5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Bigg Boss Tamil Season 8: பிக்பாஸில் அதிரடியாக வெளியானது நாமினேஷன் வீடியோ… யார் வெளிய போவாங்க?

பிக்பாஸ் வீட்டை விட்டு நேற்று வெளியேறிய தர்ஷா பெண்கள் அணியினர் மீது இருந்த அதிர்ப்த்தியை வெளிப்படையாக பேசினார். பெண்கள் அணியில் 6 பேர் கொண்ட குழு உள்ளது. அவர்கள் அனைவரும் ஜாக்குலின் மற்றும் சுனிதா பேசுவது மட்டுமை கேட்டு நடப்பதாகவும் சுயமாக எதுவும் முடிவு செய்யவில்லை என்றும் வெளிப்படையாக பேசினர்.

Bigg Boss Tamil Season 8: பிக்பாஸில் அதிரடியாக வெளியானது நாமினேஷன் வீடியோ… யார் வெளிய போவாங்க?
பிக்பாஸ்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 28 Oct 2024 11:31 AM

பிக்பாஸ் தமிழ் சீசன் 8-ன் 22-வது நாளிற்கான முதல் ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த 6-ம் தேதி பிக்பாஸ் தமிழ் 8-வது சீசன் தொடங்கியது. இதில், ரவீந்தர் சந்திரசேகர், அன்ஷிதா, அருண் பிரசாத், தீபக், தர்ஷா குப்தா, தர்ஷிகா, ஜாக்குலின், ஜெப்ரி, முத்துக்குமார், அர்னவ், பவித்ரா ஜனனி, ரஞ்சித், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, செளந்தர்யா, சுனிதா, வி.ஜே. விஷால் என 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வந்த நிலையில் அவர் நிகழ்ச்சியை விட்டு விலகிய பிறகு தற்போது விஜய் சேதுபதி இந்த 8-வது சீசனை தொகுத்து வழங்குகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் பல முன்னணி நட்சத்திரங்கள் இதுவரை தொகுத்து வழங்கி வந்துள்ளனர். பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக, பங்கேற்பாளர்களிலிருந்து ஒருவர், 24 மணி நேரத்தில் வெளியேற்றப்படவுள்ளார் என அறிவித்தார். இந்த அறிவிப்பு போட்டியாளர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதில் யார் வெளியேறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்த நிலையில் முதல் வார திங்கள் அன்று பிக்பாஸ் அறிவுறுத்தலின்படி நாமினேஷன் நடைப்பெற்றது. அதில் சக போட்டியாளர்களின் அதிக வாக்குகளைப் பெற்ற சாச்சனா நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார். பின்னர் அதே வாரம் வெள்ளி அன்று மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் சாச்சிதா.

Also read… விஜயின் அரசியல் என்ட்ரி… மறைமுகமாக வாழ்த்திய சூர்யா!

முதல் வார நாமினேஷனில் இடம் பிடித்த ரவீந்தர் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது வார நாமினேஷனில் இடம் பிடித்த அர்னவ் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் கடந்த வாரம் நாமினேஷனில் இடம் பிடித்த தர்ஷா குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் நேற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு நேற்று வெளியேறிய தர்ஷா பெண்கள் அணியினர் மீது இருந்த அதிர்ப்த்தியை வெளிப்படையாக பேசினார். பெண்கள் அணியில் 6 பேர் கொண்ட குழு உள்ளது. அவர்கள் அனைவரும் ஜாக்குலின் மற்றும் சுனிதா பேசுவது மட்டுமை கேட்டு நடப்பதாகவும் சுயமாக எதுவும் முடிவு செய்யவில்லை என்றும் வெளிப்படையாக பேசினர்.

அதனை தொடர்ந்து இன்று நடைபெறும் பிக்பாஸ் நாமினேஷனில் தர்ஷாவின் பேச்சு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இந்த வாரத்திற்கான நாமினேஷன் பிக்பாஸ் வீட்டில் இன்று நடைபெறுகிறது. அதில் ஆண்கள் அணியில் உள்ளவர்கள் பெண்களையும், பெண்கள் அணியில் உள்ளவர்கள் ஆண்களை நாமினேட் செய்யவேண்டும்.

இந்த நாமினேஷன் ப்ராசஸில் ஆண்கள் அணியினர் அதிகப்படியாக ஜாக்குலின் மற்றும் சுனிதாவை கூறுகின்றனர். பெண்கள் அணியினர் அதிகப்படையாக ஜெஃப்ரி மற்றும் ரஞ்சித் பெயரை கூறிகின்றனர். இன்றைய எபிசோடின் முடிவில் யார் யார் எல்லாம் நாமினேட் ஆகியுள்ளனர் என்பது முழுவதுமாக தெரியவரும்.

Latest News