‘மங்காத்தா – 2’ எப்போது… இயக்குநர் வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்
Mankatha 2 Update: கோட் திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படக்குழு முடிந்த அளவுக்கு தொடர்ந்து அப்டேட்டுகளை வெளியிட்டு வருகின்றனர். படக்குழு மலேசியாவில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டனர். அதில் வெங்கட் பிரபு மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேசியுள்ளார். சென்னை 28 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வெங்கட் பிரபு நல்ல இயக்குநர் என்ற பெயரை முதல் படத்திலேயே பெற்றுவிட்டார். அடுத்தடுத்து அவர் இயக்கிய சரோஜா, கோவா உள்ளிட்ட படங்கள் கோலிவுட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகர் அஜித்குமார் நடிப்பில் ’மங்காத்தா 2’ படம் எப்போது என்பது குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட் அஜித் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு தற்போது விஜயின் கோட் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜயுடன் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாக்ஷி செளதரி, லைலா, வைபவ் , பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். எ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தைத் தயாரித்து வருகிறார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சென்னை, ரஷ்யா, திருவனந்தபுரம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் மங்காத்தா 2 குறித்து வெங்கட் பிரபு பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கோட் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது முழுவீச்சில் கிராபிக்ஸ் பணிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. அப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அதன் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக கசிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு கடந்த 17-ம் தேதி வெளியிட்டது. அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
கோட் திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படக்குழு முடிந்த அளவுக்கு தொடர்ந்து அப்டேட்டுகளை வெளியிட்டு வருகின்றனர். படக்குழு மலேசியாவில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டனர். அதில் வெங்கட் பிரபு மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேசியுள்ளார். சென்னை 28 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வெங்கட் பிரபு நல்ல இயக்குநர் என்ற பெயரை முதல் படத்திலேயே பெற்றுவிட்டார். அடுத்தடுத்து அவர் இயக்கிய சரோஜா, கோவா உள்ளிட்ட படங்கள் கோலிவுட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
Also read… Bigg Boss Tamil season 8: இணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 போட்டியாளர்களின் விவரம்!
முதல் மூன்று படங்களும் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்க கமிட்டானார் வெங்கட் பிரபு. அஜித்தின் 50-வது படமாக மங்காத்தா வெளியானது. இதுவரை பெரிய நடிகர்களை இயக்காத இயக்குநர் அஜித்தின் 50-வது படத்தை இயக்குகிறார் படம் ஹிட்டாகிவிடுமா என்ற சந்தேகத்தையும் எழுப்பினர் பலர். ஆனால் யாரும் எதிர்பார்க்காதபடி படமானது மெகா ஹிட்டானது. குறிப்பாக கதையில் அவர் வைத்திருந்த ட்விஸ்ட் தியேட்டரில் அனைவரையுமே பிரம்மிக்க வைத்தது.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில் பேசிய வெங்கட் பிரபு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அஜித்தை சந்தித்தது குறித்து பேசியுள்ளார். அதில், நாங்கள் நிறைய விஷயத்தைப் பற்று பேசினோம். பல ப்ராஜக்டுகளை பற்றி கலந்துரையாடினோம். மங்காத்தா 2 திரைப்படத்தை நடிகர் அஜித்தை வைத்து தான் எடுக்க வேண்டும், இல்லையென்றான் அவரது ரசிகர்கள் என்னை அடித்து விடுவார்கள். பல விஷயங்களை பற்றி பேசினோம். அது எப்படி நடக்கும், எப்போ நடக்கும் என தெரியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.