5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஹாரர் படத்தில் நடிக்க ஒப்பந்தமான நடிகை ராஷ்மிகா? வைரலாகும் தகவல்

Actress Rashmika Mandanna: சமீபத்தில் இவர் ஹிந்தி படத்தில் நடிக்க ஆர்வம் அதிகரித்து அனிமல் படத்தில் நடித்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கவர்ச்சியான காட்சிகளில் மட்டும் இல்லாமல், படுக்கையறை காட்சிகளிலும் பாலிவுட் உலகின் டாப் கதாநாயகிகளே ஆச்சரியப்படும் அளவிற்கு கவர்ச்சியாக நடித்து இருந்தார். இதனால் பாலிவுட்டிலும் பிசியான நடிகையாக மாறிவிட்டார்.

ஹாரர் படத்தில் நடிக்க ஒப்பந்தமான நடிகை ராஷ்மிகா? வைரலாகும் தகவல்
ராஷ்மிகா மந்தனா
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 31 Aug 2024 12:09 PM

நடிகை ராஷ்மிகா மந்தனா ஹாரர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றது. கடந்த 2016 ஆம் ஆண்டு தான் ‘கிரிக் பார்ட்டி’ என்கிற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு முன்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் இருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும்,அதனை நிராகரித்த ரஷ்மிகா தன்னுடைய திறமைக்கு ஏற்ற வாய்ப்பு அமைந்தால் மட்டுமே நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். நடிகை ராஷ்மிகா மந்தனா என்றால் அவரது ரசிகர்கள் தொடங்கி தெலுங்கு சினிமா உலகின் முன்னணி நடிகர்கள் வரை பலரும் கூறுவது, நேஷ்னல் கிரஷ் என்பதுதான். தமிழ், தெலுங்கு, கன்னடா, ஹிந்தி என பான் இந்திய நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

கடந்த 2021ம் ஆண்டு தமிழில் வெளியான நடிகர் கார்த்தியின் சுல்தான் திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். தொடர்ச்சியாக தமிழில் வாரிசு என்கின்ற திரைப்படத்தில் நடித்த அவர், தற்பொழுது தனுஷின் குபேரா திரைப்படத்திலும் நடித்து வருகிறார். நடிகை ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுனுடன் ‘புஷ்பா 2’, இந்தியில் ‘ஜாவா’, சல்மான்கானுடன் ‘சிக்கந்தர்’ உட்பட சில படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் ஹிந்தி படத்தில் நடிக்க ஆர்வம் அதிகரித்து அனிமல் படத்தில் நடித்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கவர்ச்சியான காட்சிகளில் மட்டும் இல்லாமல், படுக்கையறை காட்சிகளிலும் பாலிவுட் உலகின் டாப் கதாநாயகிகளே ஆச்சரியப்படும் அளவிற்கு கவர்ச்சியாக நடித்து இருந்தார். இதனால் பாலிவுட்டிலும் பிசியான நடிகையாக மாறிவிட்டார்.

Also read… Yuvan Shankar Raja Birthday Special: வழிப்போக்கர்களின் வாழ்வில் இசையுடன் தோன்றியதற்கு நன்றி, யுவன்!

இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவும் ஹாரர் பக்கம் திரும்பி இருக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பாலிவுட்டில் ஹாரர் காமெடி கதைகளத்தில் உருவாக இருக்கும் ”வேம்பையர் ஆப் விஜயநகரம்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆயுஷ்மான் குரானா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை ‘முஞ்யா’ இயக்குனர் ஆதித்யா சர்போத்தர் இயக்கவுள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக கூறப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Latest News