அதிரடி காட்சிகள்.. ‘ஹவுஸ் ஆஃப் தி டிராகன்- சீசன் 2 ட்ரைலர்!
House of the Dragon Season 2 : தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் House of the Dragon சீரிஸின் இரண்டாவது சீசன் வெகு விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த சீசனின் ட்ரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ட்ரைலர் ஆர்வத்தை தூண்டுவதாக ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்
ஹவுஸ் ஆஃப் தி டிராகன்: நாவலை அடிப்படையாக் கொண்டு தயாரிக்கப்படும் கதைகளுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. குறிப்பாக ஹாலிவுட்டில் பல சுவாரஸ்ய சூப்பர் ஹீரோ மூவிக்களும், சூப்பர் ஹீரோ கதைகளும் சீரிஸ்களாக உருவாகின்றன. அந்த வரிசையில் அதிக ரசிகர்களை கொண்டது தான் ‘ஹவுஸ் ஆஃப் தி டிராகன். இந்த தொடரின் 2ம் பாகம் தற்போது வெளியாகவுள்ளது. இந்த தொடரின் ட்ரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஃபயர் & ப்ளட்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த தொடரானது ஒரு குடும்பத்தை சுற்றி நடக்கும் அதிகாரப்போரை மையமாகக் கொண்டது.