் பிரச்சினையில் சிக்கி சிகிச்சை எடுத்துவந்துள்ளார். ஆளே அடையாளம் தெரியாத வகையில் மாறிப்போன அவரது நிலை கண்டு ரசிகர்கள் வருந்தினர்.
மேலும் படிக்க: 35 அடி சிவாஜி சிலை.. கீழே சரிந்து விழுந்து சுக்குநூறாக உடைந்த சம்பவம்..
இந்த நிலையில் தனது 46 வயதில் பிஜிலி ரமேஷ் காலமானார். அவருக்கு கிஷோர் என்ற மகன் உள்ளார். திடீர் புகழ் , பிரபலம் என நன்றாக சென்றுகொண்டு இருந்த அவரது வாழ்க்கையை குடிப்பழக்கம் முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை 5 மணியளவில் சென்னை எம்.ஜி.ஆர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.