MaayaOne Movie : ஹாலிவுட் பட தரம்.. சந்தீப் கிஷன் நடித்த ‘மாயாஒன்’ பட டீசர்!
Sundeep Kishan Movie : மாயாஒன் படத்தின் டீசர் நேற்று வெளியானது.
தெலுங்கில் அறிமுகமாகி படங்களை நடிக்கத் தொடங்கிய நடிகர் சந்தீப் கிஷன், யாருடா மகேஷ் படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். குறிப்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்த மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறியப்பட்டார். பின்னர் சில படங்களில் நடித்து வரும் சந்தீப் தனுஷின் மில்லர் படத்தில் நடித்தார். எதிர்வரும் தனுஷ் படமான ராயன் படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் நடித்த மாயாஒன் படத்தின் டீசர் நேற்று வெளியானது. ஹாலிவுட் தரத்தில் சூப்பர் ஹீரோ படமாக இது உருவாகி இருப்பது ட்ரெய்லரில் தெரியவருகிறது.