”ஜனநாயகத்தின் தீபம் ஏற்றுபவர் வருகிறார்”… தளபதி 69 படத்தின் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!
நேற்று விஜயின் கடைசி படமான ‘தளபதி 69’ படம் குறித்த அறிவிப்பு வீடியோ வெளியாகி ரசிகர்களை எமோஷனல் ஆக்கியுள்ளது. தளபதிக்கு பிரியா விடை கொடுக்க காத்திருக்கும் அவர்களுடைய திரையுலக ரசிகர்கள் சார்பாக, 5 நிமிடங்கள் ஓடும் ஒரு நெகிழ்ச்சியான காணொளியை அந்த தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் இன்று போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
”ஜனநாயகத்தின் தீபம் ஏற்றுபவர் வருகிறார்” என்று தளபதி 69 படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. நடிகர் விஜய் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்த நிலையில் அவரது கடைசி படமான தளபதி 69 படத்துடன் அவர் நடிப்பதில் இருந்து விலக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் இந்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. நடிகர் விஜயின் இந்தப் படத்தை பிரபல இயக்குநர் எச். வினோத் இயக்க உள்ளார். தமிழ் திரையுலகில் கோடிக்கணக்கான ரசிகர்களோடு உச்ச நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். ஏற்கனவே அவருடைய “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிக மிகப் பெரிய அளவிலான வரவேற்புகளை பெற்று வருகின்றது.
கடந்த 5-ம் தேதி விஜய் நடிப்பில் அவரது 68-வது படமான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. விஜய் இந்தப் படத்தில் அப்பா, மகன் என இரண்டு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். தீவிர அரசியலில் களம் இறங்க உள்ள விஜய் இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்திருந்ததால் இந்த படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
படத்தில் அப்பா விஜய் ரா ஏஜென்டாக நடித்துள்ளார். இதில் மகன் கதாபாத்திரத்தில் வரும் விஜய்யின் வயதை குறைத்து காட்டுவதற்காக டீஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்பா கதாப்பாத்திரத்திற்கு காந்தி என்றும் மகன் கதாப்பாத்திரத்திற்கு ஜீவன் என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், திரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.
ஏஜிஎஸ் நிறுவனத்தின் 25வது படமாக இந்தப் படம் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜயுடன், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாக்ஷி செளதரி, லைலா, வைபவ் , பிரேம்ஜி அஜ்மல் அமீர், மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தைத் தயாரித்து வருகிறார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தினை ஏ.ஜி.எஸ்., எண்டர்டைமெண்ட் நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாரித்துள்ளது.
விஜயுடன் ரா ஏஜென்ட் அணியில் பிரபுதேவா, பிரஷாந்த் மற்றும் அஜ்மல் அமீர் உள்ளனர். ரா ஏஜென்ட்டாக இருந்த மோகன் நாட்டிற்கு துரேகம் செய்ததால் அவர் நாடு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்தியா மீது தாக்குதல் நடத்த உள்ள தீவிரவாதிகளை பிடிக்க சென்ற இடத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக மோகனின் குடும்பத்தினர் உயிரிழந்துவிடுகின்றனர். தனது குடும்பத்துடன் பாங்காங்கிற்கு சுற்றுலா செல்லும் காந்திக்கு மிகப்பெரிய சிக்கல் உருவாகிறது. அதில், தனது மகனையே இழக்கிறார். அந்த அமைப்பே வேண்டாம் என இமிகிரேஷன் அதிகாரியாக வயதான காலத்தில் வாழ்க்கையை நடத்தி வரும் காந்திக்கு மீண்டும் SATS அமைப்பிடம் இருந்து அழைப்பு வர மாஸ்கோவுக்கு செல்லும் காந்திக்கு பேரதிர்ச்சி அவருடைய ரூபத்திலேயே காத்திருக்கிறது.
Also read… பஞ்சாயத்து ஓவர்… நடிகர் சங்கத்தினருக்கு நன்றி தெரிவித்த தனுஷ்!
இதற்கு பழி தீர்க்க முடிவெடுத்த மோகன் விஜயின் மகனை கடத்தி விஜக்கு எதிராக வளர்க்கிறார். வில்லனாக மோகன் செய்யவேண்டிய பழிவாங்கும் விசயத்தை தனது வளர்ப்பு தந்தைக்காக விஜயின் மகனே விஜய்க்கு எதிராக செய்கிறார். இதிலிருந்து விஜய் எப்படி தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாக்கிறார் என்பது கதையாக உள்ளது.
நீண்ட நாட்களாக சீரியஸான ரோல்களில் தோன்றி வந்த விஜய் இந்தப் படத்தில் காதல், காமெடி, கிண்டல், எமோஷன், சைலன்ட், டான்ஸ், டயலாக் டெலிவரி என தெறிக்கவிட்டுள்ளார். டான்ஸ், டயலாக் டெலிவரி என தெறிக்கவிட்டுள்ளார். குறிப்பாக விஜயின் ஸ்கிரீன் பிரசன்ஸ் என அனைத்தும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு கூஸ்பம்சாக இருக்கிறது.
We are beyond proud & excited to announce that our first Tamil film is #Thalapathy69, directed by the visionary #HVinoth, with music by the sensational Rockstar @anirudhofficial 🔥
Super happy to collaborate with the one and only #Thalapathy @actorvijay ♥️
The torch bearer of… pic.twitter.com/Q2lEq7Lhfa
— KVN Productions (@KvnProductions) September 14, 2024
இந்நிலையில் நேற்று விஜயின் கடைசி படமான ‘தளபதி 69’ படம் குறித்த அறிவிப்பு வீடியோ வெளியாகி ரசிகர்களை எமோஷனல் ஆக்கியுள்ளது. தளபதிக்கு பிரியா விடை கொடுக்க காத்திருக்கும் அவர்களுடைய திரையுலக ரசிகர்கள் சார்பாக, 5 நிமிடங்கள் ஓடும் ஒரு நெகிழ்ச்சியான காணொளியை அந்த தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் இன்று போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”ஜனநாயகத்தின் தீபம் ஏற்றுபவர் வருகிறார்” என்று குறிப்பிட்டு படத்தை எச்.வினோத் இயக்க உள்ளதையும் இதற்கு அனிருத் இசையமைக்க உள்ளதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.