Vettaiyan : திருவிழா போல களைகட்டும் ரஜினியின் வேட்டையன்..!
Vettaiyan : ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் இன்று வெளியானது. இன்று வெளியான வேட்டையன் திரைப்படத்தை மக்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். நடிகர் ரஜினியின் தீவிர ரசிகர்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிக்காட்டும் விதமாகத் திரையரங்குகளுக்கு முன் வைக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினியின் பேனர்களுக்கு மற்றும் உருவப் படங்களுக்கு பாலாபிஷேகம் செய்து தங்களின் மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர்.
வேட்டையன் : நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர், லால் சலாம் படங்களைத் தொடர்ந்து அடுத்து நடித்துள்ள புதிய படம் ‘வேட்டையன்”. இப்படத்தை ஜெய் பீம் படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஞானவேல் இந்த ஆக்ஷன் த்ரில்லரை இயக்கியுள்ளார்.இந்த திரைப்படத்தைப் பிரபல தயாரிப்பு நிறுவனம் லைகா தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் அமிதாப்பச்சன், ராணா, மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில், ரித்திகா சிங், துசாரா விஜயன் போன்ற நட்சத்திர நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் அக்டோபர் 10 தேதியான இன்று திரையரங்குகளில் வெளியாகியது. இந்த திரைப்படமானது தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், இந்தி, தெலுங்கு ,மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் இன்று வெளியாகியது. இன்று வெளியான வேட்டையன் திரைப்படத்தை ரஜினியின் ரசிகர்கள் ஆரவாரமாகக் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க :Vettaiyan Review: ரஜினியின் வேட்டையன் மிரட்டலா? சொதப்பலா? – விமர்சனம் இதோ!
வேட்டையன் திருவிழா :
இந்த திரைப்படமானது “ப்ரீ புக்கிங்கில்” பல கோடிகளுக்கும் மேல் வசூல் செய்துள்ளது. தற்போது இன்று வெளியான முதல் நாளில் சும்மா 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என்ன எதிர்பார்க்கப்படுகிறது. வேட்டையன் திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் அனிரூத் இசையமைப்பில் வெளியான எல்லா பாடல்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகியது. அதோடு இந்த திரைப்படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் ரஜினியின் ஸ்டெப்ஸ் போட்ட ‘மனசிலாயோ’ பாடல் இன்னும் ட்ரெண்டிங்கில் உள்ளது.
இன்று வெளியான வேட்டையன் திரைப்படத்தை மக்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். நடிகர் ரஜினியின் தீவிர ரசிகர்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிக்காட்டும் விதமாகத் திரையரங்குகளுக்கு முன் வைக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினியின் பேனர்களுக்கு மற்றும் உருவப் படங்களுக்கு பாலாபிஷேகம் செய்து தங்களின் மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர். தற்போது தமிழ்நாடு மட்டுமில்லாமல் கேரளாவிலும் தொடர்ந்து வெளியான இந்த திரைப்படத்தைக் கொண்டாடும் வகையில் ரஜினியின் கேரளா ரசிகர்களும் தங்களின் ரசிகர் தன்மையை வெளிக்காட்டும் வகையில் ரஜினியின் உருவப் பேனர்களுக்குப் பால் அபிஷேகம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க :Vettaiyan Movie Release: ரஜினியின் வேட்டையன் படத்தை ஏன் பார்க்க வேண்டும்? – இதைப் படிங்க!
This is not Tamilnadu This is Kerala… Vettaiyan MEGA BLOCKBUSTER #Vettaiyan pic.twitter.com/JnKX6iePXq
— $hyju (@linktoshyju) October 10, 2024
மதுரை லா booking இல்லைங்க னு கதறுன பயலுகளுக்கு இந்த video சமர்ப்பணம் 😂
என்ன கொடி பறக்குதா 🔥🔥💪#VettaiyanBlockbuster #Vettaiyan #superstarrajinikanth pic.twitter.com/TqJ7stttPa
— Mani (@Mani74261081) October 10, 2024
இதனையடுத்து மதுரையில் திரையரங்குகளில் முன்பாக ரசிகர்கள் திருவிழாவைக் கொண்டாடுவது போல் ஆட்டம் , பாட்டம் , கொண்டாட்டமாகக் கொட்டும் மேளசத்தத்துடன் ரஜினியின் ரசிகர்கள் வேட்டையன் திரைப்படத்தை கொண்டாடி வருவகின்றனர். அந்த திரையரங்குகளுக்கு முன்பு பெரிய நுழைவுவாயில் மற்றும் பிரமாண்டமான நடிகர் ரஜினியின் உருவப் பேனர்களுக்குப் பெரிய மாலை அணிவித்து ரசிகர்கள் கொண்டாடும் “வேட்டையன் திருவிழாவாக” இந்த திரைப்படம் அமைந்துள்ளது.
இதையும் படிங்க :The Greatest of All Time: பட்டைய கிளப்பிய கலெக்ஷன்.. கோட் படத்தின் மொத்த வசூல் இவ்வளவா?
ரசிகர்களின் கருத்து :
தற்போது வெளியான இந்த திரைப்படத்தில் தனது பாடல்கள் மூலம் படங்களின் ஹைப்பை உயர்த்தி வரும் அனிருத், ‘வேட்டையன்’ படத்திற்கு இசையமைத்துள்ளார் என்றும் இந்த வரிசையில் தான் அனிரூத் தனது பிஜிஎம்மை சிறப்பாகச் செய்துள்ளதாக கமெண்ட்கள் வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் வெளியான படங்களில் சிறந்த முதல் பாதியில் ஒன்றான, சமூக செய்தியுடன் கூடிய குற்ற விசாரணை திரில்லர் கதையான வேட்டையன் இயக்குநர் ஞானவேல் அற்புதமாக இயக்கியுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில் ரஜினியின் படத்திற்கு எல்லா இடங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த திரைப்படம் கண்டிப்பாக வெற்றியைத் தரும் என்றும் மற்றொருபக்கம் இந்த திரைப்படம் ஹைப் ஏற்றும் விதத்தில் தங்களது கருத்துக்களை ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில் வேட்டையன் பல திரையரங்குகள் வசூல் வேட்டையாடி வருகிறது. தற்போது நடிகர் ரஜினியின் ரசிகர்கள் தங்களின் மகிழ்ச்சியை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க :Vettaiyan: முன்பதிவில் சாதனை.. அசால்ட்டாக வேட்டையாடும் ரஜினியின் வேட்டையன்!