5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cinema Rewind: சிவாஜி இல்லனா ’தேவர் மகன்’ இல்லை – நடிகர் கமல் சொன்ன விஷயம்

தேவர் மகன் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் அவருடன் இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், கௌதமி, ரேவதி, நாசர், தலைவாசல் விஜய், வடிவேலு, காக்கா ராதாகிருஷ்ணன், சங்கிலி முருகன், எஸ்.என்.பார்வதி என்று பல பிரபலங்கள் நடித்திருந்தனர். மேலும் இந்த படமானது பெயர் சொல்லும் படமாக அமைந்தது. கமல் ஹாசனின் கரியரில் தேவர் மகன் படம் முக்கியமானது.

Cinema Rewind: சிவாஜி இல்லனா ’தேவர் மகன்’ இல்லை – நடிகர் கமல் சொன்ன விஷயம்
தேவர் மகன்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Oct 2024 17:48 PM

நடிகர் சிவாஜி கணேஷன் இல்லனா ‘தேவர் மகன்’ படமே இல்லனு நடிகர் கமல் ஹாசன் முன்னதாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்திய திரையுலகின் அடையாளங்களில் ஒருவராக கருதப்படுபவர் சிவாஜி கணேசன். இந்திய சினிமா வரலாற்றில் நடிப்பு என்று கூறினால் அதற்கு எடுத்துக்காட்டாக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். இவர் ஒரு கதாபாத்திரத்தை எடுத்துக்கொண்டால், அந்த கதாபாத்திரமாக நடிப்பார் என்பதை விட, அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துவிடுவார் என்பதே உண்மை. தமிழ் திரையுலகின் பெருமையை உலக அரங்கில் கொண்டு சென்ற கலைஞர்களில் முதன்மையானவர் சிவாஜி கணேசன். இவரது 97வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தேவர் மகன் படத்தில் அவர் நடித்தது குறித்து முன்னதாக கமல் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் முந்தைய காலத்தில் இருந்தே நடிகர்களிடையே போட்டி நிலவுவது வழக்கம். நடிகர்களுக்குள் இருக்கோ இல்லையோ அவர்களது ரசிகர்களுக்குள் அந்த போட்டி அதிகமாகவே இருந்தது. எம்.ஜி.ஆர் – சிவாஜி தொடங்கி, ரஜினி – கமல், அஜித் – விஜய், சிம்பு – தனுஷ் என இந்த போட்டி தொடந்து கொண்டே இருக்கிறது. யார் சிறந்த நடிகர்கள் என்ற சண்டை நடிகர்களுக்குள் வருவதை விட யார் சிறந்த நடிகர்கள் என்ற சண்டை அவர்களின் ரசிகர்களிடையே தான் அதிகமாக காணப்பட்டது.

1928ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி விழுப்புரத்தில் பிறந்த கணேசன் நாடகங்களில் சத்ரபதி சிவாஜியாக நடித்து மிரட்டிய நிலையில், சிவாஜி கணேசனாகவே சினிமாவில் பிரபலமானார். நடிகர் திலகம் என உலகளவில் சினிமா கலைஞர்கள் மற்றும் மக்களால் போற்றப்பட்ட சிவாஜி கணேசன் 2001ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். அவர் மறைந்தாலும், அவருடைய நடிப்பு என்றுமே மறையாது என்பதை நாம் அறிவோம்.

Also read… Cinema Rewind: பொல்லாதவன் படத்திற்கு நான் யோசிச்ச டைட்டில் வேற… வெற்றிமாறன் சொன்ன விஷயம்

நடிகர் கமல்ஹாசனின் கெரியரில் மிகப்பெரிய வெற்றியை ருசித்த படம் என்றால் அது தேவர் மகன் தான். இப்படம் கடந்த 1992-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் மாஸ் வெற்றியை ருசித்தது. இப்படத்தை பரதன் இயக்கி இருந்தார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை கமல்ஹாசன் எழுதி இருந்ததாக படத்தில் குறிப்பிட்டு இருந்தனர். தேவர்மகன் படத்தின் கதையை தான் 7 நாட்களில் எழுதி முடித்துவிட்டதாக கமல்ஹாசனே பல்வேறு பேட்டிகளில் கூறி இருக்கிறார்.

Also read… Cinema Rewind: சுப்ரமணியபுரம் படத்தில் நடிக்க முதல் தேர்வு ஜெய் இல்லை… சசிக்குமார் சொன்ன விஷயம்

இந்த திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் அவருடன் இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், கௌதமி, ரேவதி, நாசர், தலைவாசல் விஜய், வடிவேலு, காக்கா ராதாகிருஷ்ணன், சங்கிலி முருகன், எஸ்.என்.பார்வதி என்று பல பிரபலங்கள் நடித்திருந்தனர். மேலும் இந்த படமானது பெயர் சொல்லும் படமாக அமைந்தது. கமல் ஹாசனின் கரியரில் தேவர் மகன் படம் முக்கியமானது. இன்றுவரை அந்தப் படம் பாராட்டையும், விமர்சனத்தையும் ஒருசேர பெற்றிருக்கிறது. தேவர் மகன் படம் எனக்கு முக்கியமானது. அந்தப் படத்தின் கதையை எழுதும்போது சிவாஜியை நினைத்துக்கொண்டேன். எனது சொந்த ஊரை நினைத்துக்கொண்டேன். என்னையும் நினைத்துக்கொண்டேன். தேவர் மகன் படத்தின் கதையை ஏழே நாட்களில் எழுதி முடித்தேன் என்று இந்தியன் 2 பட விழாவில் அவர் பேசியது இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில் முன்னதாக இந்தப் படத்தில் சிவாஜி நடித்தது குறித்து கமல் ஹாசன் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் அவர் பேசியதாவது, தேவர் மகன் படத்தில் சிவாஜி சார் எதுக்கு அதுக்கு பதிலா இப்போ இருக்க யாராச்சும் போடலாம் ட்ரெண்டுக்கு நல்லா இருக்கும்னு சில அறிவு ஜீவிகள் எனக்கு அட்வைஸ் பன்னாங்க. அதையெல்லாம் மீறி இல்லை இந்த படத்தை சிவாஜி சார் பன்னலைனா சாதாரண படமாகிடும்னு அப்பறம் சிவாஜி சார்ட சொல்லி கைதையெல்லாம் விவரிச்சு அவர சம்மதிக்கவச்சு கூட்டிட்டு வந்துட்டேன். அவரும் வந்துட்டாரு. எழுத்தாளர் கமல்ஹாசனுக்கு அந்தப் படத்தில் பெறும் பங்கு இருந்தாலும், அந்த படத்தில் சிவாஜி சார் நடிக்கலைனா தேவர் மகன் இல்லை என்று கூறியிருப்பார் கமல் ஹாசன். இந்த வீடியோ இன்று சிவாஜியின் பிறந்த நாளில் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Latest News