5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

வசூலில் கெத்து காட்டும் ‘கோட்’… முதல் நாள் விவரம் இதோ!

GOAT Movie Box Office Collection: வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனத்தின் 25வது படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது.

வசூலில் கெத்து காட்டும் ‘கோட்’… முதல் நாள் விவரம் இதோ!
கோட்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Sep 2024 13:21 PM

நடிகர் விஜயின் நடிப்பில் நேற்று செப்டம்பர் 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜயுடன், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாக்‌ஷி செளதரி, லைலா, வைபவ் , பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். எ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தைத் தயாரித்து வருகிறார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தினை ஏ.ஜி.எஸ்., எண்டர்டைமெண்ட் நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாரித்துள்ளது. இந்நிலையில் படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி சினிமா வட்டாரங்களிடையே வைரலாகி வருகின்றது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனத்தின் 25வது படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி முழுக்க முழுக்க அரசியலில் ஈடுபடப்போவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார். இதனைத் தொடர்ந்து கோட் படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. படம் பார்த்த ரசிகர்கள் படத்தினைக் கொண்டாடி வருகின்றனர்.

இப்படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இதில் மகன் கதாபாத்திரத்தில் வரும் விஜய்யின் வயதை குறைத்து காட்டுவதற்காக டீஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், திரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.

Also read… சூர்யாவின் கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா? வைரலாகும் தகவல்

தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 1,100 திரையரங்குகளில் சோலோவாக ரிலீஸ் ஆனது. இதுமட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 5000 திரையரங்குகளில் படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என மொத்தம் ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

‘தி கோட்’ முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் இந்தியா முழுவதும் ரூ. 43 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. அதில், தமிழ்நாட்டில், ரூ.38.3 கோடியும், தெலுங்கில் ரூ. 3 கோடியும் மற்றும் இந்தியில் ரூ.1.7 கோடியும் வசூலித்துள்ளதாக தெரிகிறது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ரூபாய் 100 கோடி வரை வசூல் செய்திருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது. படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வ வசூல் எவ்வளவு என்பதை அறிவித்த பின்பே உண்மையான நிலவரம் தெரியவரும்.

Latest News