5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Thalapathy Vijay: விஜய் பேச்சுக்கு அவ்வளவு தான் மதிப்பா? – ரசிகர்கள் செயலால் அதிருப்தி!

The Greatest Of All Time: இருதினங்களுக்கு விஜய் வாய்மொழியாக ரசிகர்களுக்கும், தமிழக வெற்றிக்கழக தொண்டர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்ததாக தகவல் வெளியானது. அதில், “தன்னுடைய கோட் திரைப்படம் வெளியாகும் நாளில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் கொண்டாட்டங்களை நடத்த வேண்டும். அரசியல் கட்சி தொடங்கப்பட்டுள்ளதால் ரசிகர்களும், தொண்டர்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். கொண்டாட்டத்தின்போது தமிழக வெற்றிக் கழக கொடியை பயன்படுத்த வேண்டாம்” என தெரிவித்ததாக சொல்லப்பட்டது.

Thalapathy Vijay: விஜய் பேச்சுக்கு அவ்வளவு தான் மதிப்பா? – ரசிகர்கள் செயலால் அதிருப்தி!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 05 Sep 2024 06:10 AM

தளபதி விஜய்: நடிகர் விஜய் நடித்துள்ள “தி கோட்” படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் கொண்டாட்டமும் உலகம் முழுவதும் களைக்கட்டியுள்ளது. தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படும் நிலையில் வெளிநாடுகள், பிற மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட்டது. இப்படியான நிலையில் இன்னிசை கச்சேரி, டிஜே, வாண வேடிக்கைகள், செண்டை மேளம், தாரை தப்பட்டை என அமர்க்களமாக விடிய விடிய ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இப்படியான நிலையில் இதன் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. அதில் பல இடங்களில் விஜய் போட்ட உத்தரவையும் மீறி ரசிகர்கள் செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

விஜய் சொன்னதாக வெளியான தகவல்

இப்படியான நிலையில் இருதினங்களுக்கு விஜய் வாய்மொழியாக ரசிகர்களுக்கும், தமிழக வெற்றிக்கழக தொண்டர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்ததாக தகவல் வெளியானது. அதில், “தன்னுடைய கோட் திரைப்படம் வெளியாகும் நாளில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் கொண்டாட்டங்களை நடத்த வேண்டும். அரசியல் கட்சி தொடங்கப்பட்டுள்ளதால் ரசிகர்களும், தொண்டர்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். கொண்டாட்டத்தின்போது தமிழக வெற்றிக் கழக கொடியை பயன்படுத்த வேண்டாம். அதற்கு பதிலாக விஜய் மக்கள் இயக்கம் கொடியை பயன்படுத்துங்கள்” என தெரிவித்ததாக சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து விஜய் அரசியலையும், சினிமாவையும் சரியாக பிரித்து பார்ப்பதாக பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தனர். ஆனால் அதெல்லாம் கேட்க முடியாது என்கிற ரேஞ்சுக்கு சம்பவம் செய்துள்ளனர்.

Also Read: The Greatest Of All Time: விஜய்யின் கோட் ரிலீஸ்.. விடிய விடிய ரசிகர்கள் கொண்டாட்டம்..

கொண்டாட்டத்தின்போது ரசிகர்கள் பலரும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை பயன்படுத்தியுள்ளனர். இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இவை இந்த காட்சிகள் கேரளாவில் எடுக்கப்பட்டதாக  சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் மட்டுமே இரவு கொண்டாட்டம் நடந்தது. காலை 9 மணிக்கு காட்சிகள் என்பதால் அதிகாலை முதல் கொண்டாட்டங்கள் நடக்கும் என தியேட்டர் நிர்வாகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: GOAT Movie Review: அண்ணன் வரார் வழிவிடு… மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா ’கோட்’ படம்? ட்விட்டர் ரிவியூ!

The Greatest Of All Time படம் 

பிகில் படத்துக்குப் பின் ஏஜிஎஸ் நிறுவனம் விஜய்யை வைத்து 2வது முறையாக தயாரித்துள்ள படம்  The Greatest Of All Time. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ள நிலையில் மீனாட்சி சௌத்ரி ஹீரோயினாக நடித்துள்ளார். மைக் மோகன்,  பிரஷாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, ஜெயராம், வைபவ், அஜ்மல் அமீர், யோகிபாபு, பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தில் இணைந்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

Latest News