5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Actress Shakeela: தமிழ் சினிமாவிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை.. பகீர் கிளப்பும் ஷகிலா!

தென்னிந்தியாவை பொறுத்தவரை மற்ற திரையுலகை விட தெலுங்கில் தான் வேற லெவலில் பெண் கலைஞர்கள் மீதான பாலியல் ரீதியிலான தாக்குதல் பிரச்சினை உள்ளது. இது எல்லாம் ஏற்கனவே பேசி வைத்து வருவதுதான். நீ என்னுடைய படத்தில் நடிக்க வருகிறாய் என்றால் எனக்கும், தயாரிப்பாளருக்கும் அட்ஜஸ்ட் செய்து போக வேண்டும் என சம்பந்தப்பட்டவர்களின் மேனேஜர்கள் பேசுவார்கள்.

Actress Shakeela: தமிழ் சினிமாவிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை.. பகீர் கிளப்பும் ஷகிலா!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 28 Aug 2024 18:14 PM

நடிகை ஷகீலா: ஓய்வுப்பெற்ற பெண் நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவால் சமர்பிக்கப்பட்ட மலையாள திரையுலகில் பெண் கலைஞர்கள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை இந்திய சினிமாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இப்படியான நிலையில் நடிகை ஷகீலா நேர்காணல் ஒன்றில் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மலையாளத் திரையுலகில் இருப்பதைப் போலவே பாலியல் தொல்லைகள் பெண் கலைஞர்களுக்கு தமிழ் சினிமாவிலும் இருக்கிறது. இவற்றையெல்லாம் விட தெலுங்கு சினிமாவில் இதுபோன்ற பாலியல் தாக்குதல்கள் அதிகமாக உள்ளது. இந்தி சினிமாவை பொருத்தவரை அங்கு எடுத்த உடனேயே எல்லோரும் நண்பர்களாகி விடுவார்கள். அதனால் அவர்களுக்குள் இதுதொடர்பான பிரச்சனைகள் இருக்காது. ஆனால் பாலிவுட்டில் வாரிசுகள் ஆதிக்கம் தொடர்பான பிரச்சனை இருக்கும்.

அதேசமயம் தென்னிந்தியாவை பொறுத்தவரை மற்ற திரையுலகை விட தெலுங்கில் தான் வேற லெவலில் பெண் கலைஞர்கள் மீதான பாலியல் ரீதியிலான தாக்குதல் பிரச்சினை உள்ளது. இது எல்லாம் ஏற்கனவே பேசி வைத்து வருவதுதான். நீ என்னுடைய படத்தில் நடிக்க வருகிறாய் என்றால் எனக்கும், தயாரிப்பாளருக்கும் அட்ஜஸ்ட் செய்து போக வேண்டும் என சம்பந்தப்பட்டவர்களின் மேனேஜர்கள் பேசுவார்கள். ஆனால் முதலில் ஒத்துக் கொண்டு விட்டு நடிக்க வரும் பெண் பிரபலங்கள் முக்கால்வாசி படம் முடிந்தவுடன், அந்த அட்ஜஸ்ட்மெண்டை செய்ய மறுத்து விடுவார்கள். என்னால் இதை பண்ண முடியாது, இதில் எனக்கு சம்மதமும் கிடையாது என சொல்லும் போது தான் பிரச்சினை வருகிறது. அதனால் இந்த விவகாரத்தில் ஆண்களுக்கு சரியான எச்சரிக்கை கொடுக்கப்பட வேண்டும். கடும் நடவடிக்கையும் வேண்டும் என ஷகீலா தெரிவித்துள்ளார்.

ஹேமா கமிட்டி அறிக்கை சொல்வது என்ன?

 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மலையாள சினிமா உலகில் பெண் நடிகைகள் மற்றும் கலைஞர்கள் மீதான பாலியல் தொந்தரவு மற்றும் வன்கொடுமைகள் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதுதொடர்பாக கேரளா அரசு ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டி ஒன்றை அமைத்தது. இந்த அறிக்கை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே கேரளா அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வெளியிடப்பட்டாமல் இருந்தது. பல கட்ட சட்டப் போராட்டங்களுக்கு ஹேமா கமிட்டி அறிக்கையின் குறிப்பிட்ட பகுதி மட்டுமே கடந்த வாரம் வெளியானது.

இதில் கேரள நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்படுவதாகவும், தங்கள் கோரிக்கைகளுக்கு இணங்கவில்லை என்றால் அவர்களுக்கு முன்னணி பிரபலங்களால் அடுத்தடுத்த படங்களில் வாய்ப்புகள் மறுக்கப்பட செய்யப்படுவதாகவும்  தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கையை தொடர்ந்து மலையாள திரையுலகின் முன்னணி பிரபலங்கள் மீது  திரையுலகை சார்ந்த பெண்கள் பாலியல் புகார்களை தெரிவித்து வருகின்றனர். இதனால்  மலையாள நடிகர் சங்கத்தின் தலைவரான நடிகர் மோகன்லால் உட்பட சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் 17 பேர் கூண்டோடு ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News