5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

“நான் சினிமாவிற்கு வர காரணமே சிம்பு தான்”.. பிரபல நடிகர் சொன்ன கதை!

Actor Santhanam : தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் நடிகர் சந்தானம். இவர் பல திரைப்படங்களில் துணை நடிகராகவும் மற்றும் நகைச்சுவை நடிகராகவும் நடித்து தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் . நடிகர் சந்தானம் எப்படி சினிமாவிற்கு வந்தார் என அவரே கூறியுள்ளார்.

“நான் சினிமாவிற்கு வர காரணமே சிம்பு தான்”.. பிரபல நடிகர் சொன்ன கதை!
கோப்பு புகைப்படம்
Follow Us
barath-murugantv9-com
Barath Murugan | Updated On: 02 Oct 2024 18:08 PM

தமிழ்த்திரையுலகில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சந்தானம். இவர் தமிழில் தனியார் தொலைக்காட்சியில் “லொள்ளு சபா” என்ற புகழ்பெற்ற நகைச்சுவை தொடர் ஒன்றில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் . இதற்கு முன் “டீ கடை பெஞ்சு” மற்றும் சகலை VS ரகளை போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக நிகழ்ச்சிகளை நடத்தினார் . பின் 2004ல் ஏ.ஜெ.முருகன் இயக்கத்தில் மற்றும் நடிகர் சிலம்பரசன், ஜோதிகா மற்றும் கவுண்டமணி நடிப்பில் வெளியான மன்மதன் திரைப்படத்தில் தான் அறிமுகமானார்.

ஆனால் இந்த திரைப்படத்திற்கு முன் “பேசாத கண்ணும் பேசும் மற்றும் காதல் அழிவதில்லை” போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மன்மதன் திரைப்படத்தில் இவர் செய்த காமெடி மற்றும் நடிப்பு இவருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை இவருக்குத் தந்தது.

இப்படத்தில் இவர் செய்த காமெடிகள் இன்று வரை இணையத்தில் மக்கள் மத்தியில் ரசிக்கப்பட்டு வருகிறது. மன்மதன் திரைப்படத்தின் மூலம் இவருக்குக் கிடைத்த வெற்றியை அடுத்துப் பல திரைப்படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகளைக் கிடைக்கச் செய்தது .

இதையும் படிங்க :அதே ஜோடி.. தளபதி 69 நாயகி இவங்கதானா? வெளியான நியூ அப்டேட்..!

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் “இதய திருடன், சச்சின், உனக்கும் எனக்கும் மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன்” போன்ற திரைப்படங்கள் இவருக்குத் தொடர் வெற்றி திரைப்படங்களாக அமைந்தது. இதையடுத்து 2011ல் இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான “ஒரு கல் ஒரு கண்ணாடி” என்ற திரைப்படத்தில் பார்த்தசாரதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகமான முதல் திரைப்படம்தான் இது. இந்த திரைப்படத்தில் உதயநிதிக்கு நண்பனாக நடித்து தனது இயல்பான தோற்றத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த திரைப்படத்தில் இவர் செய்யும் ஒவ்வொரு காமெடி வசனங்களும் அதை அவர் டெலிவரி செய்யும் விதமும் மிகவும் அருமையாக இப்படத்திலிருந்து.

இதையும் படிங்க :வசூல் வேட்டையில் ’மெய்யழகன்’.. 5 நாட்களில் எவ்வளவு கலெக்‌ஷன் தெரியுமா?

நடிகராக அறிமுகம் :

இவர் நகைச்சுவை நடிகரிலிருந்து நடிகராக முதலில் அறிமுகமான திரைப்படம் தான் “இங்க என்ன சொல்லுது” இயக்குநர் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் 2014ல் இந்தத் திரைப்படமானது வெளியாகியது. இந்த திரைப்படத்தில் சந்தானம், வி.டி,வி கணேஷ் மற்றும் நடிகை மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார்.

இப்படமானது மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைத் தரவில்லை. இதைத் தொடர்ந்து “வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம், இனிமேல் இப்படித்தான், சக்கைப்போடு போடு ராஜா போன்ற திரைப்படங்கள் கடும் தோல்வியை அளித்தது. இவர் நடித்ததில் தில்லுக்கு துட்டு மற்றும் தில்லுக்கு துட்டு 2 போன்ற திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை மக்களிடையே  தந்தது.

இதையும் படிங்க :அட்லி இயக்கத்தில் உருவாகும் அடுத்த திரைப்படம்.. ஹீரோ யாரு தெரியுமா..?

இதைத்தொடர்ந்து நடிகர் சந்தானம் ஒரு தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் “நடிகர் சிலம்பரசன் (சிம்பு) தான் நான் சினிமாவிற்கு வருவதற்கான காரணம் எனவும் அவரின் மன்மதன் திரைப்படத்தின் மூலம் தான் என்னை முதலில் திரைக்கு அறிமுகம் செய்தார் அடுத்தடுத்து அவரின் திரைப்படத்தில் நடிப்பதற்காக அவர் தான் காரணம்” எனவும் கூறியுள்ளார்.

ஒரு தடவை சிம்புவை நேரில் சந்திக்கும் போது கூறினார் “என் நடிகரான எங்க கூடவே நகைச்சுவை நடிகராகவே இருந்திருக்கலாம், என் படத்தில் மறுபடியும் நடிக்க வா” என்று சிம்பரசனும் கூறினார் என்று நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.

இவர் நடிப்பில் கடந்த மே மாதத்தில் வெளியான “இங்க நான் தான் கிங்கு” என்ற திரைப்படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தற்போது இவர் அடுத்த திரைப்படத்தில் நடிப்பதற்குத் தயாராகி வருகிறார் எனத் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதையும் படிங்க :3 நாட்கள்.. ’தேவரா’ படத்தின் வசூல் இத்தனை கோடிகளா?

Latest News