5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Amaran Trailer: 5 மொழி பிரபலங்கள் வெளியிட்ட அமரன் ட்ரெய்லர்.. எப்படி இருக்கு?

Sivakarthikeyan: தீபாவளி வெளியிடாக அக்டோபர் 31ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள அமரன் படம் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாகக் கொண்டது. ஏற்கனவே இந்த படத்தின் பாடல்களும், டீசரும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இப்படியான நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 23 Oct 2024 20:39 PM

அமரன் ட்ரெய்லர்: இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார், ராகுல் போஸ், புவன் அரோரா உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் அமரன். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளது. தீபாவளி வெளியிடாக அக்டோபர் 31ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள அமரன் படம் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாகக் கொண்டது.

ஏற்கனவே இந்த படத்தின் பாடல்களும், டீசரும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இப்படியான நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. நிச்சயம் இந்த படம் ரசிகர்களுக்கு பிடித்த ஒன்றாக இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அமரன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரை தமிழில் கமல்ஹாசன், மலையாளத்தில் டொவினோ தாமஸ், தெலுங்கில் நானி, கன்னடத்தில் சிவராஜ்குமார், இந்தியில் ஆமீர்கான் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

Latest Stories