5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cinema Rewind: தலைமுடியால் உயிர் பிழைத்த ரஜினி.. குமரி கடலில் நடந்த சம்பவம் தெரியுமா?

Rajinikanth: ரஜினி படம் என்றாலே தனி மாஸ் தான் என சொல்லும் அளவுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவருக்கு ரசிகர்களாக உள்ளது. இப்படியான நிலையில் 1977 ஆம் ஆண்டு “புவனா ஒரு கேள்விக்குறி” என்ற படம் வெளியானது. இந்தப் படத்தில் ரஜினியுடன்,  சிவகுமார், சுமித்ரா, ஜெயா, சுருளி ராஜன், ஒய்.ஜி.மகேந்திரன், வெண்ணிற ஆடை மூர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இந்த படத்துக்கு பஞ்சு அருணாச்சலம் திரைக்கதை எழுதியிருந்தார்.

Cinema Rewind: தலைமுடியால் உயிர் பிழைத்த ரஜினி.. குமரி கடலில் நடந்த சம்பவம் தெரியுமா?
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 28 Aug 2024 17:00 PM

சினிமா ரீவைண்ட்: தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் ரஜினிகாந்த். 1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான அவர் தனது ஸ்டைலால் முன்னணி நடிகராக உயர்ந்தார். ரஜினி படம் என்றாலே தனி மாஸ் தான் என சொல்லும் அளவுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவருக்கு ரசிகர்களாக உள்ளது. இப்படியான நிலையில் 1977 ஆம் ஆண்டு “புவனா ஒரு கேள்விக்குறி” என்ற படம் வெளியானது. இந்தப் படத்தில் ரஜினியுடன்,  சிவகுமார், சுமித்ரா, ஜெயா, சுருளி ராஜன், ஒய்.ஜி.மகேந்திரன், வெண்ணிற ஆடை மூர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இந்த படத்துக்கு பஞ்சு அருணாச்சலம் திரைக்கதை எழுதியிருந்தார். இளையராஜா இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் பாடல்களும், படமும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போது மிகப்பெரிய விபத்து ஒன்று நடந்துள்ளது. அதனைப் பற்றி நடிகை சுமித்ரா நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: Uttar Pradesh: அப்படிப்போடு.. சோசியல் மீடியா பிரபலங்களுக்கு ரூ.8 லட்சம் வரை சம்பளம்!

விபத்து நடந்தது எப்படி?

அதாவது, “காட்சிப்படி சிவகுமாரும் ரஜினியும் கடற்கரை உள்ளே இருக்கும் பாறை மீது அமர்ந்து பேசுவது போல இருக்கும். இந்த இடம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது. கதைப்படி சிவக்குமார் என்னுடன் பழகி மோசம் செய்து விடுவார். அந்த சம்பவத்தை ரஜினியிடம் சொல்வது போல அந்த காட்சி இருக்கும். இந்த மாதிரி நான் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டு விட்டேன். இதில் இருந்து எப்படி தப்பிப்பது என தெரியவில்லை என ரஜினியிடம் ஐடியா கேட்டுக் கொண்டிருப்பார். ரஜினியும் சிவகுமாரின் தவறுகள் எல்லாம் சுட்டிக்காட்டுவது போல வசனமும் இருக்கும். அந்தக் காட்சியை அந்தப் பாறையில் இருவரும் உட்கார்ந்திருக்க படமாக்கினார்கள்.

காலை 7 மணிக்கு தொடங்கிய ஷூட்டிங் காலை 11 மணி வரை சென்றிருக்கும். அப்போது அந்த ஊரின் உள்ளூர் மக்களில் ஒருவர் படக்குழுவிடம் வந்து ஒரு 12 மணி அல்லது 12.30 க்கு எல்லாவற்றையும் முடித்து விட்டு கரைக்கு திரும்பி வருமாறு சொன்னார். ஆனால் ஒரு மணி வரை படத்தின் அந்த காட்சி எடுத்து முடிக்கப்படவில்லை. அப்போது எதிர்பாராத விதமாக ஒரு பெரிய அலை வந்து அந்த பாறையில் அடிக்க சிவகுமாரும் ரஜினியும் உட்பட படக்குழுவினர் பாதிபேர் தண்ணிக்குள் சென்று விட்டனர். குளம், குட்டை என்றால் பரவாயில்லை தப்பித்து விடலாம்.

இதையும் படிங்க: TV Screen Cleaning: எல்இடி ஸ்மார்ட் டிவியை இப்படி சுத்தம் பண்ணுங்க.. இல்லனா நஷ்டம் உங்களுக்குதான்!

கடலுக்குள் விழுந்ததால் அனைவரும் பதறிப் போயினர். அதில் சிவக்குமார் உள்ளிட்ட பலரும் நீச்சல் தெரிந்ததால் தப்பி வந்துவிட்டனர். ஆனால் ரஜினியை காணவில்லை. அவருக்கு அப்போது நீச்சல் தெரியாது. எல்லோரும் ஹீரோவை காணவில்லை என பதறினர். நாங்கள் இருந்த ஏரியா கடற்கரை பகுதி என்பதால் மீனவர்கள் உடனடியாக ஓடி வந்தனர். அவர்களெல்லாம் நான்கு படகுகளில் ரஜினியை தேடி கடலுக்குள் சென்றனர். பார்த்தால் ஒரு இடத்தில் தலைமுடி மட்டும் வெளியே தெரிவது போல இருந்தது.

அதை வைத்து முடியை பிடித்து ரஜினியை தூக்கி படகில் போட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அந்த சம்பவம் ரஜினிக்கு மறு ஜென்மம் தான் என்று சொல்ல வேண்டும். கடலுக்குள் மூழ்கியதால் நிறைய தண்ணீர் குடித்து ரஜினி மயங்கி விட்டார். அதனை தொடர்ந்து அன்றைக்கு ஷூட்டிங் எடுக்க முடியாமல் போய்விட்டது. அவர் பிழைத்து வந்ததே பெரிய விஷயம். அப்போது அந்த விஷயம் மிகப் பெரிய அளவில் செய்திகளில் வெளியானது. அந்த சம்பவம் எங்களால் என்றைக்கும் மறக்க முடியாதது” என சுமித்ரா தெரிவித்திருப்பார்.

Latest News