5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

சிவகார்த்திகேயனின் ‘அமரன்’… முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமரன்’. இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். ‘ரங்கூன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்துக்கு, ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் ‘அமரன்’… முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு
அமரன்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Sep 2024 13:32 PM

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ’அமரன்’ படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்துவிட்டதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அவரது 21-வது படமான இதை, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸுடன் இணைந்து தயாரிக்கிறது. இதில் அவர் ராணுவ வீரராக நடிக்கிறார். அவர் ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் இது. பிற மாநிலங்களில் உள்ள தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்கள், காஷ்மீரி வீரர்கள், ‘விஸ்வரூபம்’ வில்லன் ராகுல் போஸ், புவன் அரோரா எனப் பலரும் நடித்துள்ளனர். தமிழில் மீண்டும் ஒரு தேசபக்தி படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழ் சினிமாவில் கால் பதிப்பதற்கு முன்னர் விஜய் டிவி வாயிலாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கான ஒரு அரியாசனத்தை ஏற்படுத்திக் கொண்டவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் போட்டியாளராக கலந்து கொண்டு அதன் பின்னர் அது இது எது நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மாறி அதற்கடுத்து விஜய் டிவியின் தவிர்க்க முடியாத தொகுப்பாளராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் சிவகார்த்திகேயன்.

சின்னத்திரையில் அறிமுகமாகி பிறகு வெள்ளித்திரையில் நுழைந்த சிவகார்த்திகேயன் இப்போது கோலிவுட்டின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக உள்ளார். விஜய் எப்படி சிறுவர்கள் சிறுமிகளை கவர்ந்து குடும்ப ரசிகர்களையும் கவர்ந்தாரோ அதே ஃபார்முலாவில்தான் சிவாவும் இப்போது பயணமாகிக்கொண்டிருக்கிறார். சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்த அயலான், மாவீரன் ஆகிய இரண்டு படங்களுமே அவருக்கு மிகச்சிறந்த வெற்றியை பெற்றுக்கொடுத்தன. அதிலும் அயலான் படம் கால தாமதமாக ரிலீஸ் ஆனாலும் ஏலியன் சப்ஜெக்ட்டை வைத்து படம் உருவாகியிருந்ததால் சிறுவர்கள் மற்றும் சிறுமியை வெகுவாகவே கவர்ந்துவிட்டது.

Also read… கார்த்தியின் ‘மெய்யழகன்’ படத்தின் `வெறி’ பாடலின் லிரிக்கல் வீடியோ இதோ

தொடர்ந்து காமெடியான ஜனரஞ்சகமான படங்களில் நடித்துவந்த சிவகார்த்திகேயன் அதன் பின்னர் கொஞ்சம் சீரியஸான படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது சிவகார்த்திகேயன் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துளார். இதுமட்டும் இல்லாமல் பாடல்கள் எழுதுவது, பாடல்கள் பாடுவது மற்றும் படங்கள் தயாரிப்பதிலும் சிவகார்த்திகேயன் ஈடுபட்டு வருகின்றார். இவர் தயாரித்து நடித்திருந்த கனா திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பைப் பெற்றது.

இந்த நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமரன்’. இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். ‘ரங்கூன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்துக்கு, ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படம் தீபாவளி பண்டியை முன்னிட்டு வரும் அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ராஜ்கமல் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ரூ.55 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியானது. சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் இதுவே அதிக தொகைக்கு விற்பனையாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Latest News