5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

‘மழை பிடிக்காத மனிதன்’ பட பிரச்சினை ஓவர் – விஜய் ஆண்டனி!

Actor Vijay Antony: தற்போது ‘மழை பிடிக்காத மனிதன்’ என்ற படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சரத்குமார், சத்யராஜ், டாலி தனஞ்செயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பிரித்வி அம்பேர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். கமல் போஹ்ரா, லலிதா, பிரதீப் மற்றும் பன்கஜ் போஹ்லரா இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர்.

‘மழை பிடிக்காத மனிதன்’ பட பிரச்சினை ஓவர் – விஜய் ஆண்டனி!
விஜய் ஆண்டனி
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Aug 2024 06:46 AM

‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் பிரச்சினை முடிந்துவிட்டதாக விஜய் ஆண்டனி தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இடைவெளி இல்லாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ரோமியோ’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் தற்போது ‘மழை பிடிக்காத மனிதன்’ என்ற படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சரத்குமார், சத்யராஜ், டாலி தனஞ்செயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பிரித்வி அம்பேர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். கமல் போஹ்ரா, லலிதா, பிரதீப் மற்றும் பன்கஜ் போஹ்லரா இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர்.

இந்தப் படம் கடந்த 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியான பிறகு படத்தில் முதல் காட்சியை தியேட்டரில் பார்த்த இயக்குனர் விஜய் மில்டன், மழை பிடிக்காத மனிதன் படத்தின் ஆரம்பத்தில் வரும் ஒரு நிமிடக் காட்சி தனக்கே தெரியாமல் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், படத்தின் நாயகன் யார்? அவன் ரவுடியா? போலீஸா? அவனுடன் வரும் சரத்குமார் யார்? அவனுக்கு ஏன் மழை பிடிக்காது என ட்விஸ்ட்டுகளை வைத்து படத்தை இயக்கி இருந்தேன். ஆனால் அந்த ட்விஸ்டுகள் உடையும் வகையில், படத்தின் ஆரம்பத்தில் வரும் ஒரு நிமிடக் காட்சியிலேயே அவன் யார் என்பதை ரிவீல் செய்து விட்டால் அதன் பின்னர், படத்தை எப்படி பார்க்க முடியும். இது யார் செய்த சதி என தெரியவில்லை. அந்த காட்சிக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று பேசி இருந்தார். இது சினிமா வட்டாரங்களில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருந்தது.

இது குறித்து விஜய் ஆண்டனி முன்னதாக ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், ’மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் துவக்கத்தில் வரும் இரண்டு நிமிடக்காட்சியை, தனது ஒப்புதல் இல்லாமல் யாரோ இணைத்து உள்ளதாக, என் நண்பர், படத்தின் இயக்குநர் விஜய் மில்டன் வருத்தம் தெரிவித்திருந்தார். அது நான் இல்லை. இது ‘சலீம் 2’ இல்லை. என விளக்கம் அளித்திருந்தார்.

Also read… துருவா சர்ஜாவின் ‘மார்டின்’ பட ட்ரெய்லர் இதோ!

இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு எக்ஸ் தள பதிவு ஒன்றை விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார். அதில், “மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தின் துவக்கத்தில் வரும் ஓர் அறிமுக காட்சி குறித்து தயாரிப்பாளர்களும், இயக்குனரும் கலந்து பேசி அதை இன்று முதல் திரையரங்குகளில் நீக்கி விடுவதென முடிவு எடுத்து விட்டனர். இந்த பிரச்சினை முடிந்துவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்து ஆதரவு தருமாறு தங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்” என்று அதில் நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

Latest News