5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Actress Sowmya: மகள் என சொல்லி எல்லை மீறிய தமிழ் இயக்குநர்.. பிரபல நடிகை பகீர் குற்றச்சாட்டு

மலையாளத்தில் நீலகுறுக்கன் அத்வைதம் உள்ளிட்ட  சில படங்களில் நடித்துள்ள சவுமியா இந்த விவகாரம் தொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள நிலையில் அவர் திடுக்கிடும் பல விஷயங்களை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, “எனக்கு 18 வயதாக இருக்கும்போது கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தேன். அப்போது எனது பெற்றோருக்கும் பெரிதாக சினிமா பற்றி எதுவும் தெரியாது. அந்த சமயத்தில் ஒரு தமிழ் படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு அமைந்தது.

Actress Sowmya: மகள் என சொல்லி எல்லை மீறிய தமிழ் இயக்குநர்.. பிரபல நடிகை பகீர் குற்றச்சாட்டு
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 06 Sep 2024 07:46 AM

நடிகை சவுமியா: மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி அறிக்கை மிகப்பெரிய புயலாக வீசிவரும் நிலையில், நடிகை சௌமியா தமிழ் பட இயக்குநர் ஒருவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் மலையாளத்தில் நீலகுறுக்கன் அத்வைதம் உள்ளிட்ட  சில படங்களில் நடித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர் திடுக்கிடும் பல விஷயங்களை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, “எனக்கு 18 வயதாக இருக்கும்போது கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தேன். அப்போது எனது பெற்றோருக்கும் பெரிதாக சினிமா பற்றி எதுவும் தெரியாது. அந்த சமயத்தில் ஒரு தமிழ் படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு அமைந்தது. அப்படத்தின் இயக்குநரே எனது தந்தையிடம் படத்தில் நடிக்க வைப்பதாக கூறி ஒரு வழியாக சம்ம்தம் வாங்கினார். இதற்காக பெரிய தொகையும் இயக்குநர் தரப்பிலிருந்து எனது தந்தையிடம் வழங்கப்பட்டது.

Also Read: Mango Leaves Benefits: உடல் ஆரோக்கியத்தை காக்கும் மா இலை.. சர்க்கரை நோய், இதய நோய்களை தடுக்கும் மருந்து..!

இதை தொடர்ந்து அந்த படத்தில் நடிக்க நான் ஒப்புக் கொண்டேன். படப்பிடிப்பின் போது இயக்குநரும் அவரது மனைவியும் என்னிடம் மிகவும் அன்பாக நடந்து கொண்டனர். அடிக்கடி அவர்கள் வீட்டிற்கு என்னை அழைத்து செல்வார்கள். அங்கு சென்றால் எனக்கு ராஜ மரியாதை தான் கிடைக்கும் இப்படியான நிலையில் ஒருநாள் அந்த இயக்குநரின் மனைவி வீட்டில் இல்லை. அப்போது அந்த இயக்குநர் என் அருகில் வந்தார். சற்றும் எதிர்பாராத வகையில் என்னை அவரின் மகளை போல நினைப்பதாக கூறி முத்தமிட்டார். அந்த நிகழ்வை என்னால் இன்றளவும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நான் ஏதோ தவறு செய்தவள் போன்ற உணர்வை அந்த சம்பவம் எனக்கு ஏற்படுத்தியது. அவர் என்னுடன் பாலியல் உறவு வைத்து குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என விரும்பினார். நான் அவரால் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டேன். கிட்டத்தட்ட ஓராண்டு காலம் அந்த இயக்குனரின் பாலியல் இச்சைக்கு அடிமையாக இருந்தேன். பயத்தால் இதை நண்பர்களிடம் கூட சொல்ல தயங்கினேன். மகளாக நினைப்பதாக சொல்லி குழந்தைப் பெற்றுக்கொள்ள விரும்பிய அந்த இயக்குநர் என் மனநிலை என்னை முழுவதுமாக சிதைத்து விட்டது. அந்தப் படம் முடியும் வரை நான் இயக்குநரின் பாலியல் அடிமை போன்று நடத்தப்பட்டதாக உணர்ந்தேன் என சௌமியா தெரிவித்துள்ளார்.

Also Read: Ravindra Jadeja: பாஜகவில் இணைந்தார் ஜடேஜா.. கிரிக்கெட்டை தொடர்ந்து அரசியலில் களம்!

மேலும் பாதுகாப்புக் கருதி பொதுவெளியில் அந்த இயக்குனரின் பெயரை தான் குறிப்பிடவில்லை என்றும், மலையாள சினிமா பாலியல் குற்றச்சாட்டுக்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணை குழுவிடம் புகார் அளிக்கும்போது முழு விவரங்களை அளிக்க உள்ளதாகவும் சௌமியா தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டு தமிழ், மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest News