டாப் 5 ஹாலிவுட் திரில்லர் திரைப்படங்கள்..! எந்தெந்த ஒடிடியில் இருக்கு தெரியுமா.?
OTT Update: ஒடிடி தளங்களில் வெளியான ஹாலிவுட் திரில்லர் மற்றும் திகிலூட்டும் 5 படங்களின் பட்டியல். எந்தெந்த திகில் படங்கள் ஒடிடியில் உள்ளதைப் பற்றிய தகவல். அமானுஷ்யம் மற்றும் திரில்லர் கதைகளைக் கொண்ட ஒடிடி திரைப்படங்களின் விவரங்களை முழுமையாகப் பார்க்கலாம் வாங்க..!
நைட் ஸ்விம்:
தீ நைட் ஸ்விம் 2024 ஆம் ஆண்டு வெளியான அமானுஷ்ய திகில் திரைப்படமாகும். இது பிரைஸ் மெக்வேர் எழுதி இயக்கியத் திகில் திரைப்படம். இப்படம் மெக்குயர் மற்றும் ராட் பிளாக்ஹர்ஸ்ட் பெயரில் 2014ல் வெளியான குறும்படத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். “வியாட் ரஸ்ஸல்” மற்றும் “கெர்ரி காண்டன்” ஆகிய நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த திரில்லர் படத்தின் கதை ஒரு கிராமத்தில் உள்ள குடும்பத்தை அடிப்படையாகக் கொண்டு கதைத் தொடர்கிறது. அவர்கள் தங்கள் வீட்டின் பின்புறத்தில் உள்ள நீச்சல் குளத்தில் பேய்கள் வேட்டையாடப்படுவதை அடிப்படையாகக் கொண்டுள்ள படமாகும். இந்த திரைப்படம் ஜனவரி 5, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியானது. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் $54 மில்லியனுக்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளது. இத்திரைப்படம் தற்போது Zee5 மற்றும் அமேசான் ப்ரைமில் உள்ளது.
தி வாட்சர்ஸ் :
தி வாட்சர்ஸ் 2024 ஆம் ஆண்டு வெளியான திகில் திரைப்படமாகும். இப்படத்தை ஹாலிவுட் அறிமுக இயக்குநர் இஷானா நைட் ஷியாமளன் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் “எம். ஷைனின்” 2021ல் வெளியான நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இதில் டகோட்டா ஃபான்னிங், ஜார்ஜினா காம்ப்பெல், ஓல்வென் ஃபூரே மற்றும் ஆலிவர் ஃபின்னேகன் ஆகிய நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தின் கதை அயர்லாந்தின் மேற்கில் உள்ள ஒரு பரந்த விரிந்த தீண்டப்படாத காட்டில் சிக்கிய 28 வயது நடிகர் மினாவைப் பின்தொடர்வதிலிருந்து கதைத் தொடர்கிறது. மினாவின் தங்குமிடம் தேடி, ஒவ்வொரு இரவும் மர்மமான உயிரினங்களால் வேட்டையாடும் மூன்று அந்நியர்களுடன் அவள் சிக்கிக் கொள்கிறாள்.இவர்களிடம் இருந்து எவ்வாறு தப்பிப்பாள் என இப்படத்தில் திரில்லர் கதைக்களமாக இருக்கிறது. ஜூன் 7, 2024 அன்று வெளியான இப்படம் விமர்சகர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றும் பின் உலகம் முழுவதும் $33 மில்லியன் வசூலித்தது. இத்திரைப்படம் தற்போது அமேசான் ப்ரைமில் உள்ளது.
இமேஜினரி :
ஹாலிவுட்டில் 2024 ஆம் ஆண்டு வெளியான திகில் திரைப்படம் தான் இமேஜினரி. இந்த திரைப்படம் ஹாலிவுட் இயக்குநர் ஜெஃப் வாட்லோவால் இயக்கப்பட்டது. இப்படத்தில் வாட்லோ மற்றும் கிரெக் எர்ப் மற்றும் ஜேசன் ஓரெம்லேண்டின் குழுவால் எழுதப்பட்ட திரைக்கதையாகும். இது ஜேசன் ப்ளூம் தனது ப்ளம்ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் பேனர் மற்றும் டவர் ஆஃப் பாபில் மூலம் இணைந்து தயாரித்துள்ளார். இப்படத்தில் டிவாண்டா விஷ், டாம் பாய்னே, மற்றும் வெரோனிக்கா ஃபல்கன் ஆகிய முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் ஒரு பெண் தனது குழந்தைப் பருவ வீட்டிற்குத் திரும்புவதும் அதன் பின்னர் நடக்கும் சம்பவங்களாகவும் இருக்கும். இந்த இமேஜினரி படமானது 2024ல் மார்ச் 8ல் அன்று உலகம் முழுவதும் வெளியானது. இத்திரைப்படமானது $43 மில்லின் வசூலித்துள்ளது. தற்போது அமேசான் ப்ரைமில் உள்ளது.
அபிகாயில் :
2024ல் வெளியான திகில் மற்றும் நகைச்சுவை கலந்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தை மாட் பெட்டினெல்லி-ஓல்பின் மற்றும் டைலர் கில்லெட் ஆகியோர் இயக்கியுள்ளனர். இதில் டான் ஸ்டீவன்ஸ்,மெலிசா பாரெரா,வில் கேட்லெட், கேத்ரின் நியூட்டன், ஆகியோருடன் அலிஷா வீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒரு சக்திவாய்ந்த பாதாள உலக அரசனின் மகளைக் கைப்பற்றி, அவளை விடுவிக்க பேரம் பேசுவதும், அதனால் உண்டாகும் சம்பவங்களுமே இக்கதை. 2024ல் ஏப்ரல் 19 அன்று உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் $42.4 மில்லியன் வசூலித்ததுள்ளது. இது அமேசானில் கிடைக்கிறது