5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

சூர்யா படத்திற்காக 10 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நடிகை

Suriya 44 Movie: நடிகர் சூர்யா இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. சமீபத்தில், படத்தில் நடிக்க இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டது. மேலும் படத்திற்கு ‘சிறை’ என படக்குழு தலைப்பு வைத்துள்ளதாகவும் முன்னதாக தகவல்கள் வெளியாகி வைரலானது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

சூர்யா படத்திற்காக 10 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நடிகை
சூர்யா 44
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Sep 2024 11:48 AM

சூர்யா 44 படத்தில் நடிகை நந்திதா தாஸ் இணைய உள்ளதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகி வருகின்றது. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம், இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து சூர்யா தனது 44-வது படத்திற்காக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் உடன் கூட்டணி சேர்ந்துள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர்.

கங்குவா மற்றும் சூர்யா 44 என இரண்டு படங்களிலும் பிசியாக வேலை செய்து வருகிறார் சூர்யா. கிட்டதட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக கங்குவா படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து பெரும் பொருட்செலவில் கங்குவா படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், கோவை சரளா, யோகிபாபு, ரெட்டின் கிங்ஸ்லி, நடராஜன் சுப்பிரமணியன், ஜெகபதி பாபு, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த மாதம் 12-ம் தேதி வெளியாகியுள்ளது. ட்ரெய்லரில் பீரியட் காலத்தில் நடக்கும் சண்டை காட்சிகளும், சாகச காட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன. தீவு, மர்மம் என பின்னணி குரலுடன் தொடங்கும் ட்ரெய்லர் பிரம்மாண்டத்தின் காட்சியாக விரிகிறது. வித்தியாசமான தோற்றத்தில் சூர்யா தோன்றுகிறார். அதே சமயம் டிரெய்லரின் இறுதி காட்சியில் ஒருவர் மண்டை ஓடுகள் அடங்கிய மாலையை வீசியபடி குதிரையில் வருவது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அது யார் என்று காட்டப்படவில்லை என்றாலும் அது சூர்யாவின் சகோதரரும் நடிகருமான கார்த்தியாக இருக்கலாம். முன்னதாக கார்த்தி இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வந்ததால் அது கார்த்தி என்று ரசிகர்கள் தெரிவித்தனர். படம் அக்டோபர் 10 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவின. ஆனால் இதுகுறித்து படக்குழு எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Also read… சூர்யா பட நாயகிதான் இந்த கியூட் பாப்பா… யார் தெரியுதா?

இப்படியான நிலையில் சூர்யாவின் 44 படத்தின் அப்டேட்டுகள் இணையத்தி கசிந்த வண்ணமே உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். அதன்படி சூர்யாவின் 44-வது படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக அவரது பிறந்த நாள் அன்று அறிவிப்பு வெளியானது. மேலும் இதுவரை சந்தோஷ் நாராயணன், சூர்யா படத்திற்கு இசையமைத்தது கிடையாது என்பதும் இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடதக்கது. ஒரு மாதத்தை தாண்டி அந்தமானில் தொடர்ந்து இடைவெளி இல்லாமல் படத்தின் முதல்கட்ட சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அங்கு இந்த படத்தின் ஆக்சன் காட்சிகள் உள்ளிட்டவை அந்தமான் ஹார்பர் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும் கடந்த மாதம் ஊட்டியில் நடைப்பெற்ற படப்பிடிப்பின் போது சூர்யாவிற்கு சிறிதாக காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நடிகர் சூர்யா இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. சமீபத்தில், படத்தில் நடிக்க இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டது. மேலும் படத்திற்கு ‘சிறை’ என படக்குழு தலைப்பு வைத்துள்ளதாகவும் முன்னதாக தகவல்கள் வெளியாகி வைரலானது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

மேலும் படத்தில் அடுத்தகட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில், இந்த படத்தை பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, சூர்யாவின் 44 -வது படத்தில் நடிகை நந்திதா தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கப்போவதாகவும், டைட்டில் மற்றும் டீசர் விரைவில் வெளிவர உள்ளது எனவும் கூறப்படுகிறது. நந்திதா தாஸ் 10 வருடங்கள் கழித்து தமிழில் மீண்டும் நடிக்க வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News