5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Vijayakanth: மீண்டும் திரையில் வந்த கேப்டன் விஜயகாந்த்.. கண்கலங்கிய ரசிகர்கள்!

The Greatest Of All Time: தமிழ் சினிமா மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாடும் கேப்டன் என அன்போடு அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த அவர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியைத் தொடங்கி அரசியல் களத்திலும் தவிர்க்க முடியாத தலைவராக திகழ்ந்தார். இப்படியான நிலையில் உடல்நலக்குறைவால் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி காலமானார். அவரின் மறைவு இன்றளவும் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே உள்ளது.

Vijayakanth: மீண்டும் திரையில் வந்த கேப்டன் விஜயகாந்த்.. கண்கலங்கிய ரசிகர்கள்!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 05 Sep 2024 07:00 AM

விஜயகாந்த்: நடிகர் விஜய் நடித்துள்ள The Greatest Of All Time படத்தில் AI  தொழில்நுட்பம் மூலம் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடர்பான காட்சிகள் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. தமிழ் சினிமா மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாடும் கேப்டன் என அன்போடு அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த அவர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியைத் தொடங்கி அரசியல் களத்திலும் தவிர்க்க முடியாத தலைவராக திகழ்ந்தார். இப்படியான நிலையில் உடல்நலக்குறைவால் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி காலமானார். அவரின் மறைவு இன்றளவும் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே உள்ளது. அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள கோயம்பேடு தேமுதிக அலுவலகத்துக்கு தினம்தோறும் பல்வேறு ஊர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருகை தருவதே அதற்கு சாட்சியாக உள்ளது.

Also Read: Thalapathy Vijay: விஜய் பேச்சுக்கு அவ்வளவு தான் மதிப்பா? – ரசிகர்கள் செயலால் அதிருப்தி!

இப்படியான நிலையில் AI  தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்த் தொடர்பான காட்சிகள் நடிகர் விஜய் நடித்துள்ள The Greatest Of All Time படத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விஜயகாந்த் குடும்பத்தினரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. விஜயகாந்த் உருவத்திற்காக கேப்டன் பிரபாகரன் படம் உதாரணமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் விஜயகாந்தை திரையில் பார்த்த ரசிகர்கள் பலரும் வயது வித்தியாசமில்லாமல் கண் கலங்கினர். படக்குழு “We Miss You Captain” என தெரிவித்து அவருக்கு மரியாதை அளித்துள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

Also Read: The Greatest Of All Time: விஜய்யின் கோட் ரிலீஸ்.. விடிய விடிய ரசிகர்கள் கொண்டாட்டம்..

இதனைப் பார்த்த விஜயகாந்தின் ரசிகரான இணையவாசி ஒருவர், “கேப்டன் அவர்களை திரையில் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது கேப்டன் ரசிகர்களின் கண்கள் ஏங்கித் தவிக்கிறது மறுபடியும் தலைவரை திரையில் காண்போமா என்று எங்கள் ஆசை நிறைவேற்றிய தளபதி விஜய் அவர்களுக்கு மிக்க நன்றி” என தெரிவித்துள்ளார். முன்னதாக விஜய் அறிமுகமான காலக்கட்டத்தில் விஜயகாந்த் செந்தூரப்பாண்டி படத்தில் அவருடன் இணைந்து நடித்தார். இதனால் அவர் மீது எப்போதும் விஜய்க்கு ஒரு அன்பு இருக்கும். விஜயகாந்த் மறைவுக்கு கூட விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தார். தொடர்ந்து கோட் படம் முடிந்த பிறகு விஜயகாந்த் குடும்பத்தினரை விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் நேரில் சென்று நன்றி தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தி கோட் படம் 

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் “தி கோட்”. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா, பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், யோகிபாபு, விடிவி கணேஷ், வைபவ், ஜெயராம், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

Latest News