5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Paridhabangal: திருப்பதி லட்டு விவகாரம்.. மன்னிப்பு கேட்ட சுதாகர் – கோபி!

Tirupati Laddu Controversy: Youtube வலைதளத்தில் பரிதாபங்கள் சேனல் மிகவும் பிரபலமானது. இதனை சுதாகர் மற்றும் கோபி இணைந்து நடத்தி வருகின்றனர். சமூகத்தில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் அலசி ஆராய்ந்து அதனை பகடி செய்து வீடியோவாக வெளியிடுவது தான் இந்த சேனலின் வழக்கம். அரசியல், சினிமா என எந்த துறையையும் விட்டு வைக்காமல் பகடி செய்வதால் ரசிகர்கள் மத்தியில் இந்த சேனலுக்கு மிகப்பெரிய அளவில் மவுசு உள்ளது.

Paridhabangal: திருப்பதி லட்டு விவகாரம்.. மன்னிப்பு கேட்ட சுதாகர் – கோபி!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 25 Sep 2024 08:56 AM

பரிதாபங்கள்:  இந்திய அளவில் சர்ச்சையான திருப்பதி லட்டு விவகாரத்தை வைத்து வேடிக்கையாக வீடியோ வெளியிட்டதற்காக பிரபல யூட்யூப் வலைத்தளமான பரிதாபங்கள் குழு மன்னிப்பு கேட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். வீடியோ சர்ச்சையான நிலையில் இது தொடர்பாக எக்ஸ் வலைதள பக்கத்தில் பரிதாபங்கள் குழு மன்னிப்பு தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளது. அதில், “கடைசியாக பரிதாபங்கள் சேனலில் வெளிவந்த வீடியோ முழுக்க நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்டது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை அதையும் மீறி சிலரின் மனம் புண்பட்டிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்து சம்பந்தப்பட்ட காணொளியை நீக்கி உள்ளோம் இதுபோல் வருங்காலங்களில் நடைபெறாது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்” என கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்குள் வீடியோவை பல லட்சம் பேர் பார்த்து விட்டு அதனை பதிவிறக்கம் செய்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். மேலும் அதில் சுதாகர், கோபிக்கு ஆதரவாகவும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Also Read: புரட்டாசி மாதம்.. திருப்பதி போக முடியலையா? வேண்டுதலை நிறைவேற்ற இங்கு போகலாம்!

பரிதாபங்கள் சேனல்

Youtube வலைதளத்தில் பரிதாபங்கள் சேனல் மிகவும் பிரபலமானது. இதனை சுதாகர் மற்றும் கோபி இணைந்து நடத்தி வருகின்றனர். சமூகத்தில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் அலசி ஆராய்ந்து அதனை பகடி செய்து வீடியோவாக வெளியிடுவது தான் இந்த சேனலின் வழக்கம். அரசியல், சினிமா என எந்த துறையையும் விட்டு வைக்காமல் பகடி செய்வதால் ரசிகர்கள் மத்தியில் இந்த சேனலுக்கு மிகப்பெரிய அளவில் மவுசு உள்ளது.வாரத்திற்கு இருமுறை வீடியோ வெளியிடும் இந்த பரிதாபங்கள் குழுவில் இருந்து திருப்பதி லட்டு பரிதாபங்கள் என்ற பெயரில் வீடியோ ஒன்று வெளியானது.ஏற்கனவே திருப்பதி லட்டு விவகாரம் இந்திய அளவில் சர்ச்சையான நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோவை பார்த்த சிலர் சுதாகர் மற்றும் கோபிக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் தான் யூட்யூப் சேனல் இருந்து வீடியோ நீக்கப்பட்டுள்ளது.

Also Read: அஞ்சல FD திட்டத்தில் ரூ,25,000 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

திருப்பதி லட்டு விவகாரம்

உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் 2வது பணக்கார கடவுளாக கருதப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து வழிபட்டும், நேர்த்திக்கடன் செலுத்தியும் வருகிறார்கள். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் நிகழும் என்பது மக்களின் தளராத நம்பிக்கையாகும். அப்படிப்பட்ட திருப்பதியில் பிரசாதமாக பக்தர்களுக்கு லட்டு வழங்கப்படுகிறது. தரிசனம் முடித்து வரும் பக்தர்களுக்கு தலா ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படும்.

கூடுதல் லட்டு தேவைப்படுபவர்கள் தேவஸ்தானம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள லட்டு கவுண்டரில் பணம் கொடுத்து எத்தனை லட்டுகள் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளும் நடைமுறை உள்ளது. மற்ற லட்டுகளை காட்டிலும் திருப்பதி லட்டு எப்போதும் ஸ்பெஷல் தான்.

இப்படிப்பட்ட நிலையில் கடந்த வாரம் ஆந்திர அரசு சார்பில் வெளியிடப்பட்ட திருப்பதி லட்டு தொடர்பான தகவல்கள் ஒட்டுமொத்த இந்திய மக்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.

ஆந்திராவில் தற்போது முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில் திருப்பதியில் வழங்கப்படும் லட்டுவில் விலங்கு கொழுப்புகள் சேர்க்கப்பட்டதாக சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக குஜராத் ஆய்வகத்தில் லட்டு ஆய்வு செய்யப்பட்ட பிறகு வெளியான அறிக்கையை தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டு மிகப்பெரிய அளவில் பரபரப்பை உண்டாக்கியது. அந்த அறிக்கையில் திருப்பதி கோயில் லட்டுவில் மாட்டு கொழுப்பு,  பன்றிகொழுப்பு,  மீன் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களில் ஏதோ ஒன்று  கலக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் லட்டு தயாரிக்க நெய் அனுப்பிய திண்டுக்கலை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் நெய்யில் அப்படி எதுவும் கலப்படம் செய்யப்படவில்லை என குற்றச்சாட்டை அந்நிறுவனம் மறுத்தது.

மேலும் திருப்பதி கோயிலில் பரிகார பூஜைகள், ஹோமங்கள் நடத்தப்பட்டு லட்டுவில் ஏற்பட்ட பிரச்சனை முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குறைவில்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Latest News