5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

LIK படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா? விக்னேஷ் சிவன் சொன்ன தகவல்!

Vignesh Shivan: தமிழ் திரைப்படங்களில் இயக்குநராக அறிமுகமாகி தற்போது திரைப்படங்களில் முன்னணி கதாநாயகனாக நடித்துவருபவர் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமான இவர் தற்போது 'லவ் இன்சுரன்ஸ் கம்பெனி' மற்றும் டிராகன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

LIK படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா? விக்னேஷ் சிவன் சொன்ன தகவல்!
லவ் இன்சுரன்ஸ் கம்பெனி
barath-murugan
Barath Murugan | Published: 30 Nov 2024 19:26 PM

நடிகர் பிரதீப் ரங்கநாதன் தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் “லவ் இன்சுரன்ஸ் கம்பெனி” என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாகப் பிரபல தெலுங்கு நடிகை கீர்த்தி செட்டி இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ திரைப்படத்தினை இயக்கியதன் மூலம் சினிமாவில் நுழைந்த பிரதீப் தொடர்ந்து ‘லவ் டுடே’ என்ற திரைப்படத்தை இயக்கியும் மற்றும் நடித்தும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். தனது அற்புதமான நடிப்பின் மூலமாக இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும் பயங்கர வெற்றியாக அமைந்தது.

தொடர்ந்து திரைப்படங்களை இயக்குவதைத் தொடர்ந்து நடிக்க ஆர்வம் காட்டிய இவரின் LIK திரைப்படத்தை நடிகை நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இப்படத்தினை பற்றி ஒரு நேர்காணலில் கூறிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் சொன்ன விஷயம்

பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படத்தை தற்போது அவரின் மனைவியான நடிகை நயன்தாராவின் ‘ரௌடி பிக்சர்ஸ்’ இணைந்து தயாரித்து வருகிறது. இந்நிலையில் ஒரு இண்டெர்வியூவில் பேசிய விக்னேஷ் சிவன் இப்படத்தின் கதையைக் குறித்து நடிகர்கள் குறித்தும் பேசினார். தொடர்ந்து பேசிய இவர் இந்த திரைப்படத்தின் கதையானது கடந்த 2018ம் ஆண்டே தயாராகியதாகவும் முதலில் நான் இப்படத்தில் நடிகர் ‘சிவகார்த்திகேயனை’ வைத்து இயக்க எண்ணினேன்.

தொடர்ந்து இது குறித்து தயாரிப்பாளருடன் பேசியபோது பட்ஜெட் குறித்து தயாரிப்பாளர் கேள்வியெழுப்பியதாக இப்படத்தினை மத்தியில் கைவிட்டேன் என்றும், இப்படத்தின் கதைக்களமானது முழுக்க எதிர்காலத்தைக் குறித்து இருப்பதால் இப்படத்தின் பட்ஜெட் அதிகமாகத்தான் இருக்கும் என்றும் கூறினார்.

இதையும் படிங்க:இணையத்தில் கவனம்பெறும் நயன்தாராவின் ‘KARMA SAYS’ இன்ஸ்டா ஸ்டோரி

எதிர்கால காதல் கதையாக அமைந்த இப்படத்தினை முதலில் நான் அணுகிய தயாரிப்பாளர் அக்கதையை நிகழ்கால கதையாக மாற்றச் சொன்னார், அதன் பிறகு அந்த கதையைப் பற்றி நான் யோசிக்கவே இல்லை. பின் தற்போதுதான் இப்படத்தினை தனது சொந்த தயாரிப்பில் இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

லவ் இன்சுரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் அப்டேட்

தமிழ்த் திரைப்படங்களில் இயக்குநராக அறிமுகமாகி தற்போது திரைப்படங்களில் முன்னணி கதாநாயகனாக நடித்துவருபவர் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமான இவர் தற்போது ‘லவ் இன்சுரன்ஸ் கம்பெனி மற்றும் டிராகன்’ போன்ற திரைப்படங்களில் நடித்துவருகிறார்.தற்போது இவர் நடித்துவரும் LIK திரைப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பிலிருந்து வரும் நிலையில் வரும் 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகப் பிரபல நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்துவருகிறார்.

இதையும் படிங்க:ஆர்.ஜே பாலாஜியின் சொர்க்கவாசல் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

இவர்களைத் தொடர்ந்து இப்படத்தில் எஸ்.ஜே.சூரிய, யோகி பாபு, கௌரி ஜி. கிஷன், மிஸ்கின், சீமான் மற்றும் சுனில் ரெட்டி எனப் பல பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். மிக வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகிவரும் இந்த திரைப்படத்திற்கு மியூசிக் சூப்பர் ஸ்டார் அனிருத் இசையமைத்து வருகிறார். இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து வெளியான “தீமா” என்ற பாடலானது பல் மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டி தற்போது ட்ரெண்டிங் லிஸ்டில் உள்ளது.

முன்னதாக இப்படத்திற்கு LIC என்ற பெயர் வைக்கப்பட்டிருந்த நிலையில் டைட்டில் தொடர்பான சர்ச்சைகள் ஏற்பட்டது . பின் இயக்குநர் விக்னேஷ் சிவன் LIk என்று மாற்றினார்.ரோமெண்டிக் காதல் கதைகளுடன் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்புகளானது பெரும்பாலும் மலேசியா மற்றும் சிங்கப்பூர் என வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த மாதிரியான சிறப்பான தரமான கதைகளுடன் தயாராகி வரும் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் இந்த திரைப்படமானது வருகின்ற 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று வெளியாகும் என்று இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றனர் .

இதையும் படிங்க:ஒருபோதும் இந்தி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன்.. நடிகர் அல்லு அர்ஜுன் ஓப்பன் டாக்..

Latest News