5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Devara Trailer: யாரு சாமி நீ.. சுறாவை சாட்டையால் விரட்டும் ஜூனியர் என்.டி.ஆர்.. தேவரா ட்ரெய்லர் இதோ!

Jr. NTR: பிரபல இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., சயிப் அலிகான், ஜான்வி கபூர், நந்தமுடி கல்யாண்ராம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “தேவரா”. அனிருத் இசையமைத்துள்ள இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின்  ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க மிரட்டலான ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த படமாக தேவரா வெளியாகவுள்ளது.

petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 10 Sep 2024 17:48 PM

தேவரா ட்ரெய்லர்: பிரபல இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., சயிப் அலிகான், ஜான்வி கபூர், நந்தமுடி கல்யாண்ராம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “தேவரா”. அனிருத் இசையமைத்துள்ள இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின்  ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. பயம் என்றால் என்ன என தெரியாமல் இருக்கும் கூட்டத்தினருக்கு பயத்தை உண்டாக்கும் நபராக வருகிறார் ஜூனியர் என்.டி.ஆர். மேலும் அதில், மனுஷனுக்கு வாழும் அளவுக்கு தைரியம் இருந்தால் போதும். கொல்ற அளவுக்கு தேவையில்லை என மிரட்டலாக வசனமும் இடம் பெற்றுள்ளது. இதில் பயந்த சுபாவம் கொண்டவராக அறிமுகமாகும் ஜூனியர் என்.டி.ஆர். அதன்பின் ஆடும் ஆக்‌ஷன் ஆட்டம் தான் கதை என ட்ரெய்லரில் சொல்லப்படுகிறது. கடலைச் சார்ந்த கதையாக அமைக்கப்பட்டுள்ளதால் நிச்சயம் காட்சிகளில் பிரமாண்டம் இருக்கும் என தெரிகிறது. இந்த படத்துக்கு ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணியை மேற்கொள்கிறார். சாபு சிரில் கலை இயக்குநராகவும், ரத்னவேலு ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகிறார்கள். ராஜமௌலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் படத்துக்குப் பின் 2 ஆண்டுகள் ஜூனியர் என்.டி.ஆருக்கு படம் எதுவும் வெளியாகவில்லை என்பதால் தேவரா படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Latest Stories