5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

அதே ஜோடி.. தளபதி 69 நாயகி இவங்கதானா? வெளியான நியூ அப்டேட்..!

Thalapathy 69 Update : இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜயின் கடைசி திரைப்படமானது தளபதி 69. இந்த திரைப்படத்திற்கான தளபதி 69 என்ற தற்காலிக தலைப்பை இப்படக்குழு கடந்த செப்டம்பர் 14ல் அறிவித்திருந்தது. தளபதியின் கடைசி திரைப்படமாகக் கூறப்படும் இந்த திரைப்படத்தை ஜெகதீஸ் மற்றும் லோகித் இணைந்து கே.வி.எம் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறது. தற்போது இத்திரைப்படக்குழு அடுத்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது..!

அதே ஜோடி.. தளபதி 69 நாயகி இவங்கதானா? வெளியான நியூ அப்டேட்..!
தளபதி 69 அப்டேட்
barath-murugantv9-com
Barath Murugan | Published: 02 Oct 2024 14:02 PM

 நடிகர் விஜய் தற்போது வருகின்ற 2026ல் அரசியலில் இறங்க உள்ளதால் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு முழுமையாக நிறுத்தவுள்ளதாக தெரிவித்துவிட்டார். இதையடுத்து தான் முதலில் “கமிட்டாகியிருந்த” திரைப்படங்களில் மட்டும் நடித்துவிட்டு பின் முழுவதாக மக்களுக்குச் சேவை செய்யப் போகிறேன் என்று அறிவித்திருந்தார். இதனால் அவரின் ரசிகர்களுக்கு பெரும் இழப்பைச் சந்திப்போம் மற்றும் தளபதி விஜயை எப்படி நாங்கள் படத்தில் கண்டு ரசிப்போம் என விஜயின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்து வருகின்றனர். இதையடுத்து அவர்களை மகிழ்ச்சிப் படுத்தும் விதமாக தற்போது தளபதி 69ன் நடிகர்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன படக்குழு.

இதையும் படிங்க :அட்லி இயக்கத்தில் உருவாகும் அடுத்த திரைப்படம்.. ஹீரோ யாரு தெரியுமா..?

அப்டேட் : 

அந்த விதத்தில் இத்திரைப்படத்தில் நடிகையாக “பூஜா ஹெக்டேவை” நடிகையாக இத்திரைப்படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கெனவே இந்தப்படத்தில் இவர் நடிக்கவுள்ளார் எனத் தகவல்கள் வெளியான நிலையில் தற்போது வெளிப்படையாக இப்படக்குழு அறிவித்து உறுதிப்படுத்தியுள்ளது .

நடிகை பூஜா ஹெக்டே தளபதி விஜயுடன் “பீஸ்ட்” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தற்போது தளபதி 69லும் விஜய்க்குக் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என “பிரமிக்க வைக்கும் ஜோடியை மீண்டும் பெரிய திரைக்கு கொண்டு வருகிறோம்” படக்குழு உறுதியான தகவல்கள் வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க :கார்த்தியின் ‘மெய்யழகன்’ படத்தைப் புகழ்ந்த நடிகர் நாகர்ஜூனா

இந்த திரைப்படத்தின் அப்டேட் இதோ..!

 

பூஜா ஹெக்டே :

நடிகை பூஜா தமிழில் இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில் 2010ல் வெளியான முகமூடி என்ற திரைப்படத்தின் மூலமாகத் தமிழ் திரையுலகில் அறிமுகமாக்கினார். பின் தமிழ் திரையுலகில் பெரிது வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் இவர் தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் நடிக்க ஆரம்பித்தார். இதனால் பாலிவுட் மற்றும் டோலிவுட்டில் பல வாய்ப்புகள் இவருக்குக் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து நீண்டநாளுக்குப் பிறகு 2022ல் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜயுடன் பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மறுபடியும் “ரீ என்ட்ரி” கொடுத்தார். இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது தமிழில் அடுத்த வெளியிட்டுள்ள திரைப்படமான தளபதி 69லும் நடிகர் விஜயுடனே நடிக்கவுள்ளார்.

இதையும் படிங்க :அடுத்த திருமணத்திற்கு தயாரான வனிதா விஜயகுமார்? பிக்பாஸ் பிரபலம்தான் மாப்பிள்ளையா

இதைத் தொடர்ந்து தளபதி 69 திரைப்படத்தின் நடிக்க இருக்கும் கதாபாத்திரங்களின் அறிமுகமானது வெளியாகவுள்ளது. வருகின்ற அக்டோபர் “1,2 மற்றும் 3 “என மூன்று நாட்களிலும் மாலை 5 மணிக்கு நடிகர்களின் “லிஸ்டை” இத்திரைப்பட குழு வெளியிட முடிவு செய்துள்ள நிலையில் தற்போதே அடுத்த கதாப்பாத்திரைத்தை அறிவித்துள்ளது.

நேற்று வெளியிட்ட கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தப் போவதாக வெளியிட்டுள்ள வீடியோவானது இணையத்தில் வேகமாகப் பரவிவரும் நிலையில் இதில் யார் யார் நடிக்கவுள்ளனர் என்ற ஆராய்ச்சியில் மக்கள் இறங்கியுள்ளனர்.

இத்திரைப்படத்தில் ஏற்கனவே நடிகையாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில் இந்த மூன்று நாட்களை அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திரைப்படமானது இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள நிலையில் விஜய் ரசிகர்களிடையே இத்திரைப்படத்தைப் பற்றி பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதையும் படிங்க :”என் மௌனம் பலவீனமோ குற்றவுணர்ச்சியோ அல்ல” – ஆர்த்தி ரவி வேதனை

Latest News