5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cinema Rewind: நாங்க என்னைக்குமே எதிரிகளா இருந்தது கிடையாது… விஜய் குறித்து அஜித் சொன்ன விசயம்

தமிழ் திரையுலகில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட நடிகராக உலா வருபவர் நடிகர் அஜித். தமிழ் சினிமாவில் மிகவும் கடின உழைப்பால் முன்னுக்கு வந்த நடிகர்களில் ஒருவர் அஜித். அமராவதி படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் அடுத்தடுத்த தமிழ்ப் படங்களில் ஹீரோவாக நடித்து மெல்ல தமிழ் சினிமாவில் கால்பதிக்கத் தொடங்கிய அஜித் குமார், இன்று தமிழ் நாட்டை ஆட்டிப்படைத்து வருகிறார். பல முன்னணி இயக்குனர்களுடன் படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கிறார்.

Cinema Rewind: நாங்க என்னைக்குமே எதிரிகளா இருந்தது கிடையாது… விஜய் குறித்து அஜித் சொன்ன விசயம்
விஜய், அஜித்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Sep 2024 12:38 PM

நானும் விஜயும் என்னைக்குமே எதிரிகள் கிடையாது என்று நடிகர் அஜித் முன்னதாக பேசியது இணையத்தில் வைராகி வருகின்றது. தமிழ் சினிமாவில் முந்தைய காலத்தில் இருந்தே நடிகர்களிடையே போட்டி நிலவுவது வழக்கம். நடிகர்களுக்குள் இருக்கோ இல்லையோ அவர்களது ரசிகர்களுக்குள் அந்த போட்டி அதிகமாகவே இருந்தது. எம்.ஜி.ஆர் – சிவாஜி தொடங்கி, ரஜினி – கமல், அஜித் – விஜய், சிம்பு – தனுஷ் என இந்த போட்டி தொடந்து கொண்டே இருக்கிறது. யார் சிறந்த நடிகர்கள் என்ற சண்டை நடிகர்களுக்குள் வருவதை விட யார் சிறந்த நடிகர்கள் என்ற சண்டை அவர்களின் ரசிகர்களிடையே தான் அதிகமாக காணப்பட்டது. இணையதள பயன்பாடு குறைவாக இருந்த காலத்தில் இந்த சண்டைகளும் குறைவாகவே இருந்தது. இணையதள பயன்பாடு அதிகரித்தப்பின் யார் பெரிய ஆள் என்று அடித்துக்காட்டு என்பது போல இணையதள போர்கள் அவ்வப்போது நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

தமிழ் திரையுலகில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட நடிகராக உலா வருபவர் நடிகர் அஜித். தமிழ் சினிமாவில் மிகவும் கடின உழைப்பால் முன்னுக்கு வந்த நடிகர்களில் ஒருவர் அஜித். அமராவதி படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் அடுத்தடுத்த தமிழ்ப் படங்களில் ஹீரோவாக நடித்து மெல்ல தமிழ் சினிமாவில் கால்பதிக்கத் தொடங்கிய அஜித் குமார், இன்று தமிழ் நாட்டை ஆட்டிப்படைத்து வருகிறார். பல முன்னணி இயக்குனர்களுடன் படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கிறார்.

தற்போது துணிவு படத்தை முடித்த கையோடு நடிகர் அஜித் விடாமுயற்சி படத்தில் கமிட்டானார். இந்த படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இயக்கிவருகிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் பான் இந்திய திரைப்படமாக தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இப்படம் திரையரங்குகளுக்கு பின் ஓடிடியில் வெளியாகும் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

நடிகர் அஜித்குமார் விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி என அடுத்தடுத்த இரு படங்களில் ஒரே நேரத்தில் கவனம் செலுத்தி வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு அசர்பைஜானில் துவங்கப்பட்டு சில மாதங்கள் விறுவிறுப்பாக நடத்தப்பட்ட நிலையில், கடந்த ஆறு மாதங்களாக இந்த படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

Also read… பிரபல வில்லன் நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மோகன் நடராஜன் காலமானார்

இந்நிலையில் இந்த படத்திற்கு அடுத்ததாக இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவுப்புகள் சமீபத்தில் வெளியானது. ‘குட் பேட் அக்லி’ என பெயரிடப்பட்ட அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. மைத்ரீ மூவி மேக்கர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்றது. ஒரு மாதம் நடந்த அப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இந்த சூழலில் கடந்த மாதம் அஜர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு பணிகள் மீண்டும் தொடங்கியது. அஜர்பைஜான் ஷெட்யூல் நிறைவடைந்துள்ளதாக படக்குழு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது.

இந்த நிலையில் நடிகர் அஜித் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக நடிகர் விஜய் குறித்து பேசியது தற்போது வைரலாகி வருகின்றது. அதில் அஜித் பேசியதாவது எல்லா துறையிலும் போட்டி இருக்கிறது. அது போலதான் எங்களுக்குள்ளும் நடிப்பதில் போட்டி இருக்கிறது. ஆனால் தனிப்பட்ட முறையில் நானும் விஜயும் எதிரிகள் அல்ல என்பது குறித்து அஜித் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Latest News