இணையத்தை கலக்கும் ‘வேட்டையன்’படத்தின் முதல் விமர்சனம்!
அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் போலி என்கவுண்டருக்கு எதிரான கதைக்களம் கையாளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கல்விக் கொள்கைக்கு ஆதரவான பல கருத்துக்களும் இந்த படத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் ரஜினிகாந்த் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த நடிப்பில் உருவாகியுள்ள ‘வேட்டையன்’ படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி கோலிவுட் வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது. ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். கூட்டத்தில் ஒருத்தன், ஜெய் பீம் ஆகிய படங்களை இயக்கிய ஞானவேல் இப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. தென் மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு மும்பை ராஜஸ்தான் பகுதிகளில் நடைபெற்றதை தொடர்ந்து படம் தற்போது அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் போலி என்கவுண்டருக்கு எதிரான கதைக்களம் கையாளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கல்விக் கொள்கைக்கு ஆதரவான பல கருத்துக்களும் இந்த படத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் ரஜினிகாந்த் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த், வேட்டையன் திரைப்படத்தில் இஸ்லாமியராக நடிப்பதாக கூறப்படுகிறது. ரஜினி, ஏற்கனவே லால் சலாம் படத்தில் இஸ்லாமியராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஆந்திரா மாநிலம், கடப்பாவில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு சூட்டிங்கினை முடித்துவிட்டு, இமயமலைக்கு ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பின்னர் பத்ரிநாத், கேதார்நாத் உள்பட பல்வேறு இடங்களுக்கு அவர் சென்று வந்தார். முன்னதாக மஞ்சுவாரியர், அபிராமி, துஷாராவைத் தொடர்ந்து ரித்திகா சிங் உட்படப் பலரும் டப்பிங் பேசிவிட்டனர். ரஜினி, கூலி படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால், அதில் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் வேட்டையன் படத்திற்கு டப்பிங் பேசுவார் என கூறப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் டப்பிங் பணியை முடித்தார்.
Also read… Theatre Release Movies: மெய்யழகன் முதல் தேவாரா வரை… தியேட்டரில் வரிசைக்கட்டும் புதுப் படங்கள்
படம் பற்றிய அறிவிப்பு வெளியான சில மாதங்களில் படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. அதனைப் பார்த்தபோதே இந்தப் படம் கமர்ஷியல் ரீதியாகத்தான் உருவாகுமோ என்று சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்பினார்கள். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் வேட்டையன் டீசரும் வெளியிடப்பட்டது. அதனைப் பார்க்கையில் இந்தப் படம் முழுக்க முழுக்க ஞானவேலுவின் ஸ்டைலில் இல்லாமல் ரஜினிக்காக கமர்ஷியல் பேக்கேஜாக உருவாகியிருப்பது உறுதியானது.
இந்த நிலையில் கடந்த 20-ம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைப்பெற்றது. இந்த விழாவில் ரஜினி போசியது கோலிவுட்டில் தற்போது வைரலாகி வருகின்றது. அவர் பேசியதாவது, “சகுனிகள் இருக்கிற இந்த சமுதாயத்தில் நல்லவனா இருந்தா பிழைக்க முடியாதுங்க. கொஞ்சம்ன் சாணக்கியத்தனமும், சாமர்த்தியமும் வேணும். உங்ககிட்ட சாணக்கியத்தனமும் இருக்கு, சாமர்த்தியமும் இருக்கு என்று இயக்குநர் ஞானவேல் குறித்து பேசியுள்ளார்.
Also read… கோலிவுட் சினிமாவின் டாப் நடிகை தான் இந்த சிறுமி… உங்களுக்கு தெரியுதா?
ரஜினி பட ஆடியோ வெளியீட்டு விழா என்றாலே அவர் சொல்லும் குட்டி கதைக்காக ரசிகர்கள் காத்திருப்பதுண்டு. அந்தவகையில் வேட்டையன் இசை வெளியீட்டு விழாவிலும் ரஜினிகாந்த் ஒரு குட்டி கதை சொல்லியிருக்கிறார். அந்த கதையும் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி கோலிவுட் வட்டாரத்தை கலக்கி வருகின்றது.
அதாவது பிக்பாஸில் கலந்துகொண்டு புகழடைந்த அபிஷேக், ‘வேட்டையன் படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. ஃபகத் பாசில் வடிவேலு மாதிரி டிராக் காமெடியெல்லாம் செய்திருக்கிறாராம். படத்தை பார்த்துவிட்ட ரஜினிகாந்த்துக்கு உச்சக்கட்ட மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறதாம்’ என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் அபிஷேக் இப்படி சொன்னதில் எந்த அளவுக்கு உண்மை என்பது படம் பார்த்த பிறகுதான் தெரியும்.