5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

தியேட்டரில் மிஸ் பண்ணிடீங்களா அப்போ ஓடிடியில் மிஸ் பண்ணிடாதீங்க – சூர்யா’ஸ் சாட்டர்டே ஓடிடி அப்டேட்

கடந்த ஆண்டு நானிக்கு சக்சஸ்புல்லாக அமைந்த நிலையில், இந்த ஆண்டு முதல் பாதியில் அவர் நடிப்பில் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாமல் இருந்தது. அதன்பின்னர் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் தான் அவரின் சரிபோதா சனிவாரம் என்கிற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இப்படம் தமிழில் சூர்யாஸ் சாட்டர்டே என்கிற பெயரில் வெளியிடப்பட்டது.

தியேட்டரில் மிஸ் பண்ணிடீங்களா அப்போ ஓடிடியில் மிஸ் பண்ணிடாதீங்க – சூர்யா’ஸ் சாட்டர்டே ஓடிடி அப்டேட்
சூர்யா’ஸ் சாட்டர்டே
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Sep 2024 18:16 PM

நடிகர்கள் நானி மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த சூர்யா’ஸ் சாட்டர்டே படத்தின் வெளியீட்டு தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது. நேச்சுரல் ஸ்டார் நானி, நாயகனாக நடித்துள்ள படம், ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’. விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ள இதில் எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன், அபிராமி, அதிதி பாலன் உட்பட பலர் நடித்துள்ளனர். டிவிவி என்டர்டெய்ன்மென்ட் சார்பில் டிவிவி தனய்யா, கல்யாண் தாசரி தயாரித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் ஆகஸ்ட் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தெலுங்கில் முதன்மையாக உருவாகியிருந்தலும் படம் தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தில் பல தமிழ் நடிகர்கள் இருந்ததால் குறிப்பாக எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்தால் படம் பார்த்த தமிழ் ரசிகர்களுக்கு அது தமிழ் படம் போலவே தோன்றியதாகவும் தெரிவித்தனர்.

தெலுங்கு திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பவர் நானி. அவர் நடிப்பில் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன தசரா திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு 6 பிலிம்பேர் விருதுகள் கிடைத்தன. தசரா படத்தின் வெற்றிக்கு பின்னர்  நானி நடிப்பில் கடைசியாக வெளியான ஹாய் நானா திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படத்தில் நடிகர் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை.

கடந்த ஆண்டு நானிக்கு சக்சஸ்புல்லாக அமைந்த நிலையில், இந்த ஆண்டு முதல் பாதியில் அவர் நடிப்பில் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாமல் இருந்தது. அதன்பின்னர் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் தான் அவரின் சரிபோதா சனிவாரம் என்கிற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இப்படம் தமிழில் சூர்யாஸ் சாட்டர்டே என்கிற பெயரில் வெளியிடப்பட்டது.

ஏதாவது பிரச்சனை என்றால், அந்த இடத்தில் முதல் ஆளாக நின்று அடிதடி, சண்டை, வெட்டு குத்து என்றும் இருக்கும் நானியை நினைத்து அவனது பெற்றோர்கள் கவலைப்படுகின்றனர். இப்படி கோவப்பட்டால் இவன் வாழ்க்கை என்னவாகும் என வருத்தப்படும் நானியின் அம்மா, வாரத்தில் ஒருநாள் மட்டும் கோபத்தை வெளிப்படுத்தும் படி, நானியிடம் சத்தியம் வாங்கி கொள்கிறார். சத்தியம் வாங்கியபிறகு அவரது அம்மா இறந்துவிடுகிறார். இதனால் அம்மாவுக்கு கொடுத்த சத்தியத்தை காப்பாற்றும் நானி, வாரம் முழுக்க என்ன பிரச்சனை வந்தாலும், அதை குறித்துவைத்துக்கொண்டு சனிக்கிழமை நாளில் மட்டும் அடக்கிவைத்த மொத்த கோவத்தையும் வெளிப்படுத்துகிறார்.

Also read… விஜயின் ‘கோட்’ படத்தின் 17 நாள் வசூல் எவ்வளவு? வைரலாகும் தகவல்

பல பிரச்னைகளை சமாளிப்பதற்காக நானியின் தந்தை அவரை வேறு ஊருக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு போலிஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் எஸ்.ஜே.சூர்யாவிற்கும் நானிக்கும் இடையே பிரச்னை உருவாகிறது. அதனை எப்படி சமாளித்தார் என்பதே படத்தின் கதை. கோட் பட வரவால் இப்படம் தமிழ்நாட்டில் பெரியளவில் சோபிக்காவிட்டாலும் தெலுங்கு ஆடியன்ஸ் மத்தியில் சூர்யாஸ் சாட்டர்டே திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்தது. இந்த படத்தில் நானியின் நடிப்பை விட எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பை அனைவரும் பாராட்டினர். படத்தின் வெற்றிவிழாவில் பேசிய நானி, நான் நடித்த படத்தில் என்னை விட எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு மிரட்டலாக இருந்தது என்று மனம் திறந்து பாராட்டினார்.

இந்த நிலையில் சூர்யாஸ் சாட்டர்டே திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற செப்டம்பர் 26-ந் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். தியேட்டரில் பார்க்க தவறியவர்கள் நிச்சயமாக ஓடிடியில் கண்டு மகிழுங்கள்.

Latest News