இந்த வாரம் தியேட்டரில் என்னென்ன படங்கள் பார்க்கலாம்… லிஸ்ட் இதோ!
Movie Update: தமிழ் சினிமாவில் ஆகஸ்ட் மாதம் படங்களின் வெளியீடு வரிசைக் கட்டி காத்திருக்கிறது. முன்னதாக பல படங்கள் வெளியான நிலையில் அடுத்ததாக இந்த வாரம் தமிழ் சினிமாவில் கோலிவுட்டின் சில படங்கள் மட்டுமே வெளியாகிறது. மேலும் மற்ற மொழிகளில் என்னென்ன படங்கள் வெளியாகிறது என்பதையும் காணலாம்.
ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடித்திருக்கும் படம் ’விருந்து’. அர்ஜூன் உடன் கிரீஷ் நெய்யர், நிக்கி கல்ராணி, ஹரீஷ் பெரடி, சோனா நாயர் மற்றும் அஜூ வர்கீஸ் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
தெலுங்கு நட்சத்திரம் தேவ் கில் மற்றும் பிரவின் தர்டே நடிப்பில் உருவாகியுள்ள ‘அஹோ விக்ரமார்கா ‘திரைப்படம் நாளை 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குநர் விவேக் இயக்கத்தில் பிரியாமணி, ஜாக்கெ ஷெராஃப் நடிப்பில் உருவாகியுள்ள கியூ ஜி படம் நாளை 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நடிகர் சைஜூ குரூப் நடிப்பில் உருவாகியுள்ள படம் பரதநாட்டியம். இந்தப் படம் நாளை 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நடிகர்கள் ராஜேஷ் சர்மா, சமர்பன் சிங் நடிப்பில் உருவாகியுள்ள படம் பேட் கயே பாங்கே. இந்தப் படம் நாளை 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ரூபி கில், யோகராஜ் சிங், குர்பிரீத் குக்கி நடிப்பில் உருவாகியுள்ள படம் பிபி ரஜினி. இந்தப் படம் நாளை 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குநர் கிறிஸ் வெயிட்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அஃப்ரைட். இந்தப் படம் நாளை 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.