5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலக என்ன காரணம் – ஓபனாக பேசிய நடிகை

Pandian Stores Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் அரசி கேரக்டரில் நடிகை சத்யா சாய் நடித்து வருகிறார். அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முதல் பாகத்தில் ஒரு சில நாட்கள் மட்டுமே நடித்திருந்த நிலையில் பிறகு எதற்காக சீரியலில் இருந்து விலகி இருந்தார் என்பது பற்றி முதல் முறையாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலக என்ன காரணம் – ஓபனாக பேசிய நடிகை
நடிகை சத்யா சாய்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Aug 2024 15:48 PM

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலக என்ன காரணம் என்பது குறித்து நடிகை சத்யா சாய் வெளிப்படையாக பேசியுள்ளது தற்போது வைரலாகி வருகின்றது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் – தம்பி பாசம், கூட்டு குடும்பம் என வாழ்க்கையை எடுத்துக்காட்டாக காட்டும் இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ஸ்டாலின் , சுஜிதா தனுஷ், வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன் என பல நடிகர்கள் நடித்து வந்தனர். மூர்த்தி – தனம், ஜீவா – மீனா, கதிர் – முல்லை, கண்ணன் – ஐஸ்வர்யா என நான்கு தம்பதிகளை சுற்றி இந்த கதை சென்றது. இதில் ஜீவா – மீனா, கதிர் – முல்லை ஜோடிகளுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் இந்த சீரியல் முடிவடைந்ததை தொடர்ந்து தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த இரண்டாவது சீரியலில் முதல் பாகத்தில் நடித்த ஸ்டாலின் மற்றும் ஹேமா இருவரும் பாண்டியன் மற்றும் மீனா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் முதல் பாகத்தில் மீனாவின் அப்பா அம்மாவாக நடித்த அவர்களே இந்த இரண்டாவது பாகத்திலும் அப்பா – அம்மாவாக நடித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்த சீரியலில் ஒரு மாற்றம் நடந்தது. அது என்ன என்றால் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செந்தில் என்ற கதாப்பாத்திரம் மாற்றப்பட்டது. முதல் சீசனில் நடித்த ஜீவா இந்த சீசனில் செந்தில் கதாப்பாத்திறத்திற்கு மாற்றப்பட்டார். முன்னதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவின் கணவராக நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். இவர்களது ஜோடி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தது. இந்நிலையில் தற்போது இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது.

Also read… Cinema Rewind: மலையாள சினிமா மக்களின் ரசனையை மாற்றியுள்ளது – ஏ.ஆர்.முருகதாஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் அரசி கேரக்டரில் நடிகை சத்யா சாய் நடித்து வருகிறார். அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முதல் பாகத்தில் ஒரு சில நாட்கள் மட்டுமே நடித்திருந்த நிலையில் பிறகு எதற்காக சீரியலில் இருந்து விலகி இருந்தார் என்பது பற்றி முதல் முறையாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.

முஸ்லீம் பெண் ரோலில் தான் அவரை நடிக்க ஒப்பந்தம் செய்து இருக்கின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைக்குட்டி கண்ணன் ஜோடியாக தான் அந்த ரோல் இருக்கும் என்றும் கூறி இருக்கின்றனர். ஹிந்து பையன் – முஸ்லீம் பெண் காதல் என்பது போல கதை இருக்கும் எனவும் கூறினார்களாம். ஆனால் சில நாட்கள் ஷூட்டிங் நடந்தபிறகு அந்த ரோல் வேண்டாம் என முடித்துவிட்டார்களாம். சேனல் தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததால் தான் அது நடந்திருக்கிறது என தற்போது சத்யா சாய் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Latest News