5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

தேதி குறிச்சாச்சு… வேட்டையன் இசை வெளியீட்டு விழா – படக்குழு வெளியிட்ட அப்டேட்

இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. தென் மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு மும்பை ராஜஸ்தான் பகுதிகளில் நடைபெற்றதை தொடர்ந்து தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது படத்தின் இசை வெளியீட்டு விழாவின் தேதி மற்றும் இடம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

தேதி குறிச்சாச்சு… வேட்டையன் இசை வெளியீட்டு விழா – படக்குழு வெளியிட்ட அப்டேட்
வேட்டையன்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Sep 2024 11:59 AM

நடிகர் ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கு எப்போது நடைபெறுகிறது என்பது குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். கூட்டத்தில் ஒருத்தன், ஜெய் பீம் ஆகிய படங்களை இயக்கிய ஞானவேல் இப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. தென் மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு மும்பை ராஜஸ்தான் பகுதிகளில் நடைபெற்றதை தொடர்ந்து தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது படத்தின் இசை வெளியீட்டு விழாவின் தேதி மற்றும் இடம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் போலி என்கவுண்டருக்கு எதிரான கதைக்களம் கையாளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கல்விக் கொள்கைக்கு ஆதரவான பல கருத்துக்களும் இந்த படத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் ரஜினிகாந்த் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த், வேட்டையன் திரைப்படத்தில் இஸ்லாமியராக நடிப்பதாக கூறப்படுகிறது. ரஜினி, ஏற்கனவே லால் சலாம் படத்தில் இஸ்லாமியராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வேட்டையன் திரைப்படம், வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதே நாளில், சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ திரைப்படமும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளதால், கோலிவுட்டில் பல மாதங்களுக்குப் பிறகு இரு பெரும் நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இரண்டு படங்களில் ஒரு படம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியான நிலையில், வேட்டையன் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக உள்ளதை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஆந்திரா மாநிலம், கடப்பாவில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு சூட்டிங்கினை முடித்துவிட்டு, இமயமலைக்கு ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பின்னர் பத்ரிநாத், கேதார்நாத் உள்பட பல்வேறு இடங்களுக்கு அவர் சென்று வந்தார். முன்னதாக மஞ்சுவாரியர், அபிராமி, துஷாராவைத் தொடர்ந்து ரித்திகா சிங் உட்படப் பலரும் டப்பிங் பேசிவிட்டனர். ரஜினி, கூலி படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால், அதில் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் வேட்டையன் படத்திற்கு டப்பிங் பேசுவார் என கூறப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் டப்பிங் பணியை முடித்தார்.

Also read… அஜித்தின் விடாமுயற்சி டீசர் எப்போது வெளியாகிறது? வைரலாகும் தகவல்

இதனை தொடர்ந்து கடந்த 9-ம் தேதி வேட்டையன் படத்திலிருந்து மனசிலாயோ பாடலை படக்குழு வெளியிட்டது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் யூடியூபில் அதிக பார்வைகளையும் பெற்றது. 27 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் திரைப்படத்திற்கு மலேசியா வாசுதேவன் பாடியுள்ளார். அவரது குரலை ஏ.ஐ தொழில் நுட்ப உதவியுடன் மீண்டும் உயிர் பெறச் செய்துள்ளனர். இப்பாடலில் மலையாள வரிகளும் இடம் பெற்றுள்ளது. இதில் மலையாள வரிகளை அனிருத் பாடியுள்ளார். தமிழ் வரிகளுக்கு மலேசியா வாசுதேவனின் குரல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாடலை தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வரும் 20-ம் தேதி வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை நேரு ஸ்டேடியத்தில் மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News