Bigg Boss Tamil season 8: இணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 போட்டியாளர்களின் விவரம்!
Bigg Boss Tamil Season 8 Tentative Contestant List: முந்தைய 6 சீசன்களின் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு போட்டிகள் வழங்கி சண்டை போட்டுக்கோங்க என்று நிகழ்ச்சி குழு விட்டுவிடும். ஆனால் இறுதியாக வெளியான 7-வது சீசனில் பிக்பாஸ் ஸ்மால் பாஸ் என வீட்டில் உள்ளவர்களை இரண்டு அணிகளாக பிரித்து நேரடியாகவே மோதிக்கொள்ள வழி செய்தது. இதனால் நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டாவது வாரங்களில் வரவேண்டிய சண்டைகள் கடந்த சீசனின் இரண்டாவது நாளே தொடங்கியது. அதே போல தற்போது வரும் 8-வது சீசனிலும் பிக்பாஸ் ஸ்மால் பாஸ் என்று வீடு இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்த விவரம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிவருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் பல முன்னணி நட்சத்திரங்கள் இதுவரை தொகுத்து வழங்கி வந்துள்ளனர். தமிழில் 7 சீசன்கள் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக 8-வது சீசனுக்கான தகவல்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சியை முன்னணி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். ஓடிடியில் வெளியான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கினார்.
இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்களின் பார்வை மொத்தமும் நிகழ்ச்சி போட்டியாளர்களின் தேர்வு பட்டியலின் பக்கம் சென்றது. முதல் சீசனில் ஆரவ் கோப்பையை வென்றார், அதே சமயம் ரித்விகா இரண்டாவது சீசனில் பாடகர் மற்றும் நடிகர் முகேன் ராவ் மூன்றாவது சீசனையும், நடிகர்கள் ஆரி அர்ஜுனா மற்றும் ராஜு ஜெயமோகன் நான்காவது மற்றும் ஐந்தாவது சீசனில் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். ஆறாவது மற்றும் ஏழாவது சீசனில் அசீம் மற்றும் அர்ச்சனா வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
பிக்பாஸ் 8 நிகழ்ச்சி இந்த செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கமல் ஹாசான் இனிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளை தான் தொகுத்து வழங்கப் போவதில்லை என்பதை தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது யார் இனி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள் என்று இணையத்தில் சில தகவல்கள் வைரலாகி வருகின்றது. அந்த வகையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிம்பு அல்லது விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த நிலையில் தமிழ் தொலைக்காட்சிகளில் பெரிய அளவில் டி.ஆர்.பி கொண்ட நிகழ்ச்சியாக மாறியது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 7 சீசன்கள் இதுவரை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. பிக்பாஸ் 8 நிகழ்ச்சி இந்த செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்தவுடன் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also read… “இந்து மத சான்றிதழ் கேட்டனர்” – மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் மீது நடிகை நமீதா பரபர புகார்
முந்தைய 6 சீசன்களின் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு போட்டிகள் வழங்கி சண்டை போட்டுக்கோங்க என்று நிகழ்ச்சி குழு விட்டுவிடும். ஆனால் இறுதியாக வெளியான 7-வது சீசனில் பிக்பாஸ் ஸ்மால் பாஸ் என வீட்டில் உள்ளவர்களை இரண்டு அணிகளாக பிரித்து நேரடியாகவே மோதிக்கொள்ள வழி செய்தது. இதனால் நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டாவது வாரங்களில் வரவேண்டிய சண்டைகள் கடந்த சீசனின் இரண்டாவது நாளே தொடங்கியது. அதே போல தற்போது வரும் 8-வது சீசனிலும் பிக்பாஸ் ஸ்மால் பாஸ் என்று வீடு இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
பிக் பாஸ் குழு இந்த முறை போட்டியாளர்கள் தேர்வில் ரொம்பவே கவனத்துடன் செயல்படுகிறது என்றும் போட்டியாளர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருவதாக கூறுகின்றனர். . சினிமா, டிவி நட்சத்திரங்கள், சோஷியல் மீடியா இன்ஃப் ளூயன்சர் எனப் பல தரப்பிலிருந்து சிலரது பெயர்கள் டிக் செய்யப்பட்டு சேனல் தரப்பு அவர்களை அணுகி வருவதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் 8வது சீசனின் போட்டியாளர்கள் இவர்கள் என்று ஒரு லிஸ்ட் வலம் வருகிறது. அதில் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருண், நடிகை ஷாலினி சோயா, குரேஷி, மா.கா.பா.ஆனந்த், நடிகர் ரஞ்சித், நடிகர் ஜெகன், டிடிஎஃப் வாசன், நடிகை பூர்ணா என இவர்களுடன் சில சமூக வலைதள பிரபலங்களின் பெயர்களும் பட்டியளில் உள்ளதாக தகவல்கள் வைரலாகி வருகின்றது.